articles

img

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினைகள் - ஓர் ஆய்வு-எஸ்.பி.ராஜேந்திரன்

மகாராஷ்டிராவின் அரசியல் களம் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், புதிய திருப்பங்களையும் சந்தித்துள்ளது. மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணியின் மக்களவைத் தேர்தல் வெற்றியிலிருந்து, அதன் பின்னரான எதிர்பாராத வீழ்ச்சி வரையிலான பயணம் இந்திய மற்றும் மாநிலங்களின் அரசியலின் சிக்க லான தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றங்களை ஆழமாக புரிந்து கொள்வது, தற்கால இந்திய அரசியலின் போக்குகளை அறிய உதவும்.

2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் ‘இந்தியா’ கூட்டணி என்று அறியப்பட்ட மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணி 48 தொகுதிகளில் 31 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். ஆனால், இந்த வெற்றியின் உள்ளடக்கத்தை ஆழமாக ஆராயும்போது, எம்விஏ மற்றும் பாஜகவின் மகாயுதி -ஆகிய இரு கூட்டணிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 1.5 சதவீதமாகவே இருந்தது. இந்த சிறிய வித்தியாசம், எம்விஏ அணியின் வெற்றி உறுதியான அடித்தளத்தில் அமையவில்லை என்பதைக் காட்டுகிறது. 

அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களின் பின்னணியில், சில மாதங்களிலேயே எம்விஏ கூட்டணியின் வாக்கு விகிதம் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்த லில் 6 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. மாறாக, பாஜகவின் மகாயுதி கூட்டணி 9 சதவீத வாக்கு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இந்த மாற்றம் வெறும் தற்செயலாக நிகழவில்லை. மாறாக, ஆழமான அரசியல் காரணிகளின் விளைவாகவே உருவானது.

இது தொடர்பாக எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி உள்ளிட்ட ஏடுகள் தலையங்கம் மற்றும் கட்டுரைகள் வாயிலாக விரிவான ஆய்வுகளை வெளிப்படுத்தியுள் ளன. அதன் அடிப்படையில், மகாராஷ்டிராவில் நடந்தவற்றை புரிந்து கொள்வது, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு உதவும்.

சமூக அணி சேர்க்கை: பாஜகவின் அரசியல்  சூழ்ச்சிகளும் சாதுரியமும்

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி தனது வெற்றிக்காக பல்வேறு அணுகுமுறைகளை சூழ்ச்சி யாகவும், சாதுரியமாகவும் கையாண்டது. குறிப்பாக நலத்திட்டங்களை அரசியல்மயமாக்குவதை மிகவும் வெற்றிகரமாக செய்தார்கள். ‘லட்கி பஹின் யோஜனா’ (மகளிர் நிதி உதவித் திட்டம்) போன்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கட்சி யின் அடிமட்ட தொண்டர்கள் முதல் உயர்மட்ட தலை வர்கள் வரை அனைவரும் முழுமையாக ஈடுபட்டனர்.  இந்த திட்டங்களின் தொடர்ச்சியை ஏற்கெனவே நடக்கும் தங்களது கூட்டணி ஆட்சியின் தொடர்ச்சி யுடன் இணைத்து பிரச்சாரம் செய்ததன் மூலம், பயனா ளிகளிடம் வலுவான ஆதரவைப் பெற முடிந்தது.

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி தனது வெற்றிக்காக பல்வேறு அணுகுமுறைகளை சூழ்ச்சி யாகவும், சாதுரியமாகவும் கையாண்டது. குறிப்பாக நலத்திட்டங்களை அரசியல்மயமாக்குவதை மிகவும் வெற்றிகரமாக செய்தார்கள். ‘லட்கி பஹின் யோஜனா’ (மகளிர் நிதி உதவித் திட்டம்) போன்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கட்சி யின் அடிமட்ட தொண்டர்கள் முதல் உயர்மட்ட தலை வர்கள் வரை அனைவரும் முழுமையாக ஈடுபட்டனர்.  இந்த திட்டங்களின் தொடர்ச்சியை ஏற்கெனவே நடக்கும் தங்களது கூட்டணி ஆட்சியின் தொடர்ச்சி யுடன் இணைத்து பிரச்சாரம் செய்ததன் மூலம், பயனா ளிகளிடம் வலுவான ஆதரவைப் பெற முடிந்தது.

இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு தனி கவனம் செலுத்தியது. அவர்களது தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கியது. தனி நலத்திட்டங்கள் அறி வித்தது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை களை பாதுகாப்பதாக உறுதியளித்தது. குறிப்பாக, மராத்தா-ஓபிசி உறவுகளில் ஒரு சமநிலையை பேண முயன்றது.

தலித் சமூகத்தை அணுகுவதில் புதிய பாதையை பின்பற்றியது. அம்பேத்கர் சிந்தனைகளை முன்னி லைப்படுத்தியது. புத்த-பௌத்த மரபுகளை கொண்டாடியது. தலித் தலைவர்களுக்கு அங்கீகாரம் அளித்தது. தலித் தொழில்முனைவோருக்கு ஊக்க மளித்தது.

சிறுபான்மையினரை அணுகுவதிலும் புதிய உத்திகளை கையாண்டது. முற்போக்கு முஸ்லிம் தலைவர்களை அடையாளம் கண்டது. பாரம்பரிய முஸ்லிம் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டது. முஸ்லிம் பெண்களுக்கான தனி நலத்திட்டங்களை அறிவித்தது. கல்வி, வேலைவாய்ப்பு உறுதிமொழி களை வழங்கியது.

