articles

img

வங்கத்தில் நாம் வெல்வோம்.... சிபிஎம் மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்ய காந்த மிஸ்ரா நேர்காணல்....

...கடைசி பத்தி தொடர்ச்சி

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை முன் எப்போதையும்விட மிகவும்மோசமான நிலைக்குச் சென்றிருப்பதற்குக் காரணம், கிரிமினல்களுக்கும், ஆளும் கட்சியினருக்கும் இடையே மிகவும் நெருக்கமான கள்ளப்பிணைப்பு இருப்பதேயாகும். ஆளும் திரிணாமுல் கட்சியினர், கிரிமினல்களையே சார்ந்திருக்கிறார்கள். இதனால்தான் பெண்களுக்கு எதிரானவன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகிறவர்களும் மிக எளிதாக தப்பித்துவிடுகிறார்கள்.  இத்தகைய நிலைமையில் மாற்றம்கொண்டுவர வேண்டுமானால் போலீஸ் தங்கள் கடமைகளைச் சட்டத்தின்படி செய்திட வேண்டும். நாம் ஆளும் கட்சியின்தலையீடற்ற சுதந்திரமாகச் செயல்படக்கூடிய நிர்வாகத்தை அளித்திடுவோம். இது மற்றுமொரு மாற்றாகும்.  

கேள்வி: ஒருவேளை இடது ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை என்றால், என்ன நடக்கும்? தொங்கு சட்டமன்றம் உருவானால் என்ன நிலைமை?

சூர்யகாந்த மிஸ்ரா: அதுபோன்றதொரு நிலை ஏற்பட்டால், திரிணாமுல் காங்கிரஸ், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, பாஜகவுடன் இணைந்து விடும். வெளிப்பார்வைக்கு அவர்கள் இருவரும் அடித்துக்கொள்வதுபோல் நடந்துகொண்டாலும், அவர்களுக்குள் கள்ளத்தனமான புரிந்துணர்வு இருக்கிறது. மத்தியிலும், வங்கத்திலும் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி. தேர்தலுக்குப்பின் ஒருவேளை தொங்கு சட்டமன்றம் உருவானால், இவ்விரு கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆட்சியை அமைக்கும். இது மாநில மக்களுக்கு மேலும் நாசத்தை அளித்திடும். எனவே, அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாதவாறு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இது சாத்தியமே. இடதுஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆதரவாக மக்களின் ஆதரவை நாம் வென்றெடுப்போம்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி,

தமிழில் : ச.வீரமணி