மகத்தான தலைவர் தோழர் சங்கரய்யா அவர்கள் நூற்றாண்டை நிறைவு செய்து 101 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மாநில அளவில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அணிகளுக் கும் ஜனநாயக இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய பெருமை தரக்கூடிய ஒன்றாகும். தோழர் என்.எஸ் அவர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவா னந்தம், பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், ஏ.நல்லசிவன் போன்ற முதல் தலைமுறை கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்க ளோடு இணைந்து பணியாற்றியவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்றச் செய்த தலை வர்களில் ஒருவர். பல்வேறு தலைவர்களை உரு வாக்கிய தலைவர்.
தோழர் என்.எஸ். அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படிக்கின்ற போது இறுதித் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னாளில் அதுபற்றி அவரைச் சந்தித்து நான் உரையா டியபோது அவரிடம் கேட்டேன், “உங்கள் தந்தை நீங்கள் வழக்கறிஞராக வரவேண்டும் என்று கருதி னார். ஆனால் பட்டப்படிப்பு இறுதித் தேர்வு கூட எழுத முடியாமல் ஆகிவிட்டதே. அப்போது அந்நியர் ஆட்சி முடிந்து எப்போது விடுதலை செய்வார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை. உங்களை கைது செய்து வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்கிற போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?” அதற்கு நாட்டு விடு தலைக்காக, சுதந்திரத்திற்காகச் சிறை செல்கி றோம் என்பதுதான் எனக்கு உந்து சக்தியாக இருந்தது என்றார் அவர்.
தோழர் என்.எஸ். அவர்களைப் போன்று எண்ணி லடங்கா சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ணீரும், செந்நீரும் சிந்திப் போராடிப் பெற்ற சுதந்திரத்திற்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தமாதம் 15 ஆம் தேதி 75ஆவது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடவுள்ளது. ஆனால் சுதந்திரத் போராட்டக் காலத்தில் இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று மக்களுடைய எதிர்பார்ப்புகளை யெல்லாம் ஒன்றிய மோடி அரசு தகர்த்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டம் உருவானபோது மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு பொருளாதாரக் கொள்கை போன்ற விழுமியங்களை உள்ளடக்கியதாக அரசி யல் சட்டம் அமைந்தது. இதுதான் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களுடைய கனவு. அந்தக் கனவை பாஜக தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சி அழித்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மேற்கண்ட நான்கு தூண்களையும் ஒவ்வொன்றாக மோடி அரசு இடித்து வருகிறது.
கோவையில் 1997ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு, கலவரம் என அமைதி குலைந்து மக்கள் அல்லல் பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் சங்கரய்யா கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். “கோவையில் சமீப காலமாக நடைபெற்று வரும் வகுப்புக் கலவரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிதும் கவலை கொள்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் கேந்திரமான இடம் கோயம் புத்தூர். நாட்டு மக்கள் நல்வாழ்வு நடத்த வழிகாட்ட வேண்டிய கோவையில் மதவாத சக்திகள், பழமை வாத சக்திகள், இரு பக்கமும் உள்ள மிகப் பிற்போக்கு வாத சக்திகள் மக்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட முயற்சிக்கின்றன. அவற்றை தமிழக அரசு சட்டத்தின் மூலம் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியோடு திராவிடக் கட்சிகளும் இணைந்து இந்த வகுப்புக் கலவரத் தீயை அணைக்க முன் வர வேண்டும்.
“தமிழ்நாட்டில் சாதிய மத மோதல்களை உரு வாக்குவோர் யாராக இருந்தாலும் அவர்கள் தொழி லாளி வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்யும் கும்பல் என்பதை அடையாளம் கண்டு, அவர்களது முயற்சிகளை முறியடிக்க வேண்டி யது ஒவ்வொரு தேசபக்தனின் கடமை, ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமை, ஒவ்வொரு மனிதாபிமா னியின் கடமை, ஒவ்வொரு இடதுசாரியின் கடமை, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமை, ஒவ்வொரு மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரின் கடமை என்று கூற விரும்புகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அன்றைய அகில இந்திய தலைவர்கள் ஹர்கிசன் சிங் சுர்ஜித், ஏ.பி.பரதன் அவர்க ளும், இன்றும் நம்முடன் வாழ்கின்ற தமிழக தலை வர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு அவர்களும் வகுப்பு வாதத்தை முறியடிக்க வேண்டுமென்றும், மதநல்லி ணக்கம், மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டு மென்றும் கோவை மாநகரில் ஒன்று கூடி சூளுரைத் தார்கள். ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் - பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளும் மோடி தலைமை யிலான ஒன்றிய அரசும் நாட்டில் பல மாநிலங்களில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதற்கு மத மோதல்களை உருவாக்கி வருகிறது.
