articles

பாட்டாளி வர்க்கம் நடத்தும் ஏடு...

தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில்,  தாமிரபரணி நதிக்கரையில் ஐந்தாவது பதிப்பாக உதயமாகியுள்ள தீக்கதிரை அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரிக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை தீக்கதிர் பூர்த்தி செய்யும். இது “அன்றாட கூலிக்காரர்களான பாட்டாளி வர்க்கம் நடத்தும் ஏடு” “ கூலி வாங்கிக் கொண்டு கூவும் ஏடு அல்ல”. தீக்கதிர் ஒரு லட்சம் வாசகர்களை அடையும் என்ற மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் அறைகூவலை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.

மத நல்லிணக்கத்தின் அடையாளம் திருநெல்வேலி...

மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் பேசுகையில், “விடுதலைப் போராட்டத்தோடு மட்டுமல்ல, தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய பெருமை திருநெல்வேலி க்கு உண்டு. இங்குள்ள மேலப்பாளை யத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்கி றார்கள். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக திருநெல்வேலி விளங்கு கிறது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்ட கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டம் இடையர்குளத்தில் தங்கியி ருந்துதான் தனது பணிகளை மேற் கொண்டார். எழுத்தாளர்கள் நிறைந்த மாவட்டம் திருநெல்வேலி. இங்கு நமது நாளிதழின் ஐந்தாவது பதிப்பு தொடங்கி யுள்ளது. விவசாயிகள், விவசாயத் தொ ழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவோடு தீக்கதிர் வர லாற்று முத்திரையைப் பதிக்கும்” என்றார்.

பத்திரிகை சுதந்திரமும்... தீக்கதிரும்...

மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி பேசுகையில், “ திருநெல்வேலியில் ஐந் தாவது பதிப்பைத் தொடங்கியிருப்பது நமது சாதனையில் ஒரு மைல்கல், எதிர் காலத்தில் எட்டுத்திக்கும் பதிப்புகளைத் தொடங்கி உழைப்பாளி மக்களுக்காக தீக்கதிர் குரல் கொடுக்கும். பத்திரிகை சுதந்திரத்தை மோடி அரசு நசுக்கி வரும் நிலையில், உண்மையை உரக்கச் சொல்லி வருகிறது தீக்கதிர். ஜி-20 மாநாட்டின் உண்மை நிகழ்வுகளை எழுதியது தீக்கதிர் மட்டுமே” என்றார்.