ஒரு மாதக் குழந்தையையும் கொல்லும் மதவெறி! - ச.வீரமணி
சங் பரிவாரக் கும்பலாலும், சாமானிய மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டி ருக்கும் அதன் ஆதரவாளர்களாலும், சமூகத்தில் தொடர்ந்து சமூகத்தில் ஏற்றப் பட்டுவரும் விஷம் தோய்ந்த மதவெறி நடவ டிக்கைகள்தான் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணங்களாகும். இத்தகைய தாக்குதல்கள் சமீப காலங்களில் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் மீதும் குறிவைத்து ஏவப்பட்டிருப்பது மிகவும் குரூர மான அம்சங்களாகும்
புல்டோசரால் கடை இடிப்பு சிறுவன், பெற்றோர் கைது
மகாராஷ்ட்ராவில் உள்ள சிந்த்துர்க் மாவட் டத்தில் ஒரு சிறிய நகரமான மால்வனில், 15 வய துடைய முஸ்லீம் சிறுவன் ஒருவன் காவல்துறை யினரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் அவனு டைய பெற்றோரும் கைது செய்யப்பட்டிருக்கி றார்கள். அவர்களுடைய பழைய சாமான்கள் விற்கும் சிறிய கடை பிப்ரவரி 25 அன்று மாநக ராட்சியால் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்தி யாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக் கெட் போட்டி நடைபெற்ற அன்று, அந்தச் சிறுவன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டான் என்று விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் இவை அனைத்தும் நடந்தி ருக்கின்றன. அந்த நபர் கொடுத்த புகாரின் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாது, காவல்துறை யினர் அந்தச் சிறுவனின் வீட்டிற்கு வந்து, அவனை பயமுறுத்தி, மிரட்டி, தரதரவென்று இழுத்துச் சென்றிருக்கிறார்கள். அவன் சிறுவனாக இருந்ததால், அவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறான். அவனுடைய பெற்றோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர் கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் (பழைய இந்தியத் தண்டனைச் சட்டத்தின்) 196 (பல்வேறு மதத்தினரிடையே துவே ஷத்தை ஏற்படுத்துதல்), 197 (தேசிய ஒருமைப் பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் குரல் எழுப்புதல்) மற்றும் 3(5) (பொது நோக் கத்தை மேற்கொள்ளும் விதத்தில் பலர் சேர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுதல்) ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
சுதந்திரமாகச் சுற்றும் இந்துமத வெறியர்கள்
அதே சமயத்தில் உண்மையிலேயே முஸ்லீ ம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை உமிழ்ந்திடும் இந்துமத வெறியர்கள் சுதந்தி ரமாகச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக் கிறார்கள். இதற்கு அடுத்த நாள் உத்தரப்பிரதேசத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு சில இந்துமத வெறியர்கள் மோட்டார் சைக்கிள்க ளில் ஊர்வலமாகச் சென்று ஒரு குடும்பத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என்று மிரட்டியி ருக்கின்றனர். அன்றையதினமே அவர்க ளின் பழைய சாமான்கள் விற்கும் கடை புல்டோ சர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டிருக்கிறது.
அதிர்ச்சியால் பயந்து பேச்சிழந்த குழந்தை
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெற்றோ ருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள அதே சம யத்தில், சிறுவன் அவனது மாமாவிடம் ஒப்ப டைக்கப்பட்டிருக்கிறான். இருப்பினும் அவர்க ளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் விளை வாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்கள் இன்னமும் முடியவில்லை. அவர்க ளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்களின் குழந்தை அதிர்ச்சியடைந்து, பயந்துபோய், பேச மறுக்கிறது.