அண்மையில் அந்தமான் தீவில் டிக்ளிப்பூர் என்ற பகுதியில் மாட்டிறைச்சியை உண்டார் என்பதற்காக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுடைய கடையை சங்பரிவாரங்கள் சூறையாடியுள்ளன. இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்கக்கூடிய நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்யவில்லை. ஆனால் அவருடைய இழிவான பேச்சினை ஆட்சே பித்த சிறுபான்மை மக்கள் கைது செய்யப்படுகிறார் கள், தாக்கப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படு கிறார்கள். வகுப்புவாதத்தை அம்பலப்படுத்தி மத நல்லிணக்கத்தைப் பதிவிடக் கூடிய இணையதள பத்திரிகையின் ஆசிரியர் ஜூபைர் முகமது கைது செய்யப்படுகிறார். அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய, இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதுகுறித்து ஒரு தீர்ப்பில், நாடு முழுவதும் வன்முறையை, கலவரத்தை உருவாக்குவதற்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் தான் பொறுப்பு என்று நூபுர் சர்மாவை உச்சநீதிமன்றம் கண்டித்தது. மேலும் அவர் மீது போடப்பட்ட எப்ஐஆரை இதுவரையில் தில்லி போலீஸ் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை என்று தன்னுடைய அதிருப்தியை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் குற்றம் சாட்டினார்கள். ஆயினும் அமித்ஷா தலைமையிலான தில்லி போலீஸ் இதுவரையில் நூபுர் சர்மாவை கைது செய்ய வில்லை.
தில்லி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த வர்களுடைய கடைகளும், வீடுகளும் புல்டோசர்க ளால் இடிக்கப்படுகின்றன. இத்தகைய வன்முறை குறித்தும் உச்சநீதிமன்றம் இடித்துரைத்த அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ இதுவரை வாய்திறக்கவில்லை. இது ஒரு கள்ள மவுனம். இந்துராஷ்டிரா என்ற தங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கு ஒன்றிய அரசை எதிர்த்து பாஜகவின் வகுப்புவாதத்தை எதிர்த்து குரல் எழுப்பு பவர்களை கைது செய்வதும், ஜாமீனில் வெளிவர முடி யாமல் சிறையில் அடைத்து வைப்பதும் எதிர்க்கட்சித் தலைவர்களை அமலாக்கப்பிரிவு, சிபிஐ, என்ஐஏ போன்ற ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறு வனங்களால் அச்சுறுத்தப்படுவது, கைது செய்யப் படுவது தொடர்கிறது.
மேலும் மத்தியில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்க ளிலும் பாஜக அதிகாரத்திற்கு வந்தால் தான் இந்து ராஷ்டிரா என்ற தங்களது இலக்கை அமலாக்க முடியும் என்ற நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்த்து வருகிறது. மத்தியப்பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், கோவா கடை சியாக மகாராஷ்டிரா, கோவா என்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து நாடு முழுவதும் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது. மதங்களுக்கு அப்பாற் பட்ட ஒன்றிய அரசு, அதனுடைய பிரதமர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது.ஆனால் மோடியோ அதற்கு நேர் எதிர். மொத்தத்தில் மோடி அரசாங்கம் இந்தியக் குடியரசின் தன்மையையே மாற்றி வருகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்திலும் சுதந்திரத்தி ற்குப் பிறகும் சுமார் எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்த தோழர் சங்கரய்யா அவர்களின் 101ஆவது பிறந்த நாள் இன்று. இன்றைய தினத்தில் தோழர் சங்கரய்யா அவர்கள் இப்போதும் உயர்த்திப்பிடிக்கும் தேச ஒற்றுமை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சுயச்சார்பு பொருளாதாரக் கொள்கை ஆகிய விழுமியங்களுக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற, மக்கள் ஒற்றுமையுடனும், அமைதியுடனும், சமச் சீரான வளர்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதே தோழர் சங்கரய்யா போன்ற விடுதலைப் போராட்ட வீர்களின் கனவாக இருந்தது. இருக்கிறது. அதை நிறை வேற்றுவது நம்முடைய கடமையாகும்.
கட்டுரையாளர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்