articles

img

பட்ஜெட் யாருக்காக? -

இந்தியாவும் உலகமும் பொருளாதார நெருக்க டியில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத் தில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட விருக்கிறது. இந்தியாவின் பொருளாதா ரம் குறித்து மோடி அரசாங்கம் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், கோவிட் பெருந்தொற்றால் கடும் நெருக்க டிக்குள்ளான நாட்டின் பொருளாதாரம், ஆட்சியாளர்கள் சரிவரக் கையாளத் தெரியாத காரணத்தால் இன்னமும் மீள முடியாமல் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கிறது. கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், உலகப் பொருளாதார நிலை, உக்ரைன் - ரஷ்யா ராணுவ மோதல் காரணமாகவும், மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்ததன் காரணமாகவும் மேலும் மோசம் அடைந்தது. இந்தி யாவும், நவீன தாராளமய உலகமயக் கொள்கை களைப் பின்பற்றிவருவதன் காரணமாக உலக முதலாளித்துவ நெருக்கடி தீர்வதற்கான வழியில்லை. இந்தியாவின் பொருளாதார நிலையிலும், இந்த  முரண்பாடுகளுடன், விவசாய நெருக்கடி, ஊதியத்தில் உயர்வு இல்லாமல் தேக்க நிலை ஏற்பட்டிருப்பது, வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருப்பது ஆகியவற்றுடன் சேர்ந்து மேலும் அதிகமாகி, வேலை யிலிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தைக்கூட மேலும் உக்கிரமாக சுரண்டக்கூடிய நிலைக்கு இட்டுச் சென்றி ருக்கிறது. நாட்டில் சமத்துவமின்மையை மேலும் அதி கரித்திருக்கிறது.

தனிநபர் வருமானம் வீழ்ச்சி

தற்சமயம் வெளியாகியிருக்கும் முதல் மதிப்பீடு களின்படி, இந்தியாவில் உண்மையான தேசிய தனிநபர் வருமானம் (real per capita national income), 2019-20 கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பிருந்த அளவைக் காட்டிலும் வெறும் 2.4 விழுக்காடு அளவிற்குத்தான் அதிகரித்திருக்கிறது. உண்மையில் இது, ஒவ்வோராண்டும் வளர்ச்சி விகிதம் குறைந்தது 1 விழுக்காடாவது இருக்க வேண்டும்.  இதே கால கட்டத்தில் பணவீக்க விகிதங்களில் கூர்மையான உயர்வு ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் விலைவாசி மிகவும் அதிகரித்தது. தொழில்துறையில் இந்த நெருக்கடி மிகவும் மோசமாக எதிரொலித்தது. உற்பத்தித் துறையில் 2022-23இல் சென்ற ஆண்டைக் காட்டிலும் வெறும் 1.6 விழுக்காடுதான் அதிகரித்தி ருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுக ளுக்கு வெண்சாமரம் வீசும் மோடி அரசாங்கத்தின் வர்க்க சார்பு அணுகுமுறை காரணமாக இந்த நெருக்கடி யிலிருந்து மீள்வது என்பதும் சமமற்ற முறையில் இருந்து வருகிறது. 2019-20 மற்றும் 2022-23க்கு இடையேயான காலத்தில் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி(nominal GDP)யில் ஏற்பட்டுள்ள உயர்வைக்காட்டிலும் கார்ப்பரேட்டுகள் மற்றும் வரு மான வரிகளின் மூலம் வருவாய் அதிகரித்திருப்பதே இதற்கு நிரூபணமாகும். 

தீவிரமடையும் வேலையின்மை

கார்ப்பரேட்டுகளின் லாபப் பங்குகளும், வருமா னங்களும் உயர்ந்துள்ள போதிலும், அவர்கள் மீது விதிக்கப்படும் வரி விகிதங்களில் உயர்வு இல்லை. இதன் விளைவு, வருமானத்தில் ஒட்டுமொத்த தேக்க  நிலை ஏற்பட்டதால், உழைக்கும் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள். வேலையின்மை அதிகரித்திருப்பதன் காரணமாகவும், வேலையி லிருப்பவர்கள் வாங்கக்கூடிய ஊதியங்கள் குறைந்தி ருப்பதன் காரணமாகவும் நாட்டின் சராசரி வருமானம் என்பது 2019-20இல் இருந்ததைக் காட்டிலும் குறைந்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், மோடி அரசாங்கம் பொது செலவினத்தை அதிகரித்து, வேலை யின்றி இருந்த பல இலட்சம் இந்தியர்கள் இறப்பதைத் தடுத்திட, முன்வரவில்லை. இந்த நிலை 2022 நவம்பர் வரையிலும் நீடித்தது.

