articles

img

மதவெறியும், வெறுப்பு அரசியலும்தான் இந்த அரசின் எரிபொருள்! -ஏ.ஏ.ரஹீம்

புதுதில்லி, ஜூலை 4- மதவெறியும், வெறுப்பு அரசியலும்தான் இந்த அரசாங்கத்தின் எரிபொருளாக இருக்கிறது.  பிரித்தாளும் சூழ்ச்சியே இந்த  அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் கூறினார்.

18ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து புதிதாக உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டபின் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை  நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து நடை பெற்ற நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் ஏ.ஏ. ரஹீம் பேசிய தாவது:

நரேந்திர மோடி அரசாங்கம் 2014இலும்  அதனைத் தொடர்ந்தும் ஆட்சி அதிகா ரத்திற்கு வருவதற்கு ஒரேயொரு எரிபொரு ளைத்தான் பயன்படுத்தியது. அதுதான் பிளவுவாத அரசியல். கடந்த பத்தாண்டு களில் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அது கவலைப் பட்டதே கிடையாது. இப்போதும் அவர்கள் அவற்றை விவாதிக்கத் தயாராயில்லை.

வாருங்கள் விவாதிப்போம்

“நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள்:
இந்தக் கவிஞன் நம் நாட்டில்     எரிந்துகொண்டிருக்கும் எரிமலைகள்     குறித்துப் பேசாமல்
எப்போதும் கனவுகள் குறித்தே     பேசுகிறான் என்று.
வாருங்கள், வீதிகளில் ஆறாக ஓடும் ரத்த வெள்ளத்தைப் பாருங்கள்.
வீதிகளில் ஆறாக ஓடும் ரத்த     வெள்ளத்தைப் பாருங்கள்”
என்பது சிலி நாட்டு புரட்சிக் கவி  பாப்லோ நெரூடாவின் கவிதை வரிகளாகும்.
 அதே போன்று நாமும்,
“வாருங்கள், இந்த நாட்டின் விலைவாசி     உயர்வைப் பற்றி விவாதிப்போம்.
வாருங்கள், இந்த நாட்டின்     வேலையின்மையைப் பற்றி     விவாதிப்போம்.
வாருங்கள், இந்த நாட்டின் தலித்துகள், சிறுபான்மை
யினரின்  மீதான தாக்குதல்கள்  பற்றி விவாதிப்போம்.
வாருங்கள், இந்த நாட்டின் புல்டோசர்  ஆட்சி குறித்து விவாதிப்போம்.

வாருங்கள், இந்த நாட்டின்  அரசியல் மற்றும் சமூக எதார்த்த நிலை குறித்து விவாதிப்போம்” என்று பாட வேண்டியிருக்கிறது.

ரயில் விபத்து உயிர்ப் பலிகளும் காலிப்பணியிடங்களும்

சமீபத்திய தேசியக் குற்றப் பதிவேடுகள் நிலையத்தின் (NCRB) தரவுகளின்படி, கடந்த ஐந்தாண்டுகளில், ரயில் விபத்துக்களில் ஒரு லட்சம் பேர் பலியாகி இருக்கின்றனர். இத்துடன் இந்த அவையில் மற்றொரு கணக்கையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். சமீபத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2.5 லட்சம் பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக இருக்கின்றன. மேலும், இப்போதும்கூட 18,999 ரயில்களை ஓட்டும் லோகோ பைலட்டுகளின் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.  நாட்டில் நடைபெறும் ரயில் விபத்துக்கள் அனைத்துக்கும் இவ்வாறு ஒன்றிய அரசாங்கத்தின் இளைஞர் விரோத கொள்கைகளின் விளைவாக, போதுமான அளவிற்கு புதிய பணியிடங்களை உருவாக்காததே காரணமாகும். குடியரசுத் தலைவர் உரையில் இதுபோன்ற பிரச்ச னைகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.


 

;