articles

img

அமைப்பாளராக! பத்திரிகை ஆசிரியராக!

அமைப்பாளராக!  பத்திரிகை ஆசிரியராக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமை குழு  உறுப்பினராக இருந்த தோழர் ஹனுமந்த ராவ் அவர்கள் 1917ஆம் ஆண்டு பிறந்தார். அவர் விடுதலை போராட்டம்/ ஏகாதி பத்தியத்துக்கு எதிரான போராட்டம் / சமூக சீர்திருத்த போராட்டம் எனும் மூன்று தளங்களில் இயங்கினார். 1937ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்.  

ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக களத்தில்

தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தின் பொழுது ஆந்திராவின் ஏனைய பகுதி மக்களி டையே குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் தெலுங் கானா போராட்டத்துக்கு ஆதரவான இயக்கத்தை கட்டுவதில் பெரும் பங்காற்றினார். காந்திஜி படு கொலை செய்யப்பட்ட பொழுது விஜயவாடாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு முஸ்லீம்தான் காந்தி ஜியை கொலை செய்தார் என பொய் பரப்பி கலவரங்களை தூண்டியது. தோழர் ஹனுமந்த ராவும் ராஜேஸ்வர ராவும் மற்ற தோழர்களுடன் இணைந்து களத்தில் இறங்கி ஆர்.எஸ்.எஸ்.சின் நீசத்தனமான சூழ்ச்சியை முறியடித்து சிறு பான்மை முஸ்லீம் மக்களை காப்பாற்றியது மட்டு மின்றி மத ஒற்றுமையையும் நிலைநாட்டினர்.

 கடலூர் சிறையில்

1948இல் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் கட்சியை காப்பாற்றுவதில் அவரது பங்கு அளப்பரி யது. அவர் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பொழுது 1949ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது அங்கு ஏ.கே.ஜி., எம்.ஆர். வெங்கட்ராமன் உட்பட பல தலைவர்கள் இருந்தனர். அரசியல் கைதி களின் உரிமைகளுக்காக மற்ற தலைவர்களுடன் சேர்ந்து 28 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுதுதான் கடலூர் சிறையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மீண்டும் 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் ஒன்றுபட்ட கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார்.1953ஆம் ஆண்டு மத்தியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார். திருத்தல்வாதத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த 32 உறுப்பினர்களில் ஹனுமந்தராவும் ஒருவர்.  

மார்க்சியம் பரப்பிய தலைவர்

முதலில் திருத்தல்வாதத்துக்கு எதிராகவும் பின்னர் இடது சீர்குலைவுவாதத்துக்கு எதிராகவும் கடும் போராட்டம் நடத்தினார். 1964 முதல் 1982 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் ஆந்திரா மாநிலக் குழுச் செயலாளராக சிறப்பாகச் செயல்பட்டார். 1964ஆம் ஆண்டு மத்தியக் குழுவுக்கும் 1998 ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். ஆந்திராவில் கம்யூனிஸ்ட் பத்திரிகைகளை வளர்த்தெடுப்பதில் அவர் மிக  சிறப்பான பங்கை ஆற்றினார். தனது உடல் நிலை மோசமாக பாதிக்கும் வரை கட்சி பத்திரி கையான பிரஜாசக்தியின் ஆசிரியராக பணி யாற்றினார். தனது ஏராளமான புத்தகங்கள் மற்றும் பிரசுரங்கள் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை ஆந்திராவில் பரப்புவதில் முக்கிய பங்கை ஆற்றினார்.  தலா ஒருமுறை சட்டமன்றம்/ சட்டமன்ற மேலவை/ மாநிலங்களவை உறுப்பினராக பங்காற்றிய தோழர் ஹனுமந்தராவ் 5 ஆண்டு கள் தலைமறைவு வாழ்வும் 4.5 அண்டுகள் சிறை வாழ்வும் சந்தித்தார். அவரது இணையர் உதயம் அவர்கள் மாநில மாதர் சங்கச் செயலாளராகவும் கட்சியின் முக்கிய ஊழியராகவும் பணியாற்றி னார். தனது இறுதி மூச்சுவரை பசவபுன்னையா நினைவு இல்லத்தின் முதன்மை அறங்காவ லராக செயல்பட்டார்.  தோழர் ஹனுமந்தராவ் 2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் நாள் காலமானார்.