articles

img

2023: இந்துத்துவா- கார்ப்பரேட் ஆட்சியை ஒன்றுபட்டு நின்று முறியடித்திடுவோம்!

நடந்து முடியும் 2022ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கிறபோது, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மிகவும் மோசமாகச் சிக்கிக் கொண்டிருந்த பொருளாதாரச் சகதியிலிருந்து மீண்டெ ழுந்து வருவதற்காக அது மேற்கொண்ட போராட்டம் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதையே காட்டுகிறது. உயர்ந்துகொண்டிருக்கும் பணவீக்கம், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், தொழில் வளர்ச்சி தேக்கநிலை மற்றும் வருமானத்திலும் செல்வா தாரத்திலும் மக்களிடையே விரிவடைந்துகொண்டிருக்கும் சமத்துவ மின்மை நன்கு கண்ணுக்குப் புலப்படும் அம்சங்களாக மாறி இருக்கின்றன. இந்த ஆண்டு முடியும் தருவாயில், வேலையற்றோர் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டிவிட்டது. அநேகமாக ஆண்டு முழுவதுமே சில்லரைப் பணவீக்கம் என்பது 7 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே இருந்தது. இத்துடன் தொழில்வளர்ச்சி தேக்க நிலையும் சேர்ந்து கொண்டது. இதன் காரணமாக சென்ற அக்டோபரில் இருந்ததைக் காட்டிலும் 2022 அக்டோபரில் தொழில் உற்பத்தி அட்டவணை (IIP-Index of Industrial Production) 4 விழுக்காடுக்கும் கீழ் சென்றுவிட்டது.

ரூ.10 லட்சம் கோடி தள்ளுபடி

நாட்டில் மாபெரும் ஜாம்பவானாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான ஆயுள் இன்சூரன்ஸ் கழகத்தில் அரசின் பங்குகளை நீர்த்துப்போகச் செய்திடும் மிகப்பெரிய நடவடிக்கையுடன்,  பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதேபோன்றே மின்சார விநியோகத்தைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு வழிவகை செய்திடும் விதத்தில் மோடி அரசாங்கம்,  நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவந்திருப்பதும், மாநில அரசாங்கங்களின் கீழ் இயங்கிடும் மின்சார வாரியங்களின் செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையேயாகும். இதே சமயத்தில் பொதுத்துறை வங்கிகளில் பெரும் கார்ப்பரேட்டுகள் வாங்கிய 10.01 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

செல்வம் குவிக்கும் அதானி

மாகி இருப்பதற்குக் காரணமாகும். மக்கள் தொகையில் உயர் ஒரு விழுக்காட்டினர், 2021இல் நாட்டிலுள்ள மொத்த செல்வாதாரங்களில் 40.6 விழுக்காட்டிற்குச் சொந்தமாக இருக்கிறார்கள். இது 2000-இல் 32 விழுக்காடாக இருந்தது. இவ்வாறு அருவருக்கத்தக்க விதத்தில் செல்வம் குவிவதற்கு ஒரு சரியான உதாரணம், கௌதம் அதானி யாகும். இவர்தான் 2022இல் உலகின் மூன்றாவது பணக்காரராகவும், ஆசியாவின் முதல் பணக்காரராகவும் மாறியிருக்கிறார்.  இவருடைய இப்போதைய நிகரச் சொத்து 133 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) அமெரிக்க டாலர்களாகும். மேலும் 2022ஆம் ஆண்டானது இந்தியாவை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மாற்றியமைப்பதற்காக இந்துத்துவா சக்திகள் மேற்கொண்ட வெறித்தனமான நடவடிக்கைகளையும் பார்த்தது. பிரதமரே காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் மற்றும் பல்வேறு கோவில்களைப் புதுப்பிக்கும் வேலைகளுக்கும் தலைமை தாங்கி இருக்கிறார்.  நாட்டி லுள்ள அனைத்து இந்துக்களையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சி களினூடே, முஸ்லீம்களைத் “தனிமைப்படுத்துவதற்கான” வேலைகளும் தொடர்கின்றன. ராம நவமி மற்றும் புதிதாக கொண்டாடப்பட்டுவரும் அனுமான் ஜெயந்தி போன்ற மதப் பண்டிகைகளின்போது சிறுபான்மை யினர் குறிவைத்துத் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரு கின்றன. இத்தகைய தாக்குதல்களின்போது எங்கேனும் முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் கைது செய்யப்படுவதையும், அவர்களின் வீடுகள் இடித்துத்தரைமட்டமாக்கப்படுவதையும் மத்தியப் பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் பார்த்தோம்.