பாஜக எம்எல்ஏவின் வெறிக் கூச்சல்
உள்ளூர் பாஜக எம்எல்ஏ-வான நிலேஷ் ராணே என்பவர், சிறுவனின் தந்தை ஒரு ஜிஹாதியாக இருக்கக்கூடும் என்றும், எனவே அவர் மிகவும் சந்தேகத்திற்குரிய நபர் என்றும், அவரை மாவட்டத்திலிருந்து வெளியேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் கூறி, இந்தப்பிரச்சனையிலிருந்து அரசியல் ஆதாயம் அடைவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார். இவ்வாறாக இப்போது இளம் சிறார்கள் மிகவும் கொடூரமானமுறையில் மதவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கக்கூடிய அதே சமயத்தில், இதுபோன்ற கொடூரச் சம்ப வங்களுக்குக் காவல்துறையினரும் மனிதாபி மானமற்ற முறையில் உதவி செய்து, சட்டப்பூர்வ மாக கேள்விக்கு உட்படுத்தக்கூடிய விதத்தில் முஸ்லீம்களைக் கைது செய்வதும், உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை உதாசீனம் செய்துவிட்டு, அவர்களின் கடைகளை புல்டோசர் கள் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்குவதும் மிகவும் கவலை அளிக்கிறது. ஒரு மாதக் குழந்தையை நசுக்கிக் கொன்ற கும்பல் மால்வன் சம்பவத்தைத் தொடர்ந்து மற்று மொரு கொடூரமான சம்பவம் நடந்திருக்கிறது. மார்ச் 2ஆம் தேதியன்று, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள இம்ரான் என்பவரின் வீட்டைக் காவல்துறையினர் நள்ளிர வில் சோதனை செய்துள்ளனர். அவ்வாறு சென்ற காவல்துறையினரில் பெண்கள் யாரும் இல்லை. இம்ரானின் மனைவி ரசிதா, தனது ஒரு மாத குழந்தை அலிஷாதாவுடன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். காவல்துறையினர் ரசிதாவை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்திருக்கின்றனர். சிலர் படுக்கையில் குதித்து, படுத்திருந்த குழந்தையை நசுக்கி இருக் கின்றனர். குழந்தை உடனடியாக இறந்துவிட்டது. எவ்வித வாரண்டோ அல்லது முன்னறிவிப்போ எதுவுமின்றி காவல்துறையினர் இவ்வாறு குரூரமான முறையில் செயல்பட்டிருக்கின்றனர். இவ்வளவுக்கும் மேற்படி இம்ரான் ஒரு தினசரி கூலித் தொழிலாளியாவார். அவருக்கு எதிராக எந்தவிதமான குற்றப் பதிவும் கிடையாது.
அப்பாவிக் குழந்தை கொலை ஆபத்தான அறிகுறி
அந்தக் குடும்பத்தினர் காவல் நிலை யத்தில் புகார் அளிக்க முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அதனை ஏற்க மறுத்த னர். மறுநாள், இரு சமூகங்களையும் சேர்ந்த பல கிராம மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலு வலகம் முன் போராட்டம் நடத்தினர். அதன்பின் னர் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் மத்தி யில் புரையோடியிருக்கின்ற இந்துத்துவா மத வெறி உணர்வு காவல்துறையினரை ஆயு தங்களுடன் ஓர் அப்பாவி குழந்தைக்கு எதிராக இதுபோன்ற குரூரமான குற்றத்தைச் செய்ய வைத்திருப்பது ஓர் ஆபத்தான அறிகுறியாகும். சிபிஎம் தலைவர்கள் நேரில் ஆறுதல் மார்ச் 4 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் ராஜஸ்தான் மாநில செய லாளர் கிஷன் பாரிக் ஆகியோர் தலைமையி லான குழு ஆல்வாரில் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினரைச் சந்தித்து, காவல்துறையின ரால் மேற்கொள்ளப்பட்ட இக்குரூர குற்றத்தை உறுதிப்படுத்தியது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.
இவ்வாறு பாஜக ஆட்சியாளர்கள் உச்சநீதி மன்றத்தின் உத்தரவுகளையே சிறிதும் மதிக்காது அதனை மீறத் தயாராக இருக்கும் சூழ்நிலையில், காவல்துறையினர் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு எதிராகககூட குற்றங்களைச் செய்திடும் குரூரம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்வ தும், சங் பரிவாரக் கும்பல்களின் மதவெறி அரசி யலுக்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பினை உருவாக்குவதும் இன்றைய தேவையாகும். ஆல்வார் வன்முறை வழக்கைப் பொறுத்த வரையில், ஏழை முஸ்லீம் குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படுவதை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு நின்று உறுதி செய்திட வேண்டும்.