articles

img

“எழுமின்! விழிமின்!” - * கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

பெற்றோர், உடன் பிறந்தோர் இவர்களுக்கு அடுத்த நிலையில் ஒரு பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய உறவு உலகில் இருக்குமேயானால், அது தாய் மாமன் உறவே. அவரை முன் மாதிரியாக ஏற்றுக் கொள்ளும் அனுபவம், நம்மில் பலருக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.

அப்படிப்பட்ட நடுத்தர வயதுடைய அமெ ரிக்க மாமனுக்கும்,தங்கை மகனுக்கும் சந்தர்ப்பவசமாக ஏற்படும் குறுகிய காலப் பயணம், அது இருவருக்கும் தருகின்ற புரி தல்களை,மிக இயல்பாக கேள்வி கேட்கின்ற படமே, “கமான் கமான்”.  ஜானி, நியூயார்க்-ல் வாழும் மணமாகாத நடுத்தர வயதுடைய வானொலி நிருபர்.காதல்  கைகூடாத நிலையில் தனிமையில் வாழ்பவர். விவ், இவரது தங்கை. எட்டு வயது மகன் ஜெஸ்ஸியுடன் லாஸ்  ஏஞ்சல்ஸ்-ல் வசிக்கிறாள்.  ஜானி, விவ் இவர்களது தாய், டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்து  போகிறாள்.நோயுற்ற தாயை பேணுவதில், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படு கிறது. இதன் காரணமாக,தாயின் மறைவுக்கு  பின் இருவரும் பேசிக் கொள்வதில்லை. விவ்-ன் கணவன் பவுல்,Bipolar Disorder  எனப்படும் அதீத கிளர்ச்சி,அதீத சோர்வு  இரண்டும் மாறி மாறி நிகழும் இருமுனையப்  பிறழ்வு என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். மனைவியை பிரிந்து ஆக்லாந்து-ல் சிகிச்சை  பெறுகிறார். ஜானி, தன் வானொலி நிலையக் குழு வோடு, நாடு முழுவதும் சுற்றி குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடம், நிகழ்கால வாழ்க்கை முறைகள், மாற்றங்களை எதிர்  கொண்டு ஏற்றுக்கொள்ளுதல் குறித்து,  கேள்வி எழுப்பி; அவர்களது கருத்துக் களைத் தொகுக்கும் பணியில் உள்ளார். பவுல்-ன் நோய் தீவிரத்தை உணர்ந்த விவ்,  உடனிருந்து உதவிட ஆக்லாந்துக்குத் தனியேச் செல்லத் திட்டமிடுகிறார்.மன வருத்தம் இருந்தாலும்,தன் மகன் ஜெஸ்ஸி யை,சிறிது காலம் பராமரிக்க, தமையனிடம் உதவி கோருகிறாள். ஜானியும் மகிழ்வோடு சம்மதிக்கிறான்.

தாய் மாமனான ஜானி, மருமகன் ஜெஸ்ஸி யையும், தன் பணி குழுவினரோடு,பல நகரங்க ளுக்கும் உடன் அழைத்துச் செல்கிறான். நுட்ப மான சுற்றுப்புற சப்தங்களை பதியும் முறை யை மாமனிடமிருந்து ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறான். இத்தாலிய இசைமேதை மொசாட் இசையையும் ரசிக்கிறான். இக்காலத்தில் இருவருக்கும் இடையே மெல்லிய பிணக்குகள், பிணைப்புகள் வரு கிறது. தங்கை விவ், அவ்வப்போது இவர்  களின் பிணக்குகளில் தலையிட்டு, ஜெஸ்ஸி யை ஆற்றுப்படுத்தியும், ஜானியின் பொறு மைக்கு நன்றி தெரிவித்தும், இருவரையும் சமாதானப் படுத்துகிறாள். ஜானி,விவ் பிணக்குத் தொடர்பாக வும், ஜானியின் காதல் தோல்வி குறித்தும், ஜெஸ்ஸி, எழுப்பும் கேள்விகளும், இதர பல  உரையாடல்களும் வாழ்வின் புதியப்பக் கத்தை ஜானிக்கும், ஜெஸ்ஸிக்கும் திறந்து  காட்டுகிறது. இறுதியில் மாமன், மருமகன் உறவு, நட்பாக பரிணமிப்பதே படக்கதை யாகும். தழுவும் தென்றலுக்குள் சிக்குண்ட சுக மான அனுபவத்தை இப்படம் தருகிறது. “பெரியவர்கள் எப்போதும் தங்களை சட்டாம்பிள்ளையாக எண்ணுவதும், தாங்கள்  சரியானவர்கள்,மற்றவர்கள் தப்பான வர்கள்” என்று, குழந்தைகள் பேட்டியின் போது சுட்டிக்காட்டுகிறார்கள். இத்தகைய தலைமுறை இடைவெளி மட்டுமின்றி, அமெ ரிக்க சமுக பிரச்னைகளையும், குழந்தை களின் பேட்டி வாயிலாக இப்படம் பேசு கிறது.

