articles

img

வாக்குரிமையைப் பறிக்கும் அட்டூழியத்தை அனுமதியோம்! - கே.பாலகிருஷ்ணன்

வாக்குரிமையைப் பறிக்கும் அட்டூழியத்தை அனுமதியோம்! 

பீ    கார் மாநிலத்தில் தொடங்கி நடந்துவரும் வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தம்’,  என்ற நடவடிக்கை மிக முக்கியமான அரசியல் பிரச்சனையாக எழுந்திருக்கிறது. இந்த நடவடிக்கை பீகார் மாநிலத்துடன் நிற்காது, நாடு முழுவதும் மேற் கொள்ளப்படும் என்பதையும் தேர்தல் ஆணையம் ஜூன் 24, 2025 அறிவிப்பிலேயே கூறிவிட்டது. எனவே இது தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களையும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் சுயேச்சையான அமைப்பாகவும், நடுநிலையான நிறுவனமாகவும் பெயர் பெற்றிருந்த தேர்தல் ஆணையம் இன்று பாஜக அரசின் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள், எதிர்க்கட்சி வேட்பாளர்க ளின் தகுதி நீக்கம், தேர்தல் அறிக்கை தாமதம், வாக்கு எண்ணிக்கை மாற்றம் போன்ற பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்போது வாக்காளர் தகுதி நீக்கம், வாக்கு ரிமை பறிப்பு என்ற புதிய ஆயுதத்தையும் பயன் படுத்தத் தொடங்கியுள்ளது.

பீகாரில் நடந்தது உலகின்  மிகப்பெரிய வாக்குரிமை பறிப்பு

வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ எனும் நடவடிக்கை பீகார் மாநிலத்தில் கடந்த ஜூன் 24 திடீரென அறிவிக்கப்பட்டு இப்போது ஒரு பகுதி முடிந்திருக்கிறது. இந்த நிலையிலேயே உலகம் காணாத மிகப்பெரிய வாக்குரிமை பறிப்பு நடவ டிக்கையாக பெயர் பெற்றுவிட்டது. கடந்த ஒரு மாத காலத்தில், வாக்காளர் பட்டிய லில் பெயர் உள்ள அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் தரப்பட்டு அதை நிரப்பி கையெழுத்திட்டு திரும்பத் தர வேண்டும் என கூறினார்கள். ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செய்தாலும், ஒரு மாதத்தில் முடிக்க முடியாத இந்தப் பணி பல்வேறு குளறுபடிகளுக்கு நடுவே நடந்து முடிந்துள்ளது.  விண்ணப்பத்தை வாங்குவது எப்படியென்றே புரியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் திணறி வந்த சூழலில், மறுபக்கம் விண்ணப்பங்கள் போலிக் கையெழுத்துகள் இடப்பட்டு கணினியில் ஏற்றம் செய்யப்படுவதை பல பத்திரிகையாளர்கள் அம்பலப் படுத்தினார்கள். ஆனால் இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீதுதான் வழக்குப் போட்டது தேர்தல் ஆணையம்.  இதுவே தேர்தல் ஆணையத்தின் முகம் - உண்மையை மறைத்து, உண்மை சொல்பவர்களை தண்டிக்கும் அணுகுமுறை!

ஒரு கோடிப் பேரின் வாக்குரிமை பறிப்பு - பாஜகவின் வரவேற்பு இப்போது அந்த முதல் கட்டம் முடிந்துவிட்டது. ஒரே ஒரு புதிய வாக்காளரைக் கூட தேர்தல் ஆணையம் சேர்க்கவில்லை. முந்தைய வாக்காளர் பட்டியலில் இப்போது 65 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.  அதன்படி: H 20 லட்சம் வாக்காளர்கள் இப்போது உயிரோடு இல்லை என கண்டறியப்பட்டிருப்பதாக கூறு கின்றனர். H 36 லட்சம் வாக்காளர்களை வீட்டில் சந்திக்க சென்ற போது அவர்கள் இல்லை என கூறி நீக்கியுள்ளனர். H 7 லட்சம் பேரின் பெயர்கள் இருமுறை இடம் பெற்றிருந்ததாக கூறி நீக்கியுள்ளனர். அது தவிர 2025 ஆம் ஆண்டு சேர்க்கப்பட வேண்டிய முதல்முறை வாக்காளர்கள் சேர்க்கப்பட வில்லை. எனவே தேர்தல் ஆணையம் கூறும் 65 லட்சம்  பெயர்களை விடவும் கூடுதலாக 22 லட்சம் பேர் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் கணிசமான வாக்கா ளர்கள் பட்டியலின, பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கோடிப்பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை கண்டிக்காததும், வரவேற்றி ருப்பதும் பாஜக மட்டும்தான். முதல் முறையாக, வாக்காளர்களை இணைப்பது என்ற நோக்கத்தை கைவிட்டு, வாக்காளர்களை வெளி யேற்றுவது என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப் படும் இந்த திட்டம் ஆபத்தான முனையை அடைந்தி ருக்கிறது. பீகாரில் இப்போதைக்கு 7.24 கோடி வாக்கா ளர்களை பட்டியலிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இந்த 7.24 கோடி பேர்களில் 2003 ஆம் ஆண்டுக்கு பின் பட்டியலில் இணைந்த சுமார் 4 கோடிப்பேர் தங்கள் ஆவணங்களை ஒரு மாத இடைவெளியில் சமர்ப்பிக்க வேண்டும்.

