articles

img

ஆந்திர மாநில கல்யாணத்திற்கு பவானி ஜமக்காளம்தான் விரிக்கப்படுமாம்!- எஸ்.சக்திவேல் -

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, பவானியை ஜமக்காள நகரம் என்றழைக்கப்படுகிறது. பவானி ஜமக்காளம் 150 ஆண்டுகள் பாரம்ப ரியம் கொண்டது. தொடக்கத்தில் கோரையில் நெய்யப்பட்டு வந்த ஜமக்காளம் பிற நெசவாளர் களையும் கவர்ந்தது. விவசாயத்திற்கு அடுத்தப டியாக பவானி பகுதியில் ஜமக்காளம் தயாரிப்பு  தான் முக்கிய தொழில். இடுப்பளவு குழி வெட்டி  அதில் மரத்தலான தறியை நிறுவுவர். பாவு ஓட்டி  அள்ளு கட்டுவர். ராட்டை சுற்றுவர். தறியில் மிக  முக்கியமானது படமரம். ஜமக்காளத்திற்கு அதிக விரைப்பு தேவை. அதனால் கடப்பாறை கொண்டு தான் இழுத்து கட்டுவர். 

இடுப்பளவு குழியில் நின்று கொண்டு தார் சுற்றிய நாடாவை வீசுவர். மறுமுனையில் நாடா வைப் பிடித்து ஒரு காலில் பெடலை மிதிப்பர். பண்ணை நகரத்தி விட்டு மறுமுனையிலிருந்து நாடாவை வீசுவார் தறி ஓட்டி. இப்போது கால்  மிதி மாறும். 40 அங்குல தறியில் 60 அங்குல நூலை நெசவு செய்வர். இதில் பாவு, ஊடை  பிரித்து பார்க்க முடியாது. அதுதான் பவானி ஜமக்காளத்தின் சிறப்பு. ஒரே தறியில் இரண்டு,  மூன்று பேர் நெசவில் ஈடுபடுவர். அது 16 அடி  வரையிலான விரிப்புகளாகும். 

பட்டுக்கரை போட்ட ஜமக்காளங்கள் தயாரிக் கப்பட்டன. பல வண்ணங்களில் பூ, மரம், இயற்கை காட்சிகளும் ஜமக்காளத்தில் இடம் பெற்றன. பெயர், புகைப்படத்தையும் நெசவில் கொண்டு வரப்படும். அத்தகைய நுணுக்கமான கலை ஞர்கள் இந்த தொழிலில் இருந்தனர். நல்ல  கண் பார்வையும், நுணுக்கமான கை வேலைப் பாடும், திடகாத்திரமான உடல்வாகும் கைத்தறி யாளர்களின் அடிப்படையாகும். 

இங்கு தயாரிக்கப்படும் ஜமக்காளம் இந்தி யாவின் பல மாநிலங்களில் விற்பனையானது. ஆந்திராவில் திருமணம் என்றால் பவானி ஜமக் காளம் தான் விரிக்கப்படுமாம். ஆரம்பத்தில் தபால் நிலையம் மூலமாகவே அனுப்பப்பட்டு வந்தன. கொரியர், லாரி உள்ளிட்ட பல சரக்கு  போக்குவரத்து வசதிகள் வந்தாலும் இன்றும் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஜமக்காளம் ஆர்டர் பெற முகவர் கள் இருந்தனர். இங்கே ஜமக்காள கடையில் வெளி மாநில மொழி குறிப்பாக இந்தி தெரிந்த வர்கள் அப்போதே வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தனர். அவர் கடிதப் போக்குவரத்து உள் ளிட்டவற்றைக் கவனித்து வந்தார். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றும தியானது.

பவானியில் சுமார் 700, 800 தறிகள் இருந்தன.  குருப்பநாய்க்கன்பாளையம், சேர்வராயன்பா ளையம், பெரிய மோளப்பாளையம், தளவாய் பேட்டை, ஒரிச்சேரி புதூர், அந்தியூர், தவுட்டுப்பா ளையம் பகுதியிலும் தறிகள் அமைத்து ஜமக்கா ளம் நெசவு செய்து வந்தனர்.

கைத்தறிக்கு பொறுப்பானவரே விசைத்தறிக்கும் என்பது விந்தை

தற்சமயம் ஜமக்காளத் தொழில் பற்றி சித்தையன் என்பவரிடம் கேட்டபோது, 1947ல் ஒன்றுபட்ட கோவை மாவட்டம். அப்போதே கூலி  உயர்வு ஒப்பந்தம் போட்டு தொழில் அமைதியு டன் ஜமக்காளம் தொழில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு  பெற்று வந்தோம். இறுதியாக 1994ல் கூலி  உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்பட வில்லை. விசைத்தறிகள் வந்த பிறகு கைத்தறி ஜமக்காளத்திற்கு அழிவு ஆரம்பமானது.  

கைத்தறி ஜமக்காளங்கள் 15 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என்றால், விசைத்தறி தயா ரிப்புகள் 5 ஆண்டுகளில் கிழிந்து விடும். இதுகு றித்து மக்களுக்குத் தெரியாது. அரசு தான் தொழி லைப் பாதுகாக்க வேண்டும். 22 ரகங்கள் ஒதுக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது 11 ரகங்கள் மட்டுமே கைத்தறிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களை நெசவு செய்ய விசைத்த றிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், கைத்தறிக்கு பொறுப்பான இயக்கு நரே விசைத்தறி தொழிலையும் மேம்படுத்து வராக உள்ளார். அவரிடம் கைத்தறியை நம்பியி ருப்பவர்களின் பாதுகாப்பை எப்படி எதிர்பார்க்க முடியும். 

