இந்தியாவுக்குஅவப்பெயரை ஏற்படுத்தும் மோடி அரசு
ஏற்படுத்தும் மோடி அரசு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமை யான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என நேட்டோபொதுச்செயலாளர் மார்க் ரூட்டே விடுத்த எச்சரிக்கையை நிராகரிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க முடிவு போன்று தோன்றினாலும் அது உண்மை யல்ல. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக இல்லை.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு எதிராக சர்வதே சச் சட்டங்களையும் மனித உரிமைகளையும் மதிக்காத இஸ்ரேலின் அராஜகங்களுக்கு எதி ராக ஐநா சபையில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது, கடந்த காலங்களில் அணிசேரா நாடு களுடன் இணைந்து இந்தியா அதை ஆதரித்து வாக்களித்துள்ளது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா நடுநிலை வகிக்கிறது அல்லது வாக்கெடுப்பை புறக்கணிக்கிறது. இது உலக அமைதி, நாடுகளின் இறையாண்மை, ஸ்திரத் தன்மை ஆகிய விஷயங்களில் இந்தியா மீது உலக நாடுகள் வைத்திருந்த நம்பிக்கையை குலைத்து வருகிறது.
உலகச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்க ளின் விலை கடுமையாக உயர்ந்தபோது ரஷ்யாவி டமிருந்து மலிவான விலையில் கச்சா எண் ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து சமாளித்து வருகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் இது42 விழுக்காடாகும். உக்ரைன் விஷயத்தில் ரஷ்யா போர் நிறுத்த ஒப் பந்தத்திற்கு வராவிட்டால் அந்நாடு மட்டுமல்ல, அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் கடுமை யான வர்த்தக தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ மிரட்டுகிறது.
அமெரிக்காவின் இந்த அராஜகத்தை எதிர்க்க மூன்றாம் உலக நாடுகளுடன் இணைந்து போராட மோடி அரசு தயாராக இல்லை. ஒரு வேளை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதில் தடை ஏற்பட்டால் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்வோம் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியிருப்பது பொருளாதாரரீதியாக நமக்கு ரஷ்யா உதவுவதை நாமே நிராகரிப்பதாகும்.
இதே போன்று கடந்த 20ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பு உலகில் ஒரு முக்கிய அரசியல் சக்தி யாக மாறியுள்ளது. டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகளிடையே பொதுவான பரிவர்த்தனைக்கு புதிய நாணயத்தை ஏற்படுத்த திட்டமிடும்போது, இந்தியா அதற்கு ஆதரவாக இல்லை. மாறாக டாலரை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று வாதாடுகிறது. இந்தியாவின் இத்தகைய தடு மாற்றங்கள் உலக நாடுகள் மத்தியில் மட்டுமல்ல, நட்பு நாடுகள் மத்தியிலும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.