articles

img

கடலூரில் 9000 முந்திரி மரங்கள் அழிப்பு - டி.ரவீந்திரன்

கடலூரில் 9000 முந்திரி மரங்கள் அழிப்பு

கடலூர் மாவட்டம் மலையடிக் குப்பம், பெத்தாங்குப்பம் கிரா மங்களை சார்ந்த ஏழை விவசா யிகளின் 165 ஏக்கர் அனுபவ நிலங்களிலி ருந்த 9000 பலன்தரும் மரங்களை மாவட்ட வருவாய்த்துறையினர் வெட்டி அழித்து விட்டனர். தரிசு நிலம், இது அரசு நிலம், வளர்ச்சிப் பணிகளுக்கு நிலம் தேவை, 165 ஏக்கர் நிலங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் வெளியேற வேண்டும் என்று 1905 - தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்படி வருவாய்துறையினர் 145 குடும் பங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.  நோட்டீஸ் கொடுத்த கையுடன் திடீரென்று 29.01.2025 அன்று காலை 200க்கும் மேற்பட்ட போலீசாருடன் பொக்லின், புல்டோசர்கள் உள்ளிட்ட  கனரக வாகனங்களுடன் வருவாய்த்துறை யினர் மலையடிக்குப்பம், பெத்தாங் குப்பம், கொடுக்கம்பாளையம் விவசாயிக ளின் அனுபவ நிலங்களில் இருந்த முந்திரி, பலா, பனை, தென்னை மரங்களை  பொக்லின் மூலம் வேரோடு சாய்த்து அழித்துவிட்டனர். 164 ஏக்கர் நிலத்தில் 144 ஏக்கர் நிலத்தில் இருந்த 8400 முந்திரி மரங்கள், வேம்பு 175, தேக்குமரம் 95, பலா 55, புளியமரம் 35, பென்சில்மரம் 1500, தென்னை மரங்கள் 35 என வெட்டி அழித்து விட்டனர். ஐந்து ஏக்கரில் இருந்த துளசி மற்றும் பூச் செடிகளையும், மூன்று ஏக்கரில் இருந்த வாழை மரங்களையும், நூறுவயதுக்கு மேலான நல்ல பலன்தரும் மரங்களையும் அரசு அதிகாரிகள் வெட்டி அழித்துவிட்டனர்.  