4.26 கோடி பேர் ஆபத்தில்...!

2025 ஆகஸ்ட் முதல் தேதியன்று பீகாரில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியல் வாக்காளர்களின் இறுதிப்பட்டியல் அல்ல. இனி வரும் ஒரு மாதத்திற்குள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 2 கோடி வாக்காளர் தவிர மற்ற அனை வரும் (சுமார் 4.26 கோடிப்பேர்) தேர்தல் ஆணையத் தால் கோரப்படும் 11 ஆவணங்களை உரிய அரசு அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ஒரே மாதத்தில் 4.26 கோடி மக்களிடமிருந்து ஆவ ணங்கள் வாங்குவது எவ்வளவு அபத்தமான அவ சரம்! இது வெறும் நிர்வாகச் சிக்கல் அல்ல - திட்ட மிட்ட வாக்குரிமை பறிப்பு. பீகாரின் வாக்காளர் பட்டியலில் 2003 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு பின் இணைக்கப் பட்டவர்கள் (1985 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்) அனைவரும் தங்களுடைய வாக்குரிமையை பெறுவ தற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.  ஆர்.எஸ்.எஸ் திட்டம் - வாக்குரிமை பறிப்பின் நீண்டகால அரசியல் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள படி, இந்த ‘சிறப்பு தீவிர திருத்தம்’ பீகாரோடு முடிந்து விடாது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் இதே முறையில் வாக்காளர் பட்டியல் ‘திருத்தம்’ நடை பெறும். எந்த மாநிலமும் இந்த வாக்குரிமை பறிப்பி லிருந்து விதிவிலக்கல்ல.  இது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல - ஆர்.எஸ்.எஸ்-சின் நீண்டகால அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி. இந்துத்துவா அரசியலுக்கு சாதகமான வாக்காளர் அமைப்பை உருவாக்குவதே இதன் இலக்கு. சிறுபான்மையினர், கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆகி யோரை முறையாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் ஜனநாயக கட்டமைப்பையே மாற்றி யமைக்க முயற்சிக்கிறார்கள்.

கோரப்படும் ஆவணங்கள்:

H பிறப்புச் சான்றிதழ் H பாஸ்போர்ட் H மெட்ரிக்குலேசன் படித்த சான்றிதழ் H நிரந்தர வசிப்பிட சான்று H வன உரிமைச் சான்று H சாதிச் சான்று H என்.ஆர்.சி சான்று H குடும்ப பதிவுச் சான்று H நிலம் ஒதுக்கீட்டு ஆணை H 1987 ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட அரசு அல்லது பொதுத்துறை அடையாள அட்டை இதில் கவலைக்குரியது என்னவெனில், அதிகா ரப்பூர்வ அடையாளங்களான ஆதார், பான் அட்டை,  ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை ஆகியவை ஏற்கப்படவில்லை.

குடியுரிமை நெருக்கடி -  புதிய சிக்கல்கள்

அலுவலர்கள் அந்த ஆவணங்களை சரிபார்த்து தரவேற்றிய பின்னரே அந்த வாக்காளரின் உரிமை உறுதி செய்யப்படும். இந்த அவசரத்தி லும், இதே நடைமுறையிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுமானால் இன்னும் பல லட்சக்கணக்கா னவர்கள் தங்களுடைய வாக்குரிமையை முற்றாக இழப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் குடியுரி மையை நிரூபிக்கவில்லை என்ற புகாருக்கும் ஆளா வார்கள். தேர்தல் ஆணையம் தனக்கு இல்லாத ஒரு அதி காரத்தை எடுத்துக் கொண்டு, பல லட்சக்கணக்கான மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருப்பதுடன், குடியுரி மையை நிரூபிக்கும் புதியதொரு சிக்கலைத் திறந்துள் ளது. ஏற்கனவே அசாம் மாநிலத்தில் இவ்வாறு உரு வாக்கப்பட்ட ‘டி’ பட்டியல் வாக்காளர்களின் நிலை யைப் போல ஒவ்வொரு மாநிலத்திலும் குடியுரிமைச் சிக்கலை அது ஏற்படுத்துகிறது.