இன்று, கட்டுமான பணியில் ஈடுபடுபவ ர்களுக்கு ரூ.800, 900 என ஊதியம் கிடைக்கிறது.  ஆனால், இங்கே நாள் முழுவதும் வேலை செய் தாலும் ரூ.200லிருந்து ரூ.300 வரை தான் கிடைக் கிறது. ரூ.300 என்பதும் மிக அதிகம்தான். இந்தக்  கூலிக்கு யார் வருவார்கள். 

கூட்டுறவு சங்கங்கள் உருவானது. ஆனால் நெசவாளர்களின் கூலி உயரவில்லை. இன்றும்  29 சொசைட்டிகள் இருக்கின்றன. சொசைட்டி யின் உற்பத்தி செய்யப்படும் ஜமக்காளங்கள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. அதனால் கூலி கொடுக்க முடியவில்லை. எனவே சொசைட் டிக்கு நூல் தருவதில்லை. நெசவு நடைபெறு வதில்லை. தறி ஓட்டி இல்லை. வேறு வேலைக ளுக்குச் சென்று விட்டனர். ஆனால் கூட்டுறவு சங்கங்கள் நூல் பெற்றதைப் போலவும், நெசவு  செய்ததைப் போலவும், கூலி கொடுத்ததைப் போலவும், உற்பத்தி செய்த ஜமக்காளத்தை விற்றதைப் போலவும் கணக்கு எழுதப்ப டுகின்றன. அரசு வழங்கும் 20 விழுக்காடு ஊக்கத்  தொகையும் கேட்டுப் பெறப்படுகிறது. சந்தை  மதிப்பை விட குறைந்த விலைக்கு கிடைப்ப தால் வாங்கிய நூலை அந்த வாசலிலேயே விற் கும் நிலை உள்ளது.  

இத்தகைய முறைகேடுகளைக் கடந்து உற்பத்தியாகும் ஜமக்காளங்களை கோ-ஆப் டெக்ஸ் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண் டும். கைத்தறி ஜமக்காளங்களுக்கு வெளிநாடு களில் ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. ஆனால்  அதுபற்றி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதன் உப தொழில்களாக சாயமேற்ற பல  சாயப்பட்டறைகள் முளைத்தன. ஏராளமா னோர் தூக்குப் வாளியில் சோற்றை எடுத்துக்  கொண்டு அங்கு வேலைக்குச் சென்றனர். மாசுக் கட்டுப்பாடு என்ற பெயரில் சாயப்பட்டறைகள் இடித்துத் தள்ளப்பட்டன. இதனால் அவர்க ளும் வேலை இழந்தனர் என்றார்.

சக்திவேல் என்ற கைத்தறியாளர் கூறுகையில், ஜமக்காளத்தை நம்பி இனியும் வாழ்க்கை நடத்த முடியாத நிலை உள்ளது. இத் தொழிலில் ஈடுபட்ட பலரும் திருமணம் உள்ளிட்ட  விசேசங்களுக்கு சமையல் வேலைக்குச் செல் கின்றனர். எது முதன்மைத் தொழில் என்றே தெரி யவில்லை என மனம் நொந்து பேசினார்.     

இதுகுறித்து விசாரிக்க கைத்தறி துறை  உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிய போது, 2ஆயிரத்து 302 தறிகள் மட்டுமே உள்ளன.  2023-24ஆம் ஆண்டில் 13 லட்சத்து 17 ஆயிரத்து  407 மீட்டர் உற்பத்தியானது. 30கோடியே 45  லட்சத்து 89 ஆயிரத்து 267 மதிப்புடையதாகும்.  இதில் 12 லட்சத்து 62ஆயிரத்து 978 மீட்டர்  ஜமக்காளம் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.35  கோடியே 6 லட்சத்து 49ஆயிரத்து 534 ஆகும். நெசவாளர்களுக்கு கூலியாக 1.3எப் க்கு ரூ.13 கூலியாக வழங்கப்படுகிறது. ஜமக்காளம் உள் ளிட்ட அனைத்து கைத்தறியாளர்களும் என்ற  வகையில் மாதாந்திர ஓய்வூதியமாக 7ஆயி ரத்து 310 பேர் ரூ.1000 பெற்று வருகின்றனர். குடும்ப ஓய்வூதியம் 359 பேர் பெற்று வருகின் றனர். இது தவிர சேமிப்பு பாதுகாப்பு திட்டம் என்ற  பெயரில் கைத்தறியாளர்கள் 12858 பேர் தங்கள்  ஊதியத்தில் சிறு பகுதியைச் சேமித்து வருகி ன்றனர். அரசின் பங்காக 8 விழுக்காடு சேர்த்து  அவர்களுக்கு ஓய்வு பெறும் போது வழங்கப் படும் என்றனர்.

கணக்கெல்லாம் கணக்கச்சிதமாகத்தான்  உள்ளது. ஆனால், ஜமக்காளத்தில் வடிகட்டிய  கனவுகளாய் இத்தொழிலில் ஈடுபட்டோர் வாழ்க்கை வசந்தம் இழந்து வாடிக்கிடப்பதை உணருவார்களா ஆட்சியாளர்கள்.
 

;