articles

img

பறவைகளும் விவாகரத்து செய்கின்றன - சிதம்பரம் இரவிச்சந்திரன்

ஒழுக்கமின்மை (promiscuity) அல்லது நீண்ட நாள் பிரிவின் காரணமாக பறவைகள் விவா கரத்து செய்கின்றன. ஒருதாரப் பறவைகள் (monogamous) கூட மனிதர்களைப் போல தங்கள் வாழ்க்கைத்துணையை மாற்றிக்கொள்கின்றன என்று விஞ்ஞானி கள் கூறுகின்றனர். வேறு தொடர்புகள் அல்லது நீண்டகாலப் பிரிவு மனிதர்களில் விவாகரத்திற்கு காரணமாக இருப்பது போல பறவைகளிடமும் காணப்படுகிறது.

விவாகரத்து

வாழ்நாள் முழுவதும் இல்லாவிட்டா லும் ஒரு இணை சேரும் காலத்திலேனும் 90% பறவையினங்கள் ஒரு இணையுடன் வாழ்கின்றன என்று கருதப்படுகிறது. ஆனால் ஒரு சில ஒருதாரப்பறவைகள் அடுத்தடுத்த இணை சேரும் காலங்களில் அதன் முந்தைய இணை உயிருடன் இருக்கும்போதே வேறு இணையுடன் சேர்கின்றன. பறவைகளிடம் காணப்படும் இந்தநடத்தை விவாகரத்து என்று அழைக்கப்படுகிறது. தனிப்பட்ட அல்லது பல பறவையினக்  குழுக்களிடையில் இதற்கான கார ணங்கள் பற்றி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. பறவையினங்களிடையில் ஆண் பறவைகளின் ஒழுக்கமின்மை மற்றும் நீண்ட தூர வலசை ஆகியவை இதற்கான இரண்டு முக்கிய காரணங்க ளாக விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்துள்ளனர்.

வலசையும் இறப்பு விகிதமும் விவாகரத்தும்

ராயல் சொசைட்டி பி (Royal Society B) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில் 232 பறவை யினங்களின் விவாகரத்து அவற்றின் இறப்பு விகிதம் மற்றும் வலசை செல்லும் தூரத்திற்கு இடையில் உள்ள தொடர்பு பற்றி ஆராயப்பட்டடு. இது குறித்த தரவு களுடன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வு முடிவுகளின் உதவியுடன் சீனா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

விரிவான பகுப்பாய்வு

பறவைகளின் நடத்தை பற்றி வெளி யிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்குழுவினர் ஆண் மற்றும் பெண் பறவைகளுக்குத்ட் தனித்  தனியான ஒழுக்கமின்மை மதிப்பெண் களை வழங்கினர். வெவ்வேறு இனப் பறவைகளுக்கு இடையில் இருக்கும் பரிணாமரீதியிலான உறவுகள் மற்றும் அவற்றின் பொதுவான மூதாதையர் பற்றிய பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிடத்தக்க விதத்தில் நெருங்கிய சொந்தமுள்ள இனங்களுக்கு இடையில் விவாகரத்து அதிகமாக காணப்பட்டது. இதுபோல வேறு சில நெருங்கிய உறவு உள்ள இனங்களுக்கு இடையில் விவாகரத்து குறைவாக இருந்தது.

விவாகரத்து அதிகமாக காணப்படும் பறவையினங்கள்

ஆண் பறவைகளின் ஒழுக்கமின்மை விகிதம் விவாகரத்து அதிகமாக உள்ள இனங்களுக்கு இடையில் அதிகமாக காணப்பட்டது.  ப்ளோவர்கள் என்னும் புறா  போன்ற வகைப் பறவை (Plovers), தகை விலான் அல்லது தகைவிலான் குருவிகள் (Swallows), மார்ட்டின்கள் (Martins), கருந்தலை மாங்குயிர்ல் (Orioles) மற்றும் கறுப்புப்பறவைகள் (Black birds) ஆகியவற்றில் விவாகரத்து விகிதமும் ஆண் பறவைகளின் ஒழுக்கமின்மையும் அதிகமாக காணப்படுகிறது.

குறைவான விவாகரத்து நடைபெறும் பறவையினங்கள்

பெட்ரல் (Petrels) எனப்படும் கடற்  பறவை வகை கினிக்கோழிகள், ஆல்பட்ராஸ் பறவைகல் (Albatrosse), கீஸ் வகை வாத்துகள் (Geese) மற்றும் அன்னம் (Swan) ஆகியவற்றிற்கு இடையில் குறைந்த விவாகரத்து விகிதமும் ஆண் பறவைகளின் ஒழுக்கமின்மையும் காணப்பட்டது. ஆண் பறவைகளுக்கு இடையில் அதிக ஒழுக்கமின்மை காணப்படும் இனங்களிலேயே அதிக விவாகரத்தும் நடைபெறுகிறது. ஆனால் பெண் பறவைகளில் இது மாறுபடுகிறது.

