articles

img

மனித உரிமைகளுக்காகக் களமாடிய போராளி - ஜி.ராமகிருஷ்ணன்

முன்பு ஒரே மாவட்டமாக இருந்த நெல்லை மாவட்டத்தில் களப் பணியாற்றி இயக்கம் வளர்த்த பல மூத்த தோழர்களை ‘களப் பணியில் கம்யூ னிஸ்ட்டுகள்’ தொட ரில் சந்தித்திருக்கிறோம். இப்போது நாம்  சந்திக்க இருப்பது தோழர் பஞ்ச கல்யாணி. இவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்துடன் உள்ள விளாத்திகுளம் வட்டம், புதூர் பகுதி யைச் சேர்ந்தவர். 1947 ஆம் ஆண்டு ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் பஞ்ச கல்யாணி. குடும்பத்தின் வறுமை நிலைமை இவரை 5ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர விட வில்லை. அந்தச் சிறு வயதிலேயே ஒரு தையல் கடையில் வேலையில் சேர்ந்தார். கடைக்கு வருபவர்கள் அரசியல் பேசுவதை கூர்ந்து கவ னித்து வந்தார். அக்காலத்தில் தையல் கடை,  டீக்கடை, முடிதிருத்தும் நிலையம் ஆகிய  இடங்களே  அரசியலை அலசும் மையங் களாக விளங்கின. புதூர் காந்தி பஜாரில், அன்று  ஒரே இயக்கமாக இருந்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. அதில் கட்சித் தலைவர் தோழர் பி. ராமமூர்த்தி பேச இருக்கிறார் என்ற தகவல் அறிந்து அந்த நிகழ்வுக்குச் சென்றார்.

பெரும் திரளாகக் கூட்டத்திற்கு வந்திருந்த வர்களைப் பார்த்து உற்சாகம் அடைந்த பஞ்ச  கல்யாணி, பி.ஆர். நிகழ்த்திய உரையைக் கேட்டு ஈர்க்கப்பட்டவராக, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைவதென்று முடி வெடுத்தார். கட்சியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஊழியராக இருந்த தோழர் மைதீன் என்பவரை சந்தித்து நீண்ட நேரம்  விவாதித்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து 1962-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். கட்சியின் இடைக் குழு உறுப்பினரான தோழர் மைதீன் அளித்த கட்சி உறுப்பினர் ரசீதைப் பெற்றுக்கொண்டு கட்சியில் சேர்ந்த அந்த நாளை இப்போதும் சிலிர்ப்போடு நினைவுகூர்கிறார். 1964ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோது,  அதில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் உட்பட ஏழு தோழர்களைக் கொண்ட கட்சிக்  கிளை உருவாக்கப்பட்டது. கிளைக் கூட்டத்தில் ‘தீக்கதிர்’ விற்பனை பற்றி விவாதம் எழுந்த போது தானே முன்வந்து புதூர் பகுதி முக வராகப் பொறுப்பேற்றார். 1966  முதல் சுமார்  40 ஆண்டுகள் தொடர்ச்சியாக ‘தீக்கதிர்’ விநியோகப் பணியை அர்ப்பணிப்போடு செய்திருக்கிறார். 1967ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி அரசு கவிழ்க்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. தமிழகத்திலும் நடந்த மறியல் போராட்டத்தில்  மற்ற தோழர்களோடு இணைந்து பங்கேற்ற பஞ்ச கல்யாணி கைது  செய்யப்பட்டார். அதே ஆண்டில் புதூர் பகுதி யில் தோழர் பஞ்ச கல்யாணி முன்முயற்சி யால் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அதில், திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே. அனந்த நம்பியார் கலந்துகொண்டு முழங்கினார். புதூர் கூட்டுறவு சொசைட்டி சங்கத் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற் கொண்டார் பஞ்ச கல்யாணி. அது கைகலப்பாக மாறியது. தோழர்கள் பஞ்ச கல்யாணி, கந்த சாமி ஆகியோரும், திமுக-வைச் சார்ந்த வர்கள் இருவரும் மாநில அரசின் தலை யீட்டால் ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப் பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.  வழிப்பறிக் கொள்ளை யில் ஈடுபட்டதாக பஞ்ச கல்யாணி மீது காவல்துறையினர் பொய் வழக்குத் தொடுத்த னர். பின்னர் நான்கு பேரும் திருச்சி மத்திய  சிறைக்கு மாற்றப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகே நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். திருச்சி சிறையில் தோழர்கள் பி.சி. வேலா யுதம், பாலசுப்ரமணியம், திருச்சிற்றம்பலம் ஆகியோரோடு தினமும் பயனுள்ள அரசியல் விவாதங்கள் நடந்ததை பஞ்ச கல்யாணி குறிப்பிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளாத்திகுளம் வட்ட மாநாடு 1980ல் நடை பெற்றது. அம்மாநாட்டில் இவர் வட்டக்குழு செயலாளராக தேர்வானார். அடுத்து நடந்த நெல்லை மாவட்ட மாநாட்டில் மாவட்டக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1986ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் கட்சியின் மாவட்ட அமைப்பு தூத்துக்குடி மாவட்டக்குழு, நெல்லை மாவட்டக்குழு என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. பஞ்ச கல்யாணி தூத்துக்குடி மாவட்டக்குழு உறுப்பின ராகச் செயல்படலானார். இவரது முயற்சியினால் புதூர் பகுதியில் 30 கட்சிக் கிளைகள் உருவாக்கப்பட்டதைப் பெருமையோடு குறிப்பிட்டார். கட்சிக் கிளைகள் மட்டுமல்லாமல் விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், தொழிற்சங்கம் உள்ளிட்ட பல வர்க்க/ வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும்  முக்கியப் பங்காற்றினார். அடுத்த சில ஆண்டுகளில் விளாத்திகுளம் இடைக்குழு புதூர், எட்டையபுரம் என இரண்டு இடைக் குழுக்களாக பிரிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு முடிவினை ஏற்று 1986ஆம் ஆண்டு தோழர் பஞ்ச கல்யாணி முழுநேர ஊழியராகப் பொறுப்பேற்றார்.

விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தோழர் ஜெயராஜ் சமூக  விரோதிகளால் தாக்கப்பட்டதைக் கண்டித்து  வலுவான கண்டன இயக்கத்தை தோழர்  பஞ்ச கல்யாணி நடத்தினார். காவல்துறை யின் தடையை மீறி, ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்ட அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத் தில் அன்றைய மாவட்டச் செயலாளர் தோழர்  பி.சம்பத் (தற்போது மத்தியக் குழு உறுப்பினர்) பங்கேற்றார். விளாத்திகுளம் பகுதி வறட்சியால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானபோது, அப்பகுதியை பஞ்சப் பிரதேசமாக அறிவித்து மக்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, மக்களைத் திரட்டி பெரியதொரு இயக்கத்தை நடத்தினார் பஞ்ச கல்யாணி. மக்களுக்காக இயக்கம் நடத்திய அவர் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்தனர். காவல்துறையின் பல்வேறு அத்து மீறல்களை எதிர்த்து பல கண்டன இயக்கங்கள் தோழர் பஞ்ச கல்யாணி முயற்சியால் எழுச்சி யுடன் நடந்துள்ளன. விளாத்திகுளம் மீரான்  தெருவில் வாழ்ந்தவரான திமுக உறுப்பினர்  போஸ் என்பவரை பொய்ப் புகார் அடிப் கடையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது கடும் சித்தரவதைக்கு உள்ளான அவர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார். அந்தக் காவல்நிலைய மரணத்தைக் கண்டி த்தும் நீதி வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களைத் திரட்டி இயக்கம் நடைபெற்றது. அதற்குத் தலை மை தாங்கினார் தோழர் பஞ்ச கல்யாணி.