மொட்டைக் காடான முந்திரிச் சோலை

மரங்களை வெட்டாதீர்கள் என்று தடுத்து கதறிய பெண்களை, மக்களை காவல்துறை கைது செய்தது. எங்கள் மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள் என்று கேட்ட மக்களிடம் “இரண்டு நாட்களுக்கு முன்பு  உங்களை வெளியேறுமாறு போஸ்டர் ஒட்டி யுள்ளதை நீங்கள் பார்க்கவில்லையா” என்று அதிகாரிகள் ஏளனமாகக் கேட்டுள்ள னர். ஒரு முந்திரிமரம் ஆண்டுக்கு பதி னைந்தாயிரம் ரூபாய் வரை பலன் தரும். விவசாயிகளுக்கு சொந்தமான 9000 மரங்க ளை மாநில அரசு அதிகாரிகள் அழித்துள்ள னர். முந்திரிச் சோலையாக இருந்த இடத்தை மரங்களை வெட்டி அழித்து மொட்டைக்காடாக மாற்றிவிட்டனர்.  தென்னாற்காடு மாவட்டம் உருவான காலத்திலேயே இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பெத்தாங்குப்பம், மலைய டிக்குப்பம், கொடுக்கம்பாளையம் பகுதி களில் ஏழை மக்கள் குடியேறி வீடுகளை கட்டி, தரிசு நிலங்களை மேம்படுத்தி முந்திரி மரங்களை வைத்து ஆளாக்கி யுள்ளனர். 91 வயது செல்வராஜூ என்ற முதியவர் “இந்த முந்திரி மரம் என் தாத்தா வைத்தது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.  இப்பகுதி கிராம மக்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை வழங்கப் பட்டதும், மாநில அரசு அடிப்படை வசதி களையும், 77 ஊராட்சி சாலைகள், 13 நீர்த் தேக்க தொட்டிகள், 24 அரசு கட்டிடங் கள், ஊராட்சி துவக்கப்பள்ளி உட்பட கட்ட மைப்பு வசதிகளையும் மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள் ளது. தெருவிளக்கு, வீடுகளுக்கு மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டிய தரிசு நிலங்களுக்கு நிலப்பட்டாவும், வீட்டுமனைப்பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.  மலையடிக்குப்பம், பெத்தாங்குப்பம் உள்ளிட்ட கிராமத்து மக்கள் அனுபவ நிலங்களுக்கு நிலப்பட்டா கேட்டு அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்துள் ளனர். மேற்படி விவசாயிகளின் புல.எண். 207இல் உள்ள அனுபவ நிலங்களுக்கு 171 ஏக்கருக்கு இலவச நிலப்பட்டா வழங்க லாம் என அரசு வழக்கறிஞர் 25.08.2010 அன்று அரசுக்கு கருத்துரை வழங்கி கடிதம்  எழுதியுள்ளார். அரசு நிலமாக இருந்தா லும் 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு  இடையூறும் இன்றி தொடர்ந்து சுவாதீ னத்தில் இருந்தால் காலவரையறை சட்டத்தின்படி நிலத்தில் இருக்கும் நபர் அனுபோக உரிமை உடையவர்.  F    மரங்கள் அழிக்கப்பட்ட விவசாயிகளின் அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு நீண்டகாலமாக விவசாயிகள் வருவாய்த் துறையினருக்கு மனு கொடுத்து வந்துள் ளனர்.  F    மலையடிக்குப்பம், பெத்தாங்குப்பம் புல எண் 207இல் விவசாயிகளின் அனுப வத்தில் உள்ள 171 ஏக்கர் தரிசு நிலங்க ளுக்கு இலவச பட்டா வழங்கலாம் என்று 25.8.2010 அன்று அரசு வழக்கறிஞர் மாவட்ட வருவாய்த்துறைக்கு கருத்துரை வழங்கி கடிதம் அனுப்பியுள்ளார்.  F    அரசு நிலமாக இருந்தாலும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு இடை யூறும் இன்றி தொடர்ந்து சுவாதீனத்தில் இருந்தால் காலவரையறை சட்டத்தின் படி நிலத்தில் இருக்கும் நபர் அனு போக உரிமை உடையவர்.  F    அரசாணை (நிலை) எண்.366, 08.10.2009 தேதியிட்ட தமிழ்நாடு அரசு ஆணைப்படி  தொடர்ந்து அரசு நிலத்தில் பத்து ஆண்டு களுக்கு மேலாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென்று உள்ளது. ஆனால் மேற்படி கிராமங்க ளில் புல எண்.207இல் இருபது ஏக்கர் தரிசு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு 150 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. வீட்டுமனைப்பட்டா, விவசாய நிலப் பட்டா பெறும் தகுதி இருந்தும் பட்டாவை  தராமல் ஏழை மக்களை 150 ஆண்டு களாக அலைக்கழித்தது மாநில அரசும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தான்.  F    ஏழை உழைப்பாளி மக்களுக்கு சொந்த மான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 9000 பலன் தரும் மரங்களை மாநில அரசே அழித்ததை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  F    விவசாயிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. வழக்கை விசாரித்த இரு நீதி பதிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் பதி னைந்து நாட்களுக்குள் விவசாயிக ளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆட்சி யர் பதிலில் திருப்தி இல்லையெனில் விவ சாயிகள் மேல் முறையீடு செய்திட பத்து நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளார்.  F    மாநில அரசு, விவசாயிகளை நிலவெளி யேற்றம் செய்திடும் முயற்சியை கைவிட்டு அனைவருக்கும் நிலப் பட்டா, வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு சொந்த மான வெட்டப்பட்ட 9000 முந்திரி மரங்கள் உட்பட அனைத்துக்கும் உரிய இழப் பீட்டை மாநில அரசு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.