“யார் கீழே போட்டாலும் நாம் செங்கொடியை கீழே போட மாட்டோம்!” - அ.அன்வர் உசேன்
இது தோழர் பி.டி.ரணதிவே அவர்களின் கூர்மையான - வலுவான கூற்று ஆகும். 1991ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சோசலிசம் பின்னடைவை சந்தித்து சோவியத் யூனியன் எனும் தேசம் வீழ்ந்த போது, பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தம்மைத் தாமே கலைத்துக் கொண்டன. அப்பொழுதுதான் தோழர் ரணதிவே அவர்கள் யார் செங்கொடியை கீழே போட்டா லும் நாம் செங்கொடியை கீழே போட மாட்டோம் என உறுதியாக கூறினார். 1992ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்தியக் குழு கூட்டத்தில் உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவது எனவும் மார்க்சியம் உயிர்ப்புடன் வலம் வருகிறது என்பதை நிரூபிப்பது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் காரல் மார்க்சின் 175ஆவது பிறந்த தினத்தில்- 1993ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இதன் மூலம் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் மார்க்சிய சித்தாந்தத்து க்கும் ஒரு மிகப்பெரிய கடமையை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றியது எனில் மிகை அல்ல.
சோசலிசத்தின் பின்னடைவு
முதலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளி லும் பின்னர் சோசலிசத்தின் தாய் மண்ணான சோவியத் யூனியனிலும் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்தது. இதன் விளை வாக உலகம் முழுவதும் மூன்றுவிதமான தாக்கங்கள் ஏற்பட்டன. கம்யூனிசத்தின் எதிரிகள் புளகாங்கிதம் அடைந்தனர். பிரான்சிஸ் ஃபுகுயாமா எனும் சமூக ஆய்வாளர் “வரலாறு முடிந்துவிட்டது; முதலாளித்துவம்தான் மனித குலத்தின் உச்சபட்ச நாகரிகம்” என எழுதினார். மார்க்சி யத்துக்கு மரணமில்லை என்று நாம் சொன்ன பொழுது கம்யூனிசத்துக்கு எதிராக நஞ்சை மட்டுமே கக்கிய துக்ளக் சோ ராமசாமி “இந்திய கம்யூனிஸ்டுகள் செத்த பிணத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்” என இழிவுபடுத்தினார். முதலாளித்துவத்தின் பிரச்சார புயலால் பாதிக்கப்பட்ட பல சாதா ரண மக்களும் மார்க்சியம் கல்லறைக்கு சென்றுவிட்டது என்றே எண்ணினர். இரண்டாவது பிரிவினர் நேற்றுவரை கம்யூ னிச ஆதரவாளர்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகளாக மாறினர். இவர்கள் மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு கம்யூனிச ஆதரவாளர்களாக மாறியவர்கள் அல்ல. தமது சொந்த நலனுக்காக அல்லது முன்னேற்றத்துக்காக அல்லது புகழுக்காக கம்யூனிச ஆதரவாளர்களாக ஆனவர்கள். தனி மனிதர்கள் மட்டுமல்ல; பல கம்யூ னிஸ்ட் கட்சிகளும் காணாமல் போயின. சில கட்சிகள் செங்கொடியை கிழே போட்ட னர்; சிலர் அரிவாள் சுத்தியலை கை கழுவி னர்; சிலர் கம்யூனிஸ்ட் என்ற பெயரை அகற்றினர்; சிலர் கட்சி அமைப்பின் உயிர்நாடி கொள்கையான ‘ஜனநாயக மத்தியத்துவம்’ என்பதை தூக்கி எறிந்தனர். மூன்றாவது பிரிவினர் சோசலிசம் பின்ன டைவை சந்தித்த பொழுதும் முதலாளித்து வம் வரலாறு காணாத சித்தாந்த மற்றும் அரசியல் தாக்குதலில் ஈடுபட்ட பொழுதும் மார்க்சியத்துக்கு தோல்வி இல்லை என கரு தியவர்கள். மனிதனை மனிதன் சுரண்டுவது நீடிக்கும் வரை மார்க்சியத்தின் தேவை என்ப தும் இருக்கும் என மதிப்பீடு செய்தவர்கள். இந்த வழியில் முதலாளித்துவமும் நிலபிர புத்துவமும் இருக்கும் வரை மார்க்சியத்தின் தேவை உள்ளது என வலுவாக மதிப்பீடு செய்த உலகின் முதல் மாபெரும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும்.
உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டம்
இந்த சூழலில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது மாநாடு 1992இல் சென்னையில் நடந்தது. சோசலிச பின்னடைவு குறித்து “சில சித்தாந்த பிரச்ச னைகள் குறித்து தீர்மானம்” எனும் ஆவணம் நிறைவேற்றப்பட்டது. சோவியத் யூனியன் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு செய்யப்பட்ட மிக சிறந்த ஆவ ணங்களில் இது ஒன்று எனில் மிகை அல்ல. சோவியத் பின்னடைவுக்கான காரணங்க ளை ஆய்வு செய்யும் இந்த ஆவணம், கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கு என்ன படிப்பினைகள் என்பதையும் விளக்குகிறது. இந்த படிப்பி னைகளின் நீட்சியாகவே உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டத்தை நடத்துவது என 1992ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்தியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இதற்கான தயாரிப்பு பணிக்காக தோழர் சுர்ஜித் அவர்கள் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் பய ணித்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த கருத்து பரி மாற்றத்தின் அடிப்படையில்தான் 1993ஆம் ஆண்டு மே மாதம் காரல் மார்க்சின் 175ஆவது பிறந்த தினத்தில் கொல்கத்தாவில் இந்த கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தப்பட்டது. “இன்றைய உலக மும் மார்க்சியத்தின் தொடரும் உயிர் துடிப்பும்” (Contemporary World and Validity of Marxism) எனும் தலைப்பில்தான் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வியட்நாம்/ கியூபா/ வட கொரியா ஆகிய சோசலிச நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துச் செய்தியை அனுப்பியது. தனியாக கொரியாவின் மகத்தான தலைவர் கிம்-இல்-சுங் வாழ்த்து செய்தியை அனுப்பி னார். வங்கதேசம்/ நேபாளம்/ பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகளிலிருந்தும் துருக்கி/ ஈரான்/ சிரியா ஆகிய மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தும் பெல்ஜியம்/ பிரிட்டன்/ பிரான்ஸ்/ ஜெர்மனி/ கிரீஸ்/ போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கம்யூ னிஸ்ட்/ தொழிலாளர் கட்சிகள் பங்கேற்ற னர். மேலும் கனடா/ அமெரிக்கா/ பிரேசில்/ மெக்சிகோ ஆகிய அமெரிக்க கண்டங்களி லிருந்தும் தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கு கொண்டது. இத்தாலி/ மொரீஷியஸ்/ ரஷ்யா/ சைப்ரஸ் ஆகிய நாடு களின் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாழ்த்து செய்திகளை அனுப்பின. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தோழர்கள் சுர்ஜித்/ ஜோதிபாசு/ பி.ராமச் சந்திரன்/ சீத்தாராம் யெச்சூரி பங்கேற்றனர்.
மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்த கருத்தொற்றுமை
இந்த கருத்தரங்கம் என்ன சாதித்தது? தோழர் சுர்ஜித் கீழ்கண்டவாறு குறிப்பிடு கிறார்: Fமார்க்சியம் ஒரு படைப்பாக்க அறிவியல்.
Fஅது முதன் முதலில் முன்மொழியப்பட்ட பொழுது எப்படி உயிர்ப்புடன் இருந்ததோ அதே போலவே இப்பொழுதும் உள்ளது.
Fஇப்பொழுதும் உலகம் முழுவதுமுள்ள முற்போக்கு சக்திகளின் “நடைமுறை களுக்கு வழிகட்டியாக” மார்க்சியம் உள்ளது.
Fசோசலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு என சொல்லப்படுவது சோசலிசத்துக்கோ அல்லது மார்க்சியத்துக்கோ ஏற்பட்ட பின்னடைவு அல்ல. குறிப்பிட்ட தேசத்தில் சோசலிசம் அமலாக்கப்பட்ட நடை முறையில் ஏற்பட்ட தவறு அது.
