ஈரானில் என்னதான் நடந்தது?
மேற்குலக ஊடகங்கள் ஈரானில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்கிறது என்றும், ஆயிரக்க ணக்கானோர் ரத்த வெள்ளத்தில் மடிகிறார்கள் என்றும் செய்திகளைப் பரப்புகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாக ஈரான் வீதிகள் அமைதி காக்கின்றன; அந்நாட்டின் அரசாங்கம் கவிழவில்லை. ஈரானின் உள்நிலை உண்மையில் என்ன? எதனால் இந்தப் போராட்டங்கள் வெடித்தன என்பதைத் துல்லியமாக ஆராய வேண்டும். பொருளாதார எரிமலையின் பின்னணி 2025 டிசம்பர் 28 அன்று டெஹ்ரான் வணிகர்களின் ஆர்ப்பாட்டத்துடன் இந்தப் போராட்டம் தொடங்கியது.
ஈரானின் நாணயமான ரியால், டாலருக்கு நிகராக ஒரே ஆண்டில் 74% கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 50 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்கம் மற்றும் வரலாறு காணாத வறட்சியால் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டது. இந்த நெருக்கடிக்கு ஈரான் அரசாங்கத்தின் திறமையின்மையை விட, அமெரிக்கா விதித்துள்ள மிகக்கடுமையான தடைகளே அடிப்படை காரணம். உலகிலேயே அதிக தடைகளைச் சந்திக்கும் நாடாக ஈரான் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவிற்குப் பயந்து ஈரான் எண்ணெய்யைத் தவிர்த்த நிலையில், சீனா மட்டுமே தனது தேவையில் 23 சதவீதத்தை ஈரானிடம் பெற்றுத் துணையாக நின்றது. அமெரிக்கா - இஸ்ரேலின் பகிரங்கத் தூண்டுதல் மக்களின் அதிருப்தியில் நியாயம் இருப்பதை உணர்ந்த ஈரான் அரசு, தொடக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், இதே நேரத்தில் மியாமி பகுதியில் நடந்த டிரம்ப் - நேதன்யாகு சந்திப்பு, ஈரானில் நடக்கும் போராட்டத்தை ஆட்சிக் கவிழ்ப்பாக மாற்றும் திட்டத்தை வகுத்தது. இஸ்ரேல் தனது உளவுப் பிரிவுகள் மூலம் பலுச்சி, குர்திஷ் இனக் குழுக்கள் மற்றும் மன்னராட்சி ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு ஆயுதங்களை வழங்கியது.
அமெரிக்க முன்னாள் சி.ஐ.ஏ இயக்குநர் மைக் பாம்பி யோவும், டொனால்டு டிரம்ப்பும் பகிரங்கமாகவே “அரசு அமைப்புகளைக் கைப்பற்றுங் கள், உங்களுக்கு உதவி வந்து கொண்டுள்ளது” என்று கலகத்தைத் தூண்டினார்கள். இணையப் போரும் ஸ்டார் லிங்க் தலையீடும் போராட்டம் கலகமாக மாறியபோது, கலகக்காரர்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாற இணையத்தைப் பயன்படுத்தினர். அரசு இணையத்தைத் துண்டித்தபோது, எலான் மஸ்க் தனது ‘ஸ்டார் லிங்க்’ செயற்கைக்கோள் மூலம் அவர்களுக்குத் தகவல் தொடர்பை வழங்க முயன்றார்.
ஈரானிடம் ஸ்டார் லிங்க்கை முடக்கும் தொழில்நுட்பம் இல்லாதபோதும், ரஷ்யா அல்லது சீனாவின் உதவியுடன் ஈரான் அந்தத் தகவல் தொடர்பைத் துண்டித்ததாக நம்பப்படுகிறது. இதன் மூலம் கலகக்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு நிலையைத் தன்வசப்படுத்தியது. போராட்டத்தின் முடிவும் ஏகாதிபத்தியப் பின்வாங்கலும் இந்த வன்முறையில் 120-க்கும் அதிகமான காவல்துறையினர் கொல்லப் பட்டனர்; மறுபுறம் 500-க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் உயிரிழந்தனர். 10,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர், இதில் ஏராளமான மொசாட் மற்றும் சி.ஐ.ஏ ஏஜெண்டுகளும் அடங்குவர்.
“நாங்கள் குண்டு வீசத் தயாராக உள்ளோம்” என்று கொக்கரித்த டிரம்ப் பின்வாங்கியதற்கு முக்கியக் காரணம், ஈரான் மக்கள் தங்கள் அர சாங்கத்தை வீழ்த்தத் தயாராக இல்லை என்பதே. அரசுக்கு ஆதரவாக லட்சக்க ணக்கான மக்கள் நடத்திய பேரணிகள் இதை நிரூபித்தன. மேலும், ஈரானைத் தாக்கி னால் தங்கள் நாடுகளும் வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும் என அஞ்சிய சவூதி அரேபியா, குவைத், இஸ்ரேல் போன்ற நாடுகளே அமெரிக்காவைத் தாக்குதல் நடத்த வேண்டாம் என வற்புறுத்தின. ஏகாதிபத்திய மூர்க்கத்தனம் தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது. டொனால்டு டிரம்ப் போன்றவர்களின் தார்மீகக் கட்டுப்பாடற்ற போக்கிற்கு எதிராக சர்வதேச சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.