விடுதலை : அவர்களது பொருள் என்ன?

சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டு தினத்தை, ஆட்சியாளர்கள் ‘புதிய இந்தியா’ என்னும் தங்களின் சிந்தனையை முன்னிலைப்படுத்தப் பயன்படுத்திக் கொண்டார்கள். இது, இவர்களின் ‘இந்து பெரும் பான்மை அரசு’ என்கிற சிந்தனையை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒன்றே தவிர வேறல்ல. இவர்கள், “பலநூறு ஆண்டுகளாக இருந்த அந்நி யர்களின் தாக்குதல்களிலிருந்து விடுதலை”  என்றும்,  “காலனிய மனோபாவத்திலிருந்து விடுதலை” என்றும் பேசி வருகிறார்கள். இதன் பொருள் என்ன? அதாவது, பலநூறு ஆண்டுகளாக நடைபெற்ற முஸ்லீம் களின் ஆட்சியிலிருந்து விடுதலை என்பதே இதன் பொருளாகும். அதே போன்றே “காலனிய மனோபாவத்திலிருந்து விடுதலை” என்று இவர்கள் கூறும்போது, இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைக் கூறவில்லை, மாறாக முஸ்லீம் ஆட்சிக் காலத்தையே குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு 2022ஆம் ஆண்டு, இவர்கள் இந்துத்துவா மதவெறி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதுடன் நின்றுவிடவில்லை. இத்து டன் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறையின் மீதும், மாநிலங்களின் உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுப்பதை முடுக்கி விட்டிருப்பதையும் பார்த்தது.  பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், மாநில அரசாங்கங்களின் வரம்புக்குள் உள்ள விஷயங்களிலும் எவ்விதமான வெட்கமுமின்றி தலையிட்டதையும் 2022ஆம் ஆண்டு பார்த்தது. மேலும் ஆளுநர்கள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பதவியைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கு வேண்டிய நபர்க ளைத் துணை வேந்தர்களாக நியமிக்கவும், பல்கலைக் கழகங்களின் விவகாரங்களில் தலையிடவும் பயன்படுத்திக் கொண்டார்கள். மாநிலங்கள் கடன்கள் வாங்குவதற்கான உரிமைகளைப் பறித்திட புதிய வழிவகைகளையும் ஒன்றிய அரசு கண்டுபிடித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் மீது தாக்குதல்

தேர்தல் ஆணையத்தையும் மற்றும் பல அமைப்புகளையும் தங்க ளுக்குச் சாதகமாகத் தலையாட்டும் அமைப்புகளாக மாற்றியபின்னர், கடந்த இரண்டு மாதங்களாக உச்சநீதிமன்றத்தின் மீது தொடர்ந்து தாக்கு தல்களைத் தொடுத்து வந்ததையும் பார்த்தோம். ஒன்றிய சட்ட அமைச்சரே இவ்வாறு தாக்குதல் தொடுத்துள்ளார். தனிநபர் சுதந்திரம் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உச்சநீதிமன்றம் சரியான நிலையினை எடுத்ததானது, இந்துத்துவா அரசியலுக்கு எதிராக எவர் குரல் கொடுத்தாலும் அவர்களின் குடிமை உரிமைகளையும் ஜன நாயக உரிமைகளையும் பறித்துவந்த எதேச்சதிகார ஆட்சியாளர்க ளுக்கு எரிச்சலை அளித்திருக்கிறது.