Fமார்க்சியத்திலிருந்து விலகிச் சென்ற தால் ஏற்பட்ட தவறு. எனவே இது மார்க்சியம் அல்லது சோசலிசம் எனும் கோட்பாடு களுக்கு தோல்வி அல்ல.
Fஅனைத்து கம்யூனிஸ்ட கட்சிகளுக்கும் தொழிலாளர் கட்சிகளுக்கும் சோசலி சம்தான் இப்பொழுதும் இலக்காக உள்ளது.
Fமனிதனை மனிதன் சுரண்டும் செயலை அடிப்படையாகக் கொண்டது முதலா ளித்துவம். Fஎனவே முதலாளித்துவம் இன்றைய சமூகத்தின் நோய்களுக்கு மருந்து தர இயலாது.
Fஏகாதிபத்தியம் மனித குலத்தின் எதிரியாக இன்றைக்கும் உள்ளது.
Fஏகாதிபத்தியத்துக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்றுபடுவது அவசியம்.
Fஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களிலி ருந்து சோசலிச நாடுகளை பாதுகாப்பது அவசியம்.
Fமார்க்சியத்தை உயர்த்தி பிடிக்கும் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழி லாளர் கட்சிகளும் கோடிக்கணக்கான தொ ழிலாளர்களையும் ஏனைய உழைக்கும் மக்களையும் சோசலிசம் நோக்கி வழி நடத்தி செல்வர்.
-இந்த பொதுவான கருத்தொற்றுமை இந்த கருத்தரங்கில் உருவானது. மார்க்சி யம் உயிர்த்துடிப்புடன் செயல்படும் வல்லமை பெற்றது என்பதை இந்த கருத்தரங்கில் உரு வான கருத்தொற்றுமை நிரூபித்தது. சோசலி சம் பின்னடைவை சந்தித்த இரண்டு ஆண்டு களுக்குள், முதலாளித்துவத்தின் பிரச்சார பீரங்கிகள் சோசலிசத்துக்கு எதிராக அள வில்லாத நச்சை கக்கிக் கொண்டிருந்த பின்னணியில் இத்தகைய கருத்தொற்றுமை உருவாகி மார்க்சியத்தை உயர்த்தி பிடிப்பது என்பது அசாதாரண செயல் எனில் மிகை அல்ல. சோசலிசம் பின்னடைவை சந்தித்து 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் முதலாளித்துவம் மக்களின் எந்த பிரச்சனை யையும் தீர்க்கவில்லை. பசி/ பட்டினி/ வறுமை/ வேலையின்மை/ சமூக உறுதியற்ற தன்மை ஆகிய அனைத்தும் தொடர்வது மட்டுமல்ல; இந்த பிரச்சனைகள் ஆழமாகி யுள்ளன.
என்வே உழைக்கும் மக்கள் மீண்டும் சோசலிசம் நோக்கி தமது கவனத்தை திருப்ப தொடங்கியுள்ளனர். ரஷ்யாவில் நடத்தப் படும் பல கருத்து கணிப்புகளில் 70%க்கும் அதிகமான மக்கள் சோவியத் யூனியன் மீண்டும் திரும்ப வேண்டும் என வெளிப் படுத்துகின்றனர். கம்யூனிஸ்ட் அறிக்கையும் மூலதனமும் கூடுதலாக விற்பனையா கின்றன. “வரலாறு முடிந்துவிட்டது; முதலாளித்துவம்தான் மனித குலத்தின் உச்சபட்ச நாகரிகம்” என கூறிய பிரான்சிஸ் ஃபுகுயாமா மார்க்சின் சில கருத்துகள் சரியா னவையே என மாற்று தாளத்தை போட வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெ ரிக்க இளைஞர்களிடையே சோசலிச கருத்துகள் வலுவடைந்துள்ளன. மார்க்சியத்துக்கு மரணமில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய உலக கம்யூ னிஸ்ட் கட்சிகளின் கூட்டம் மார்க்சியத்தை உயர்த்திபிடிப்பதில் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் என 1993ஆம் ஆண்டு தோழர் சுர்ஜித் எழுதினார். அது உண்மை என நிரூபணமாகி வருகிறது.