அதைப்போலவே 1995 ஆம் ஆண்டு சூரங்கடி காவல் நிலையத்தில் மேல்மாந்தை பகுதியை சேர்ந்த ரத்தினவேல் நாடார் என்பவ ரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது காவல்துறையினர் ரத்தினவேலை கடுமையாகத் தாக்கியதால் காவல் நிலையத்திலேயே அவர் இறந்து விட்டார். இந்த லாக்கப் மரணத்தை கண்டித்து  தோழர் பஞ்ச கல்யாணி முயற்சியால் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற கண்டன இயக்கங்கள் நடந்தன. கட்சியின் மாவட்ட மையம் சார்பில் காவல் நிலைய மரணம் குறித்து விசாரிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடி தம் அனுப்பப்பட்டது. கடிதத்தையே மனு வாக எடுத்துக்கொண்டு விசாரித்த உச்சநீதி மன்றம், இறந்த ரத்தினவேல் நாடார் குடும்பத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்  இழப்பீடு வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியினால்தான் இந்த இழப்பீடு கிடைத்தது. விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம் பகுதி யில் கண்மாயில் மாடுகளைக் குளிப்பாட்டி னார்கள் என்பதற்காக அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களை சாதி ஆதிக்க வெறியர்கள் கடுமை யாகத் தாக்கினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள், வாகனங்கள் மீது கொடூரத் தாக்குத லை தொடுத்தார்கள். அம்மக்களின் வீடுகளில் சாப்பாட்டிற்காக வைத்திருந்த அரிசி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி, பீங்கான் துகள்களையும் போட்டனர். இத்தகைய தீண்டாமை கொடுமைக்கு ஆளான தலித் மக்களைக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பார்ப்பதற்குக் கூட காவல்துறை அனுமதிக்க வில்லை. காவல்துறையோடு போராடியே கட்சித் தலைவர்கள் அந்தக் கிராமத்திற்குச் சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கேட்டு பல கட்ட இயக்கங்களும் நடத்தப் பட்டன. கட்சி மற்றும் சிஐடியு சார்பில் தலித்  மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நட வடிக்கைகளில் எல்லாம் தலையாயப் பங்காற்றினார் தோழர் பஞ்சகல்யாணி.

பிரச்சனை என்று யாராவது பஞ்ச கல்யாணியை சந்தித்தால் உடனே அவர் களமிறங்கி விடுவார். மக்கள் நலனுக்காக, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு போராளியாகக் களமாடியவர்தான் தோழர் பஞ்சகல்யாணி. இடைக்குழு செயலாளராக இருந்தபோது சைக்கிளிலேயே கிராமங்களுக்குச் சென்று கட்சிக் கிளைக் கூட்டங்களில் கலந்து கொள்வார். தேவைப்படுகிறபோது அந்தக் கிராமங்களிலேயே தங்கிவிடுவார். அப்பகு தியில் செயல்படும் பெரும்பான்மையான கிளைகளை உருவாக்கியவர் இவர் என்று இன்றைய இடைக்குழு செயலாளர் ஜோதி நெகிழ்வோடு குறிப்பிடுகிறார்.

தோழர் பஞ்ச கல்யாணியின் இணையர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் செயல்பட்டிருக்கிறார். இவர்களுடைய பிள்ளைகள் கட்சிக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். தற்போது உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ள தோழர் பஞ்ச கல்யாணி கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு தன்னால் இயன்ற இயக்கப் பணிகளைச் செய்து வருகிறார். கைது, பொய் வழக்கு, சிறை போன்ற அடக்குமுறைகளை எதிர்கொண்டு மக்கள் நலனைப் பாதுகாப்பதே தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் என தன்னல மறுப் போடு இயங்கியவர். இன்றைய இளைய தலை முறையினருக்கு முன்மாதிரியாக உள்ள தோழர் பஞ்ச கல்யாணியின் அர்ப்பணிப்பு மிக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத் தக்கது.