பி.சம்பத்
மத்தியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1995-96ஆம் ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் பரவ லாகவும், பல மாதங்களாக வும் சாதியமோதல்கள் நடைபெற்றன. அப் போது தோழர் என். சங்கரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார். இக்கலவரங்களை தணிப்பதிலும், படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதி லும் தீர்மானகரமாகப் பணியாற்றிய அரசியல் தலைவர்களில் தோழர் என். சங்கரய்யாவின் பங்களிப்பு பிரதானமானதாகும்.
விரிவான ஆய்வு - ஆலோசனைகள்
இச்சாதிய மோதலில் நூற்றுக்கணக்கா னவர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண் ணிக்கை மிக அதிகம். திருநெல்வேலி, தூத்துக் குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இக்கலவரங்க ளின் தாக்கம் அதிகம் இருந்தது. சிபிஐ (எம்)- இன் மாநில தலித் சப்கமிட்டியின் கன்வீன ராக செயல்பட்டுக் கொண்டிருந்த என்னை கலவரம் பாதித்த பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து கலவர விபரங்களையும், அதற்கான காரணங்களையும் ஆய்வு செய்து கட்சிக்கு அறிக்கை தருமாறு தோழர் என். சங்கரய்யா கேட்டுக் கொண்டார். கட்சியில் அப்போதைய மத்தியக்குழு உறுப்பினராக இருந்த மறைந்த தோழர் கே. வரதராசன் அவர்களும் அதற்கான வழிகாட்டுதல்களை எனக்கு வழங்கினார்.
நான் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்கிருந்த கட்சியின் மாவட்டத் தலைவர்க ளையும் அழைத்துக் கொண்டு கலவரம் பாதித்த பகுதிகளுக்குள் சென்று பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்தோம். கலவரம் ஏற்பட்ட பின்னணி குறித்தும், அதனையொட்டிய சம்ப வங்கள் குறித்தும் விபரங்கள் சேகரித்தோம். பாதிக்கப்பட்ட மக்கள் எப்பிரிவைச் சார்ந்த வர்களாக இருந்தபோதும் அவர்களுக்கு ஆறுதல் கூறினோம். இப்பணிக்காக பல நாட்கள் செலவிட்டோம். இறுதியாக ஒரு அறிக்கை தயார் செய்து கட்சியின் மாநிலக் குழுவிற்கு தலித் சப்கமிட்டி சார்பாக அளித் தோம். அதன் மீது கட்சியின் மாநில செயற் குழுவும், மாநிலக்குழுவும் விரிவாக ஆய்வு செய்து கலவரங்களுக்கான காரணங்களை தொகுத்து அதனை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு ஆலோசனைகளை இறுதிப்படுத் தின. இந்த அம்சங்களை ஒரு அறிக்கையாக கட்சியின் மாநிலக்குழு சார்பாக பத்திரிகை களுக்கு என். சங்கரய்யா வெளியிட்டார். பல் வேறு பத்திரிகைகள், ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டன. இத்தகைய அம் சங்களை உள்ளடக்கி ஒரு மனுவாகவும் தயாரித்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து கட்சி சார்பாக தோழர்கள் என். சங்கரய்யா வழங்கி னார். தோழர் என். சங்கரய்யா கூறிய விபரங்க ளையும், ஆலோசனைகளையும் கலைஞர் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், ஆதங்கத் துடனும் கேட்டதோடு இவற்றின் மீது தக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். உறுதி யளித்தபடியே தமிழகத்தில் அமைதி ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் கலைஞர் மேற்கொண்டார்.
கொடியன்குளம்
இக்காலத்தில் கொடியன் குளத்தில் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் கள் மிகக் கொடூரமானதாகும். எந்த வீடும் அங்கு தாக்குதலிலிருந்து தப்பவில்லை. தாக்குதலை எதிர்பார்த்து இளைஞர்கள் ஊரை விட்டு வெளியேறிய நிலையில், ஊரிலி ருந்த பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தாக்கப்பட்டனர். தாக்கு தலுக்கு மறுநாள் தோழர் என். சங்கரய்யா அப் போதைய தூத்துக்குடி மாவட்ட கட்சியின் செயலாளராக இருந்த என்னை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு உடனடியாக கொடி யன்குளம் சென்று நிலைமைகளை அறியுமா றும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு கட்சி சார்பாக துணை நிற்குமாறும் கேட்டுக் கொண் டார். நான் உட்பட கட்சியின் சில மாவட்ட தலை வர்கள் காவல்துறை தடையை மீறி கொடியன் குளம் சென்றோம். தாக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து - ஆறுதல் தெரிவித்த தோடு “பத்திரிகை அறிக்கை”யும் வெளி யிட்டோம். கொடியன்குளம் சம்பவத்தைவெளி யுலகிற்கு ஊடகங்களின் வாயிலாக முதன் முத லாக வெளிக்கொணர்ந்து சிபிஐ (எம்)தான்.
சிபிஐ (எம்) தனித்தன்மை - முழக்கம்
சிபிஐ (எம்) மட்டுமல்ல பல்வேறு அரசியல் மற்றும் ஜனநாயக இயக்கங்களும் சாதிய மோதல்களை முடிவுக்கு கொண்டு வர பல் வேறு ஆலோசனைகளை வெளியிட்டன. “சாதிய மோதல்களை தவிர்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம்” என்பது பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளின் முழக்கமாக இருந்தது. ஆனால் இம்மோதல்களை கவன மாக ஆய்வு செய்த சிபிஐ (எம்) மோதல்க ளுக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமை கள் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. எனவே மக்கள் ஒற்றுமைக்காக சிபிஐ (எம்)மின் முழக்கம் இதர முதலாளித்துவக் கட்சியின் முழக்கங்களிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தது. அதாவது, “தீண்டாமை கொடுமை களை ஒழிப்போம், சாதிய மோதல்களை தவிர்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம்” என்ற முழக்கமே அது.