நாயகனாகத் தோன்றும் ஜாக்வின் ஃபோனிக்ஸ், ஜானியாகவே பிறவி எடுத்  துள்ளார். ஜெஸ்ஸி மீதான அன்பு, கோபம்,  ஜெஸ்ஸி தொலைந்த போது ஏற்படும்  பரிதவிப்பு,தங்கை விவ் மீதான கருணை, நேர்காணலில் குழந்தைகள் மீதான பரிவு, முகத்தில் தனிமையின் பிரதிபலிப்பு,ஆகிய பல்வேறு உணர்வுகளை சாதாரணமாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் மனதை  தன்வசப்படுத்தியுள்ளார். 2000த்தில் வெளி யான”க்ளேடியேட்டர்”-ல், ஆட்சிக் கட்டிலுக்  காக தகப்பனை அழுது கொண்டே கொலை செய்யும் குரூரன் “க்மாடோஸ்”ஆக நடித்த வரா, இவர்?என்ற ஆச்சரியத்தை, இப்படத்  தின் மிருதுவான நடிப்பால் உண்டாக்கி யுள்ளார். “ஜோக்கர்” படத்திற்கு 2019ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதும் இவர் பெற்றுள்ளார். மாமன் காதை பிடித்து இழுத்து விளை யாடுவது; ஆரம்பத்தில் தாயிடமிருந்து வரும் செல்பேசி அழைப்பை ஏற்க மறுப்பது;  இறுதியில் ஏற்று கட்டிடத் தூணை சுற்றிக் கொண்டே பேசுவது; முதலில் மாமன் மீதான  அதீத பாசத்தால், டாய்லெட் கதவைசாத்திக் கொண்டு,ஊருக்குத் திரும்ப மறுதலிப்பது; இறுதியில் நடைமுறை புரிந்து சாதாரணமாக தாயோடு ஊருக்குச் செல்வது; மாமனின் உடல் மொழியை கண் சிமிட்டாமல் ஆச்சர்ய மாகப் பார்ப்பது; உள்ளிட்ட பல காட்சி களில் ஜெஸ்ஸியாக அழகிய நடிப்பைத்  தந்துள்ள வூடி நார்மனுக்கு, வாஷிங்டன்,  லண்டன் சினிமா விமர்சன சங்கங்கள்,2021ம் ஆண்டுக்கான “சிறந்த இளம் சிறார் படைப் பாளி” விருதை வழங்கி கௌரவித்துள்ளது. தங்கை விவ்-ஆக வரும் ஹேபி ஹோப்  மான், பவுல்-ஆக வரும் ஸ்கூட் மெக்நைரி ஆகியோர் பாத்திரத்திற்கேற்ற பண்பட்ட நடிப்பை தந்துள்ளனர்.

கருப்பு வெள்ளையில் நியூயார்க் உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களை காண்ப தற்கான அரிய வாய்ப்பை உருவாக்கி,தனது உன்னதமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் ராபி ரியான். ஜானி, தனது தங்கையுடன் நோய் வாய்பட்ட தாயை பராமரித்தது குறித்து,  ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி வாதி டுகையில், ஜானி தாயை குழந்தையைப் போல் பராமரிப்பதை, பிளாஷ் பேக்காக, இடைக்காட்சியாக காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம் கதை மாந்தர்களின் எண்ண  ஓட்டத்தை, சரியாக புரிந்து கொள்ளும்  வகையில், கச்சிதமான படத்தொகுப்பைத் தந்துள்ளனர். கதைக்கு உறுதுணையளிக்கும் நேர்த்தியான இசை. மைக் மில்ஸ் இப்படத்தின் திரைக்கதை யை எழுதி, இயக்கியுமுள்ளார். சிறந்த திரைக்  கதைக்கான விருதும் பெற்றுள்ளார். ஆயுத விற்பனைக்காக போர்முரசடித்து, மனித மாண்புகளை உலகெங்கும் புதைக்  கின்ற அமெரிக்காவிலும், குடும்ப உறவு களுக்கான பொதுவான நல் விழுமியங்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது என்ற மகிழ்ச்சி படம் முடிந்த போது ஏற்படுகிறது. முரண்பட்ட இடைவெளியுடனான இரு  தலைமுறைகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது,பாசத்தால் பயணிக்க முடியும் என்பதை அழகியலாக முன்னிறுத்துவதே இப்படம். 2021ல் வெளியான இப்படம் பிரைம் அமே சானில் உள்ளது.