ஒன்றிய அரசாங்கத்தின் வரி வருவாய் 2019-20 இலிருந்ததை விட 2022-23இல் அதிகமாக இருந்தது. மேலும், ஒன்றிய அரசாங்கத்தின் வரிகளிலிருந்து மாநிலங்களுக்கான பங்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒன்றிய அரசாங்கம் வரி வருவாயில் அதிகமாக எடுத்துக் கொண்டுள்ளது. எனினும், இப் போதுள்ள போக்கு நீடிக்குமானால்,  ஒன்றிய அரசாங் கத்தின் செலவினம் 2019-20ஐக் காட்டிலும் குறைவாகவே இருக்கும். மேலும், நேரடி வரிகளிலிருந்தும் கூடுதல் வருவாயைப் பெற்ற போதிலும், எண்ணெய் வரிகளிலி ருந்தும் தொடர்ந்து கூடுதலாகப் பெற்றுவருகிறது. மோடி அரசாங்கத்தின் நிதிக் கொள்கை காரணமாக, அதிகரித்து வரும் சமத்துவமின்மையை சரிசெய்யக் கூடிய நிலை இல்லை. பொருளாதார மந்த நிலையைச்  சரிசெய்து அதனை ஊக்குவிக்கக்கூடிய நிலையும் இல்லை. பொருளாதார எதார்த்த நிலைமைகளை நன்றாகக் கண்களைத் திறந்து பார்க்க அரசு தயாராக இல்லை. இதனை நன்றாகவே நம்மால் பார்க்க முடி கிறது. கோவிட் பெருந்தொற்றை மோசமாகக் கையாண்டதன் காரணமாக  மனிதகுலத்திற்கு ஏற்பட்ட மாபெரும் துயரார்ந்த நிலையை சரிசெய்திட இப்போ தும் மோடி அரசு தயாராக இல்லை.

நிரந்தர வறுமையில்  தள்ளும் மோடி அரசு

இத்துடன் பொதுச் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது, பொதுச் சொத்துக்களை விற்று பண மாக்குவது, ராணுவம் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது இவை அனைத்தை யும்  “ஆத்மநிர்பார் பாரத்” (தற்சார்பு இந்தியா) என்ற பெயரில் செய்வது தொடர்கிறது. நாட்டின் சொத்துக்களை இந்தியாவில் உள்ள ஒரு சில பெரும் முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கு வழி வகை செய்திடும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறது. இதனை மூடிமறைப்பதற்காக அது மதவெறி அரசியல் ஆடையையும் அணிந்திருக்கிறது. உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் தொடரக்கூடிய நிலையே இருப்ப தால், இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம், அது உண்மையிலேயே சுயசார்பு பொருளாதாரத்தை மேற் கொள்வதையே சார்ந்திருக்கிறது. மோடி அரசாங்கம், இதனைச் செய்வதற்குப் பதிலாக, கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுப்பதற்குப் பதிலாக, தொழிலாளர் வர்க்கத்தைத் தண்டிக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களை என்றென்றும் வறுமையில் தள்ளும் வேலைகளில் இறங்கி இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டு மானால், உள்நாட்டுச் சந்தையை பெரிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும், அதற்கு வரிவிதிப்பு மற்றும் பொதுச் செலவினம் ஆகியவற்றை தொழிலாளர்க ளுக்கும், விவசாயிகளுக்கும் வருமானம் அளிக்கக் கூடிய விதத்திலும், அதன் மூலம் அவர்கள் தங்கள் தேவைகளை விரிவாக்கிக்கொள்வதற்கும், அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், அவர்கள் தங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லக்கூடிய விதத்தில்  ஏற்படுத்திட வேண்டும்.   நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன் களைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் ஒன்றிய பட் ஜெட்டை வடிவமைப்பதற்கான போராட்டத்தை நடத்திட இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி பூண்டுள்ளார்கள்.

(ஜனவரி 25, 2023).
 தமிழில் : ச.வீரமணி


 

;