வெறும் முழக்கமாக இல்லாமல் சிபிஐ (எம்) சார்பாக பல்வேறு மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்பு மாநாடுகள் நடை பெற்றன. குறிப்பாக பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட சென்னை மற்றும் மதுரையில் நடை பெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களும் கலந்து கொண்டார். இந்த இரு மாநாடுக ளிலும் தோழர் என். சங்கரய்யா அவர்களின் முழக்கம் தமிழக மக்களை, ஜனநாயக சக்தி களை தட்டியெழுப்பும் வகையில் இருந்தது. தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டுமானால் தலித் மக்களுக்கு கௌரவ மான வாழ்க்கை உறுதி செய்யப்பட வேண் டும். அதற்கு நிலச்சீர்திருத்த சட்டங்களை உறுதியுடன் அமல்படுத்தி அம்மக்களுக்கு நிலம் வழங்க வேண்டுமென முழக்க மிட்டார். தீண்டாமை ஒழிப்பு போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என சங்கநாதம் செய்தார் தோழர் என். சங்கரய்யா.
மக்கள் ஆதரவு
இக்காலத்தில் சிபிஐ (எம்) சார்பாக மட்டு மல்லாது, சாதிய மோதல்களுக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வி.தொ.ச., சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உட்பட பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும், மக்கள் ஒற்று மையை முன்னிறுத்தியும் பல்வேறு இயக் கங்களை நடத்தின என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் இத்தகு நடவடிக்கைகள் காரணமாக மக்களி டையே சிபிஐ (எம்) செல்வாக்கு உயர்ந்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அக்காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாவட்ட கவுன்சிலர், மூன்று ஒன்றிய கவுன்சிலர்கள், இரண்டு பேரூராட்சி தலைவர்கள், பல பஞ்சாயத்து தலைவர்கள் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இன்னும் பல பகுதிகளில் கணிசமான வாக்குகள் பெற்றனர். வேறு சில மாவட்டங்களிலும் கணிசமான வாக்குகள் பெற்ற அனுபவம் உண்டு. சாதிய மோதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டவும் பலமுறை தோழர் என். சங்க ரய்யா தமிழக முதல்வர் கலைஞர் அவர்க ளை நேரில் சந்தித்து விவாதித்தார். அதுமட்டு மல்ல கலைஞர் அவர்களும் தோழர் என். சங்க ரய்யாவை தொலைபேசி வாயிலாகவும், நேரி லும் அழைத்து ஆலோசனைகளை மேற் கொண்டார் என்பது வரலாறு. மோதலுக்கு முடிவு கட்டிய பிரச்சனை
அக்காலத்தில் மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் சுதந்திரப் போராட்ட வீர்கள் மற்றும் தியாகிகள் பெயர் சூட்டப்பட்டன. இவற்றை பெருமை மிக்க அடையாளமாக எடுத்துக் கொள்ளாமல் சாதிய சக்திகள் இப்போராளிகளுக்கு சாதிய முத்திரை குத்தி கொண்டாடின அல்லது எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, ஒடுக்கப் பட்ட சமூகத்தை சார்ந்த வீரன் சுந்தர லிங்கம் போக்குவரத்து கழகத்தை தமிழக அரசு அமைத்த போது அதற்கு எதிராக பெரும் சர்ச்சைகளையும், மோதல் போக்கு களையும் உருவாக்கின சில சாதிய சக்திகள். இந்நிலைமை புதிய பிரச்சனைகளை உரு வாக்கியது. இப்பின்னணியில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அனைத் துக் கட்சி கூட்டத்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தோழர் என். சங்கரய்யா உள்பட பல அரசியல் இயக்கங்க ளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தோழர் என். சங்கரய்யா ஆற்றிய உரை தமிழக முதல்வர் உட்பட அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இக்கூட்டத்தில் ஒருமித்த பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றாக மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்க ளுக்கும் பெயர் சூட்டப்படுவதை தவறாக புரிந்து கொண்டுள்ளதால் அப்படி பெயர் சூட்டுவதை கைவிடுவதாக தமிழக அரசு அறி வித்தது. இதனால் இப்பிரச்சனையின் மீது எழுந்த சர்ச்சைகள் - மோதல் போக்குகள் முடிவுக்கு வந்தன.
இரு கால்களால் பயணிப்போம் - உறுதியேற்போம்
மேலும் தமிழக அரசு சார்பாக பள்ளிகள் - அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி என்பது உட்பட பல தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ள உத்தரவிட்டது. இவைய னைத்தும் ஜனநாயக மற்றும் சமூக நீதி சக்தி கள் மத்தியில் அக்காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின என்பது மறுக்க முடியாதது.
எனினும் சாதி உணர்வு - தீண்டாமை என்பது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி யுள்ள அம்சங்களாகும். இவற்றிற்கு எதிராக உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் பல்வேறு போரட்டங்கள் மட்டுமல்ல நடவடிக்கை களும் தேவைப்படுகின்றன. இந்தியாவில் வர்க்க அமைப்போடு சாதிய அமைப்பு பின்னிப் பிணைந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே உருவாகி வளர்ந்து வந்துள்ள சூழலில், வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தோடு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆம். இந்தியாவில் சமூக மாற்றத்திற் கான - சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு ஒரு காலால் அல்ல இரு கால்களால் பய ணித்திட வேண்டும். 1. வர்க்கப் போராட்டம், 2. சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட் டம். இந்த அறைகூவலை முன்னெடுத்துச் செல்ல தோழர் என். சங்கரய்யா நூறாண்டு தினத்தில் நாம் சபதம் ஏற்போம்!.