articles

img

ஈரானின் தற்போதைய கலகம்: வரலாற்றுத் துரோகங்களும் புவிசார் அரசியலும் - பேரா.விஜய் பிரசாத்

ஈரானின் தற்போதைய கலகம்:  வரலாற்றுத் துரோகங்களும் புவிசார் அரசியலும்

ஈரானின் இன்றைய உள்நாட்டுக் கலகத்தைப் புரிந்துகொள்ள, அந்த நாடு கடந்து வந்த நூறாண்டு கால வரலாற்றையும், அதன் மீது ஏகாதிபத்திய நாடுகள் செலுத்தி வரும் ஆதிக்கத்தையும் உற்றுநோக்க வேண்டும். 1901-இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஈரான், அதன் பிறகு எந்தவொரு அந்நிய நாட்டுக்கும் அடி பணியாமல் தனது தனித்துவத்தைப் பேண முயன்றது. இருப்பினும், 1953-இல் ஈரானின் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மேற்கத்திய உளவு அமைப்புகளின் சதியால் தூக்கியெறியப்பட்டு, முகமது ரெசா ஷா பஹ்லவி அரியணையில் அமர்த்தப் பட்டார். 1979 புரட்சி வரை நீடித்த இந்த மன்னராட்சி, மக்களின் எழுச்சியால் வீழ்த்தப்பட்டு இஸ்லாமிய குடியரசு உரு வானது.

அன்றிலிருந்து இன்று வரை ஈரானின் புரட்சிக்கு எதிரான தாக்குதல்கள் ஓயாமல் தொடர்ந்து வருகின்றன. பொருளாதாரப் போரும் நவ தாராளமய மாற்றமும் ஈரானின் தற்போதைய நெருக்கடிக்கு அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை ஒரு முக்கிய காரணம் என்றாலும், ஈரானின் தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கை களையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. 1989-இல் அயத்துல்லா கொமேனியின் மறை வுக்குப் பிறகு, அப்போதைய அமைச்சர்கள் மூலமாக ஐ.எம்.எஃப் (IMF) நிதி நிறுவனத்தின் ‘கட்டமைப்பு மறுசீரமைப்பு’ கொள்கைகளை ஈரான் ஏற்றுக்கொண்டது. இது அந்நாட்டை உலகப் பொருளாதாரத்துடன் இணைப்பதாகச் சொல்லப்பட்டாலும், நடைமுறையில் வர்க்க வேறுபாடுகளையே அதிகரித்தது. நவதாராள மயக் கொள்கைகளின் விளைவாகப் பண வீக்கம் அதிகரித்ததும், மானியங்கள் வெட்டப் பட்டதும் 2017-18 மற்றும் 2019-இல் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டன.

2025-இல் ரியால் நாணயத்தின் மதிப்பு 30 முதல் 40 சதவீதம் வரை வீழ்ந்ததும், பணவீக்கம் 60  சதவீதத்தைத் தாண்டியதும் இந்த நெருக்கடி யின் உச்சகட்டமாகும். திட்டமிடப்பட்ட நகர அழிப்பும் உளவுத்துறை ஊடுருவலும் இந்த பின்னணியில் தெற்கு பாராஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலா ளர்கள் தங்களின் நியாயமான ஊதியக் கோ ரிக்கைகளுக்காகத் தொடங்கிய போராட்டம், மிகத் திட்டமிட்ட முறை யில் திசைதிருப்பப் பட்டது. அமைதியாகத் தொடங்கிய எதிர்ப்பு இயக்கம், ஒரே இரவில் அதிதீவிர வன்முறை யாக மாறியது. சுமார் 100 சட்ட அமலாக்க அதிகாரிகள் கொல் லப்பட்டதும், மருத்துவமனைகள் மற்றும் செவி லியர்கள் தாக்கப்பட்டதும் தற்செயலானவை அல்ல.

வன்முறையைத் தீவிரப்படுத்துவதன் மூலம் ஈரானுக்குள் வெளிநாட்டு ராணுவத் தலையீட்டைக் கோருவதற்கான தந்திரங்கள் அரங்கேற்றப்பட்டன. இஸ்ரேலின் ‘ஹாரெட்ஸ்’ பத்திரிகை செய்தியின்படி, ரெசா பஹ்லவியை ஈரானின் அரசராக (ஷா) அமர்த்துவதே இஸ்ரே லின் நோக்கம்; அதற்காகவே அந்நாட்டின் உளவுத்துறையான மொசாத் இந்தக் கலகத்திற்குப் பின்னால் நிற்கிறது. ஏகாதிபத்தியத்தின் கூப்பாடு அமெரிக்க உள்துறையும், மொசாத்தும் கலகக்காரர்களை உற்சாகப்படுத்தியதிலி ருந்து இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள புவிசார் அரசியலை நாம் தெளிவாகக் காண முடியும். ஈரானின் ராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளை (உதாரணமாக 2020-இல் காசிம் சுலைமானி) படுகொலை செய்தது முதல், தற்போது நடக்கும் உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டுவது வரை அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து முயன்று வருகின்றன. 2024-இல் ஹசன் நஸ்ரல்லா படுகொலை மற்றும் சிரியா அரசின் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே ஈரானின் இந்த நிலையைப் பார்க்க வேண்டும்.

ஈரான் மக்கள் தங்களின் சொந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தாங்களே வழி காண வேண்டும். வான்வழி குண்டுகளால் ஒரு போதும் தீர்வை எட்ட முடியாது. மேற்கத்திய நாடுகள் ஈரான் மக்களுக்கு ஆதரவு என்று உதட்டளவில் சொல்வது எளிது; ஆனால், பொ ருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டு வரச் சொல்வதே உண்மையான தீர்வாக அமை யும். லாபவெறி பிடித்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுவதும் வலுவான குரல் ஒலிக்கப்பட வேண்டும். தமிழில் சுருக்கம் : எஸ்.ஏ.மாணிக்கம்