articles

img

15 ஆண்டுகளில் 10 அமைச்சர்கள் ரயில்வேயில் என்ன செய்தார்கள்?

நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 10 ரயில்வே அமைச்சர்கள் மாறியுள்ளனர். ஆயினும் ரயில்வேயில் நடக்கும் விபத்துகளின் வரை படமோ தன்மையோ மாறவில்லை. ரயில்வே அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அடிக்கடி விபத்துகள் குறித்து ‘ஜீரோ டாலரென்ஸ்’ - அதாவது சகித்துக் கொள்ள மாட்டோம் என்று பேசுகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளாக ரயில்வேயில் விபத்து களைத் தடுக்க பல தொழில்நுட்பங்கள் பரிசீலிக்கப் பட்டு வருகின்றன. ஆனால் இன்றும் அத்தகைய தொழில்நுட்பத்திற்கான காத்திருப்பு தொடர்கிறது. 2022 மார்ச் மாதம் செகந்திராபாத் அருகே ‘கவச்’ தொழில்நுட்பத்தின் சோதனையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். இந்திய ரயில்வேயில் விபத்துகளைத் தடுக்க ’கவச்’ ஒரு மலி வான மற்றும் சிறந்த தொழில்நுட்பம் என்று அந்த  நேரத்தில் கூறப்பட்டது. ரயில் இன்ஜினில் சவாரி செய்த அமைச்சர் அதன் சோதனை வீடியோவையும் பதிவு செய்ய வைத்தார்.

‘கவச்’ என்றால் என்ன?

கவசம் எனப் பொருள்படும் ‘கவச்’ என்பது ஓர் உள்நாட்டு தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் இந்திய ரயில்வேயின் எல்லா பரபரப்பான வழித் தடங்களிலும் நிறுவப்படும் என்றும் இதனால் ரயில்  விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இத்தனைக்கும் பிறகு ரயில் விபத்து களைத் தடுக்க முடியவில்லை. இந்திய ரயில்வே வரலாற்றில் மிகப்பெரிய விபத்து, ஒடிசாவில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 290 பேர் உயிரி ழந்துள்ளனர். இதில் முக்கிய விஷயம் என்னவென் றால், எந்த மாதிரியான விபத்தைத் தடுக்க ‘கவச்’ உரு வாக்கப்பட்டதோ, அதே போன்ற விபத்துதான் ஒடிசா வில் நடந்துள்ளது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் பஹானாகா ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த சரக்கு  ரயில் மீது மோதியது. இதன் காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. ‘‘கவச்’ தொழில் நுட்பம் மூலமாக 400 மீட்டர் தூரத்தி லேயே ரயில்களை நிறுத்திவிடலாம் என்று ரயில்வே  அமைச்சர் கூறியிருந்தார்.

அந்தத் தொழில்நுட்பம் எங்கே போனது; எப்படி நடந்தது இந்தப் பயங்கரமான விபத்து என்று அவர் சொல்லவேண்டும்’’ என்று ரயில்வே குறித்து நீண்ட காலமாகச் செய்திகளை எழுதி வரும் மூத்த செய்தியாளர் அருண் தீட்சித் கூறுகிறார். ரயில்வேயின் முன்னாள் இணையமைச்சரும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் செளத்ரி இதேபோன்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். “அடிப்படைக் கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகி றேன். ரயில்வேயில் அலட்சியம் உள்ளது, இதன் விளை வை நாம் எதிர்கொள்கிறோம்,” என்கிறார் அவர். ஒடிசாவில் விபத்து நடந்த ரயிலில் ‘கவச்’ பொருத்தப் பட்டிருக்கவில்லை என்று இதுகுறித்து இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரி வித்தார். தில்லி-மும்பை மற்றும் தில்லி-கொல்கத்தா வழித் தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் திட்டத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாக வும், அதற்கு முன்பாக இந்த வழித்தடங்களில் தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மோதல் தடுப்பு கருவி

இந்தியாவில் 2  ரயில்கள் நேருக்கு நேர் மோது வதைத் தடுப்பதற்கான தீவிரப் பணி 1999-ஆம் ஆண்டு நடந்த கெய்சல் ரயில் விபத்துக்குப் பிறகு தொடங்கியது. அந்த விபத்தில், அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரம்மபுத்திரா மெயில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு இந்திய ரயில்வேயின் கொங்கன் ரயில்வே கோவாவில் ‘Anti Collision Device’ (மோதல் தடுப்பு கருவி) - அதாவது ‘ACT’ தொழில் நுட்பத்திற்கான பணியைத் தொடங்கியது. இதில் ரயில்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட் பத்தில் இயங்கும் கருவி பொருத்தப்பட இருந்தது. இத னால் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நெருங்கி வந்தால், சிக்னல் மற்றும் ஹூட்டர் மூலம், ரயிலின் ஓட்டுநருக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கும். மற்ற பாதையில் ஒரு ரயில் வந்தாலும் இந்த வழியில் சமிக்ஞைகள் கிடைக்கின்றன என்று பின்னர் கண்டறி யப்பட்டது. பிறகு விஜிலென்ஸ் கட்டுப்பாட்டுக் கரு வியை உருவாக்குவதன் மூலம் இதுபோன்ற விபத்து களைத் தடுப்பது குறித்தும் ரயில்வே பரிசீலித்தது. அதன் பிறகு ரயில்கள் மோதுவதைத் தடுக்க, ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு அல்லது TPWS, TCAS - அதாவது ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பும் பரிசீலிக்கப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து இந்த வகை தொழில் நுட்பத்தை வாங்குவது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. எனவே ரயில்வே தனது சொந்த தொழில் நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. இதையடுத்து ‘கவச்’ என்ற பெயரிலான உள்நாட்டு தொழில்நுட்பம் கடந்த ஆண்டு செயல்படத் தொடங்கியது. ரயில் விபத்தைத் தவிர்ப்பதே ஒவ்வொரு ரயில்வே அமைச்சரின் முன்னுரிமையாகப் பேசப்படுகிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட ரயில்வே அமைச்சர்கள் பதவிக்கு வந்த பிறகும் இந்தியாவில் ரயில் விபத்துகள் நிற்கவில்லை. ‘‘ஒவ்வோர் ஆண்டும் 500 ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் பணிபுரியும்போது உயிரிழக்கின்ற னர். இதுமட்டுமின்றி மும்பையில் தண்டவாளத்தைக் கடக்கும்போது தினமும் பலர் இறக்கின்றனர். ரயில்க ளின் வேகத்தை அதிகரிப்பதைவிட பாதுகாப்பை மேம்படுத்துவது ரயில்வேயின் முன்னுரிமையாக இருக்கவேண்டும்’’ என்று அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சிவ கோபால் மிஷ்ரா கூறுகிறார். “ரயில்வேயில் ரயில் விபத்துக்களைத் தடுப்பது குறித்துப் பல தசாப்தங்களாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. எந்த அரசும் இதில் தீவிரம் காட்டவில்லை, அதற்காக செலவு செய்ய விரும்பவில்லை என்று தோன்றுகிறது,” என்கிறார் மூத்த செய்தியாளர் அருண் தீட்சித்.

பிபிசி தமிழில் இடம் பெற்றுள்ள  சந்தன்குமார் ஜஜ்வாடேயின் தொகுப்பில் இருந்து....

 

;