பறவைகளின் வாழ்வியல் நடத்தைகள்

ஒரு ஆண் பறவை ஒழுக்கமின்மை யுடன் இருந்தால் அதன் கவனம் மற்றும் ஆற்றல் பல பெண் பறவைகளிடையில் திசை திருப்பப்படுவதால் அது  தன் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து தவறிவிட்டதாக எடுத்துக்கொள் ளப்படுகிறது. இது அதன் பெண் இணைக்கு  அதன் மேல் இருக்கும் ஈடுபாட்டைக் குறைக்கிறது. அதனால் அடுத்த இணை சேரும் நிகழ்விற்கு முன்பே இவற்றிற்கு இடையில் விவாகரத்து நிகழ்கிறது.

ஆண் பறவையின் தகுதியைக் காட்டும் இணை சேர்தல்

மற்றொருவிதத்தில் ஒரு ஆண் பறவை தன் தகுதியை பல பெண் பறவைகளுடன் இணைவதன் மூலம் காட்டுகிறது என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் ஜெர்மனி மாக்ஸ் ப்ளாங்க் (Max Planck) விலங்குகளின் நடத்தை பற்றிய ஆய்வு மைய விஞ்ஞானி டாக்டர் ஜிட்டன் சாங் (Dr Zitan Song) கூறுகிறார்.

ஒழுக்கமின்மையும்  ஆண் பறவைகளும்

இதனால் விவாகரத்து சம்பவங்கள் அதிகமாகின்றன. இது ஆண் பறவை களின் ஒழுக்கமின்மையையும் அதி கரிக்கிறது. ஆனால் பிறக்கும் குஞ்சு களைக் கவனித்துக்கொள்வதில் உறுதி யற்ற நிலையை இது ஏற்படுத்தும் என்ப தாலும், அவ்வாறு நிகழ்ந்தால் குஞ்சுகளை பராமரிக்கவேண்டிய பெற்றோரின் பொறுப்பு ஆண் பறவைகளின் மீதே விழும் என்பதாலும் பெண் பறவைகளிடையில் காணப்படும் ஒழுக்கமின்மை இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்று சாங் கூறுகிறார்.

தொலைதூர வலசைப் பயணங்கள்
மிக நீண்ட தொலைவு வலசை செல்லும் பறவையினங்களிடையில் விவாகரத்தும் அதிகமாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வலசைப் பயணம் முடிந்தவுடன் இணைகள் அவற்றின் வாழிடத்திற்கு ஒத்திசைவற்றமுறையில் வருகின்றன. முதலில் வரும் பறவை வேறொரு பறவையுடன் இணை சேர இது வழிவகுக்கிறது. இதன் விளைவாக விவாகரத்து ஏற்படுகிறது.

வலசை என்னும்விபத்து
 

வலசைப்பயணங்கள்  இணைப்பற வைகளை  இனப்பெருக்கம்  நடக்கும் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கலாம். எதிர்பாராமல் ஏற்படும்  இந்த விபத்தால் உண்டாகும் இழப்பு விவாகரத்து ஏற்படக் காரணமாகிறது. இது வலசை செல்லும் தூரத்தை தீவி ரப்படுத்துகிறது. நீண்ட தூர வலசைப் பய ணங்கள் இணை சேர்வதற்கான வாய்ப்பு களை குறைக்கிறது. வலசை முடிந்து வந்தவுடன் முந்தைய இணைக்காகக் காத்திருப்பதை விட உடனே அங்கு இருக்கும் மற்றொரு பறவையுடன் இணை  சேர்கின்றன. விவாகரத்து நடந்துவிட்டதால் இது ஆண் பறவைகளுக்கு சுலபமாகிறது.

சூழலியல் மாற்றங்களுக்கான பதில் வினை

ஆண் பறவைகளின் ஒழுங்கின்மைக்கும் இறப்பு விகிதம் மற்றும் அவை வலசை செல்லும் தூரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மறைமுக மாக விவாகரத்தில் தாக்கம் செலுத்துகிறது. பறவைகள் தங்கள் தனிப்பட்ட தகுதியைக் காட்டும் ஒரு உத்தியாக அல்லது வலசை போன்ற சூழலியல் செயல்களுக்கு பதில் வினை புரிவது போன்ற காரணங்களால் விவாகரத்து அதிகமாகிறது.

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கப்போகும் விவாகரத்துகள்

வலசை மற்றும் ஒத்திசைவற்ற தன்மைக்கும் பறவைகளின் விவாக ரத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றிய இந்த ஆய்வுக்கட்டுரையின் கண்டுபிடிப்பு சுவாரசியமானது என்று லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் கடல் சார் உயிரியல் துறை நிபுணர் டாக்டர் சமந்தா பாட்ரிக் (Dr Samantha Patrick) கூறுகிறார். காலநிலை மாற்றம் கணிக்கமுடியாத அளவிற்கு மோசமாகி வருவதால் வலசை செல்லும் கால நேரங்களில் முன்பு இல்லாத பல வேறுபாடுகள் ஏற்படலாம். இது பல பறவையினங்களில் விவாகரத்து நிகழும் சாத்தியக்கூறு மற்றும் அதன் விகிதத்தை அதிகரிக்கலாம் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.