articles

img

விவசாயத் தொழிலாளர்களின் நிலையற்ற வாழ்க்கை - பீப்பிள்ஸ் டெமாக்ரசி

விவசாயத் தொழிலாளர்களின் நிலையற்ற வாழ்க்கை

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள மணிக் கொன்ஷெத்வாட் என்ற விவசாய தொழிலாளி ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே விவசாய நிலங்களில் வேலை செய்கிறார். ஜூன்-ஜூலையில் சோயாபீன் அல்லது பருத்தி சாகுபடிக்கும், ஆகஸ்ட்-செப்டம்பரில் களை எடுப்பதற்கும், டிசம்பர்-ஜனவரியில் அறு வடைக்கும் அவர் வேலை செய்கிறார். ஆனால் இந்த வேலை தற்காலிகமானது, ஒவ்வொரு மாதமும் வெறும் சில நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. அவரது கிராமத்தில் விவசாயத்தில் கிடைக் கும் குறைந்த வேலை நாட்கள் குடும்பத்தின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. ஆண்டின் மீத முள்ள காலத்தில், அவர் தலைச்சுமை தொழி லாளியாக, குயவராக, கட்டுமானத் தொழிலாளி யாக பல்வேறு தினக்கூலி வேலைகளை மேற்கொள்கிறார். அவரது குடும்பத்தின் சில கால்நடைகளும் அவர்களின் வருமானத்திற்கு பங்களிக்கின்றன. மாறிவரும் விவசாயச் சூழல் இந்த உதாரணங்கள் இந்தியாவில் வேலை யின் தன்மை மற்றும் கிராமப்புற தொழிலாளர் களின் நிலையற்ற வாழ்நிலையை விளக்கு கின்றன. விவசாயத் தொழிலாளர்கள் விவசாய த்தில் சுருங்கிவரும் வேலைவாய்ப்புச் சூழலை எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்களை இடம்பெயரச் செய்யும் தொழில்நுட்பத்தின் வெகு வேகமான பயன்பாடு மற்றும் விவசா யத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த மாற்றத்திற்கு பங்களிக்கின்றன. முக்கிய புள்ளிவிவரங்கள் விவசாயம் இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறைகளில் ஒன்றாக உள்ளது. வேலை வாய்ப்பில் இத்துறையின் பங்கு 2017-18-ல் 44.1 சதவீதத்திலிருந்து 2023-24-ல் 46.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த தொழிலாளர்கள் 48.17 கோடி, இதில் 72% கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்; மற்றும் பாதிக்கும் மேல் - 54.6% அல்லது 26.3 கோடி தொழிலாளர்கள் - விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் என்பது விவசாயிகள் மற்றும்  விவசாயத் தொழிலாளர்களை உள்ளடக்கியது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த குழுக்களுக்கு இடையேயான ஒரு முக்கிய வேறுபாடு நில உடைமையில் உள்ளது.  விவசாயிகள் நிலத்தை சொந்தமாக வைத்திருப் பவர்கள், குத்தகைக்கு எடுப்பவர்கள், அல்லது  ஒப்பந்தத்தின் கீழ் இயக்குபவர்கள்; அதே சமயம் விவசாயத் தொழிலாளர்கள் மற்றவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பணம் அல்லது பொரு ளுக்காக வேலை செய்பவர்கள். இந்தியாவில் 1961-ல், ஒவ்வொரு 100 விவ சாயிகளுக்கும் சுமார் 33 விவசாயத் தொழி லாளர்கள் இருந்தனர்; 2011-ல், இந்த விகிதம் தலைகீழாக மாறி, ஒவ்வொரு 100 விவசாயி களுக்கும் சுமார் 121 விவசாயத் தொழிலாளர் கள் உள்ளனர். விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் விவசாயத் தொழிலாளர்கள் கிராமப்புற இந்தியாவில் மிகவும் விளிம்புநிலையில் உள்ள  மற்றும் பாதிக்கப்படக்கூடிய வர்க்கத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்றனர். வளங்களை இழந்து, பெரும்பாலானவர்கள் நிலமற்ற வர்கள், உற்பத்தி வழிமுறைகளை அணுக முடி யாதவர்கள்; மற்றும் உயிர்வாழ்வதற்கு தங்கள் உழைப்பை மட்டுமே நம்பியிருப்பவர்கள். அவர்களின் சமூக-பொருளாதார நிலை  அவர்களை மிகவும் கடுமையான சுரண்ட லுக்குள் தள்ளுகிறது; பெரும்பாலும் நிலக்கிழா ர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியங்களை - பொதுவாக சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதி யத்திற்கும் குறைவாக - ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலரும் முறையான வீட்டுவசதியை கொண்டிருக்கவில்லை; இது அவர்களின் நிலையற்ற வாழ்க்கை நிலைமை களை மேலும் தீவிரப்படுத்துகிறது. விவசாய பெண் தொழிலாளர்கள், குறிப்பாக, பாலின அடிப்படையிலான பாகு பாடு, சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்; மேலும் அதே வேலைக்கு ஆண்களை விட குறிப்பிடத்தக்க அளவு குறைவாக ஊதியம் பெறுகின்றனர். விவசாய நெருக்கடியின் தாக்கம் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் விவ சாயிகள் படிப்படியாக ஆழமான வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள நிலைமை; குறிப்பாக புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பிறகு. இந்த கொள்கை களுடன், விவசாயத்திற்கான அரசின் ஆதரவு குறைந்துள்ளது; இது உள்ளீட்டு செலவுகளின் கூர்மையான உயர்வுக்கு வழிவகுத்துள்ளது; மேலும் விவசாய உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அல்லது கொள்முதல் உத்தரவாதம் இல்லை. இன்று, சந்தை நிச்சயமற்ற தன்மைகள் இயற்கையை விட கடுமையானவை. இலாபம்  மட்டுமே ஒரே இயக்கும் சக்தியாக மாறும்போது,  விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதா ரங்கள் நிலையற்றதாக, நிர்க்கதியாக விடப்படு கின்றன. எனவே தீவிரமடைந்துள்ள விவசாய நெருக்கடியானது, சிறு மற்றும் குறு விவசாயி களை இடம்பெயரச் செய்கிறது; இனி அவர் களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்களைத் தாங்க முடியாததால் விவசாயத்தையே விட்டுவிட நிர்பந்திக்கப்படுகின்றனர். தேசிய மாதிரி சர்வே (NSO) தரவுகளின் அடிப்படை யிலான ஆய்வுகள் பல லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்க, சாகுபடி யை விட்டுவிட மற்றும் உடல்  உழைப்புத் தொழிலாளர்களின் வரிசையில் சேர நிர்பந்திக் கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. தற்போதைய நிலைமை தேசிய குற்றப் பதிவேடு (NCRB) அறிக்கையின்படி, 2014 முதல் 40,685 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், இது அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளைப் பிரதிபலிக்கிறது. புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கை களின் அமலாக்கத்துடன், கடந்த 35 ஆண்டுகளில் கிராமங்களில் ஒரு புதிய வசதியான வர்க்கம் உருவாகியுள்ளது. இந்த வர்க்கம் இந்த கொள்கைகளிலிருந்து பயனடைந்துள்ளது; மேலும் பெரும்பாலும் உயர் கல்வி மற்றும் நவீன ஒழுங்கமைக்கப்பட்ட துறை வேலைகளுக்கான வாய்ப்புகளை முதலில் பயன்படுத்திக்கொள்பவர்கள் இவர்கள். அணிதிரட்டுவதின் அவசியம் கிராமப்புற இந்தியாவில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பின் அனுபவமானது தொழிலாளர்கள் பருவத்தைப் பொறுத்து விவசாய மற்றும் விவசாயம் அல்லாத வேலைகளுக்கு இடையே மாறு வதைக் காட்டுகிறது. இந்த நெகிழ்வுத்தன்மை இருந்தபோதிலும், அவர்களின் வாழ்வாதாரங்கள் விவசாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன; பெரும்பாலானவர்கள் நிலமற்ற தொழிலாளர் குடும்பங்களில் இருந்து  வருகின்றனர். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட தொழிலாளர்களை ஒன்றிணைத்து ஒழுங்க மைக்க தீவிர முயற்சிகள் தேவைப்படுகின்றன. கிராமப்புற இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்த இந்த அனைத்து தொழிலாளர்களையும் ஒழுங்கமைத்து ஒன்றிணைப்பது மிக முக்கியம்.  - பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏடு (மே 11)