கூலித் தொழிலாளர்களை  அரசியல் நீக்கம் செய்தல்

நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையில் தொழி லாளர் இடம்பெயரும் மாநிலங்களில் பீகாரும் ஒன்று. ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் நீக்கப்படுவோரில், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை பல லட்சம். தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படியே 36 லட்சம் பேர், அவர்களின் வீட்டில் இல்லை என்ப தால் நீக்கப்பட்டுள்ளனர். வேலை தேடி வேறு மாநிலத்திற்கு சென்ற ஒரு தொழிலாளி தன்னுடைய சொந்த ஊரில் உள்ள வாக்குரிமையை இழந்துவிட்டு அந்த உரிமையை வேறொரு மாநிலத்தில் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது அவருடைய சொந்த ஊரில் மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்யும் உரிமையைப் பறிப்ப தாக ஆகாதா? இவ்வாறு செய்வதும் அரசியல் உரி மையை பறிப்பதாகவே மாறுகிறது. வரலாற்றில் இல்லாத வாக்காளர் நீக்கம் : உச்ச நீதிமன்ற எச்சரிக்கை விடுதலைக்கு பின்னர், இந்திய தேர்தல் ஆணை யம் வாக்காளர் பட்டியலை உருவாக்கி அதில் பல முறை திருத்தங்களைச் செய்துள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் அதனுடைய இலக்கு வாக்கா ளர்களுக்கு வாக்குரிமையை உறுதி செய்வதாகவே இருந்து வந்தது. அதற்காக அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சேர்த்திருக்கிறார்கள்.  ஆனால், இப்போது அந்த நடைமுறையில்

தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, வாக்காளர்களை வெளியேற்றும் போக்கை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த பிறகும் தேர்தல் ஆணையம் தனது செயல்திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல; ஆதார்,  ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை ஆகியவற்றை  ஆதாரங்களாக ஏற்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியதையும் தேர்தல் ஆணையம் ஏற்க வில்லை. அரசியலமைப்பின் மீதான தாக்குதல் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்ட ஒரு மனிதர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்பதை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிறது. அந்த அடிப்படை யான அதிகாரத்தையே பறிப்பதைத்தான் இப்போது ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பாஜக அரசு முயற்சி செய்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கூறுபோடப்பட்ட பிரச்ச னையில் இதுவரை நீதிமன்றத்தின் மூலம் எந்த உருப் படியான தீர்வையும் எட்ட முடியவில்லை. குடியுரி மைக்குள் மதத்தைப் புகுத்திய சி.ஏ.ஏ பிரச்சனையில் நீதிமன்றத்தால் பொருத்தமான தலையீட்டை மேற்கொள்ள முடியவில்லை. அதே போன்றதொரு நீடித்த சிக்கலாக நாம் இந்தப் பிரச்சனையும் தொடர அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை முற்றாக வீழ்ந்து வருகிறது. மின்னணு இயந்திர முறைகேடுகள், எதிர்க்கட்சி வேட்பாளர்களை இலக்கு வைத்த தகுதி நீக்கங்கள், வாக்கு எண்ணிக்கை திருத்தங்கள், மற்றும் இப்போது வாக்காளர் உரிமை பறிப்பு - இவையனைத்தும் தேர்தல் ஆணை யம் ஒரு சுயேச்சையான அரசியல் சாசன நிறுவனம் அல்ல, பாஜகவின் அரசியல் ஆயுதம் என்பதையே நிரூபிக்கின்றன. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வரும் ஏப்ரல் எட்டாம் தேதியன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறி வித்துள்ளது. ஒவ்வொரு வாக்காளரின் வாக்குரிமையை, அதன் மூலம் இந்திய அரசியலமைப்பின் இறை யாண்மையைப் பாதுகாக்கிற கடமையில் அனைத்து மக்களையும் ஒன்று சேர்ப்போம். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் கேடயமாக, மக்கள் மன்றத்தை வலுப்படுத்துவோம்.