என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஒன்றிய - மாநில அரசுகள் தலையிட சிஐடியு வலியுறுத்தல்
சென்னை, ஏப்.20 - நெய்வேலி லிக்னைட் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய - மாநில அரசுகள் தலையிட வேண்டுமென சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் தின் கூட்டு நிறுவனமான என்டிபிஎல் நிறு வனம் 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 1000 மெ.வா மின் உற்பத்தி செய் யும் திறன் கொண்ட இந்நிறுவனத்தில், 1400-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலா ளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதிய மும், சட்ட சலுகைகளும் வழங்கப்பட வேண் டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய கிளை சார்பில், மத்திய தொழிலாளர் இணை ஆணையர் முன்பு புகார் அளிக்கப்பட்டது. புகார் மீதான விசாரணையில் என்டிபிஎல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கழகத்தில் பணி செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒப்பந்த அடிப்படையிலான சம்பளமும், சலுகைகளும் என்டிபிஎல் தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டும். நிலக்கரியை கையாளும் பகுதிகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு இந்திய நிலக்கரி கழகத்தில் பணிசெய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய தொழிலாளர் இணை ஆணையர் (சென்னை) 2021 மே 30 அன்று உத்தரவை பிறப்பித்தார். ஆனால் என்டிபிஎல் நிறுவனம் இந்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கோரியது. தடை வழங்க மறுத்த நீதி மன்றம், தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் 2021 ஜூன் 1 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தர விட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாத தால் தற்போது என்.டி.பி.எல் நிர்வாகத் திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் மார்ச் 4 அன்று வழங்கிய இறுதி தீர்ப்பில் தொழிலாளர் துறை இணை மண்டல ஆணையர் வழங்கிய உத்தரவை 2021 ஜூன் 1 முதல் அமலாக்க உத்தரவிட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக் கில் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே மாவட்ட வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலாளர் மண்டல ஆணையர் முன்பு நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தையை ஏற்று கொண்ட நிர்வாகம், நீதிமன்ற உத்த ரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தொழி லாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்.17 ஆம் தேதி நெய்வேலி லிக்னைட் கழக உயர் அதிகாரி களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சிஐ டியு, தொமுச பேரவை சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது சமரச தீர்வு எட்டப் படாததால் ஏப்ரல் 17 அன்று இரவு பணியி லிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சனையில் ஒன்றிய - மாநில அரசு கள் தலையிட்டு நெய்வேலி லிக்னைட் நிர்வா கம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டு மென சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.