உ.பி., குஜராத் தேர்தல் உணர்த்துவதென்ன?

2002ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா, குஜராத், இமாசலப்பிரதேசம் என ஏழு மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் நடந்ததைப் பார்த்தோம். இவற்றில் பாஜக, பஞ்சாப்பிலும், இமாச்சலப் பிரதேசத்திலும் தோல்வியைத் தழுவிய போதிலும் மற்ற ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள் ளது. மேலும் பாஜக, தில்லி மாநகராட்சிக்கான தேர்தலிலும் தோல்விய டைந்துள்ளது.  உத்தரப்பிரதேச தேர்தல் முடிவும் குஜராத் தேர்தல் முடிவும் நமக்கு முன்னறிவித்திருக்கும் எச்சரிக்கை என்ன? என்ன வென்றால், அங்கே விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாய நெருக்கடி, வறுமை போன் றவை இருந்தபோதிலும், மக்கள் மத்தியில் மதவெறி சித்தாந்தத்தைக் கொண்டு சென்றிருப்பதும், இந்துக்களை ஒருங்கிணைத்திருப்பதும், பாஜக-வினருக்கு இப்பிரச்சனைகள் அனைத்தையும் மீறி தேர்தலில் வெற்றி பெற வைத்திருக்கிறது என்பதேயாகும்.

இந்துத்துவாவுக்கு எதிரான  ஒருங்கிணைந்த பிரச்சாரம்

இது, மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும், தனியார் மயத்திற்கு எதிரான போராட்டத்தையும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான கொள் கைகளுக்கு எதிரான போராட்டங்களையும், இவற்றுடன் இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும் ஒருங்கிணைத்திட வேண்டியது அவசியம் என்பதையே அடிக்கோடிட்டிருக்கிறது.

தொடர் போராட்டங்கள்

2022ஆம் ஆண்டு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்க ளின் இதர பிரிவினரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்திய எதிர்ப்பு  நடவடிக்கைகள் அதிகரித்திருந்ததையும் பார்த்தது. மார்ச் 28-29 தேதி களில் மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க நடந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றது. முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்களும், ஊழியர்களும் இவ்வேலை நிறுத்த நடவடிக்கையில் பங்கேற்றார்கள். எஸ்கேஎம் என்னும் சம்யுக்த கிசான் மோர்ச்சா நடத்திடும்   வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையான சி2+50 விழுக்காட்டுடன் கூடிய அடிப்படையில் வேளாண் விளைபொருள்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட அங்கீகாரத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று ஆண்டுகள் போராட்டங்களைச் சீர் குலைத்தபின்னர், மாணவர்களும் ஆசிரியர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் மற்றும் கல்வியின் மீது ஏவப்பட்டுள்ள பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களுக்குத் தயாராகி இருக்கிறார்கள்.   

பேரழிவை ஏற்படுத்தும் மின் மசோதா

மேலும் நாடு தழுவிய போராட்டத்திற்கான முக்கியமான பிரச்சனை களில் மற்றும் ஒன்று,  மின்சார (திருத்தச்) சட்டமுன்வடிவாகும். இது நிறை வேற்றப்பட்டால், விவசாயிகள் உட்பட சாமானிய மக்களுக்கும், மின்சார வாரியங்களில் பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் பொறியாளர்களுக்கும் பேரழிவினை ஏற்படுத்திடும். 2023, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் உள்ள மிகமுக்கியமான ஆண்டாகும். இந்த ஆண்டில், அனைத்து இடதுசாரி சக்திகளும், ஜன நாயக சக்திகளும் மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியை முறியடித்திடும் வகையில் ஒன்றுபட வேண்டும், மக்களை அணிதிரட்ட வேண்டும்.

டிசம்பர் 28, 2022, 
தமிழில்: ச.வீரமணி