பாஜக கூட்டணியின் இந்த ‘சமூக அணி சேர்க்கை’ உத்திகள் அடித்தள அளவில் செயல்படுத்தப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திற்கும் தனி செல்கள் அமைக்கப் பட்டன. தொடர்ச்சியான சமூகத் தொடர்பு பேணப் பட்டது. 

கருத்தியல் தளத்திலும் நுட்பமான வேலைகள் நடந்தன. சமூக ஒருங்கிணைப்பு கருத்தாக்கம் உரு வாக்கப்பட்டது. இந்துத்துவ கருத்தியலுடன் இணைக் கப்பட்டது. தேசியவாத உணர்வுடன் பிணைக்கப் பட்டது. பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக் கும் முயற்சி என்று முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு பாஜக கூட்டணி சமூக அணிசேர்க்கை யை ஒரு நுட்பமான உத்தியாக கையாண்டபோது, எம்விஏ கூட்டணி வெறும் மேலோட்டமான அணுகு முறையை மட்டுமே கொண்டிருந்தது. இந்த வேறுபாடு இரு கூட்டணிகளின் தேர்தல் முடிவுகளிலும் கணிச மான தாக்கத்தை ஏற்படுத்தியது.

மகா விகாஸ் அகாதியின் சறுக்கல்

மறுபுறம், மகா விகாஸ் அகாதியின் (எம்விஏ) தோல்விக்கு பல உள் காரணிகள் உள்ளன. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தன்னை “பெரிய அண்ணனாக” காட்டிக்கொள்ள முயன்றதும், கூட்டணிக் கட்சிகளுக்கு  அளித்த உறுதிமொழிகளை மீறியதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.

முதல மைச்சர் பதவி குறித்த முன்கூட்டிய மோதல்கள் கூட்டணியின் ஒற்றுமையை பாதித்தன. சிறு கட்சிகளை புறக்கணித்தது அடித்தள வாக்கு வங்கியை சிதறடித்தது. எம்விஏ கூட்டணியின் தேர்தல் பிரச்சாரமும் உயி ரோட்டம் இல்லாமல் இருந்தது. வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட காலதாமதம், மக்களை சென்றடையும் திறனின் பற்றாக்குறை, எதிரணியின் துருவமய மாக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளத் தவறியது போன்றவை பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தின.

அமைப்பு ரீதியாகவும் எம்விஏ கூட்டணி பல பலவீனங்களைக் கொண்டிருந்தது. முற்போக்கு அமைப்புகளுடனான தொடர்பின்மை, அடித்தள தொண்டர்களின் குறைந்த ஈடுபாடு, வளங்களின் பற்றாக்குறை, கட்சி இயந்திரத்தின் செயல்திறன் குறைவு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எல்லாவற்றுக்கும் மேலாக எம்விஏ கூட்டணி தனது பாஜக எதிர்ப்பு அரசியலை மட்டுமே முன்னி றுத்தியது. வேலைவாய்ப்பு நெருக்கடி, விவசாயப் பிரச்சனைகள், பணவீக்கம் போன்ற அடிப்படை பொரு ளாதார சிக்கல்களுக்கு எந்த தீர்வையும் முன்வைக்க வில்லை. அரசின் நலத்திட்டங்களை வெறும் சலுகை களாகப் பார்த்ததே தவிர, அவற்றை மக்களின் அடிப்படை உரிமைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட வில்லை. இதனால் மக்களிடம் ஒரு மாற்று அரசியல் பார்வையை உருவாக்கத் தவறியது.

பாஜக அரங்கேற்றிய ‘சமூக அணிசேர்க்கையின்’ தாக்கம், தேர்தல் முடிந்த பின்னர் 95 தொகுதிகளில் வாக்கு சதவீதம் திடீரென அதிகரித்தது; இதில் ஒன்றிய அரசு- தேர்தல் ஆணையம் சதி உள்ளதா என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், எம்விஏ கூட்டணி தனது தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆராய வேண்டும். இது எதிர்கால திருத்தங்களுக்கும், புதிய அரசியல் உத்திகளை வகுப்பதற்கும் உதவும். தங்களது தவறுகளை ஆய்வு செய்து, அவற்றி லிருந்து கற்றுக்கொள்வதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.

மாற்று அரசியலே எதிர்காலம்

மகாராஷ்டிரா அரசியலின் தற்போதைய நெருக்கடியின் அடிப்படையான கார ணம், மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணி  சாமானிய மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை புரிந்துகொள்ளத் தவறியதுதான். சமூக அணி சேர்க்கை, கூட்டணி அரசியல், தலைமைத்துவப் போட்டிகள் என பல காரணிகள் இருந்தாலும், இறுதி யில் மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மா னிக்கும் பொருளாதாரக் கொள்கைகளே முக்கியமா னவை.

மோடி அரசின் தாராளமய பொருளாதாரக் கொள் கைகளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலை யின்மை, விவசாய நெருக்கடி, சிறு வணிகங்களின் சரிவு போன்றவற்றுக்கு எதிராக எம்விஏ எந்த மாற்றுக் கொள்கைகளையும் முன்வைக்கவில்லை. மாநில அளவில் கூட, பாஜக கூட்டணி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு மாற்றாக மக்கள் நல கொள்கைகளை முன்னிறுத்த முயற்சிக்கவில்லை.

குறிப்பாக:

F விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த திட்டவட்டமான திட்டங்கள் இல்லை

F சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க புதிய யோசனைகள் இல்லை

F இளைஞர் வேலைவாய்ப்பை பெருக்க தெளிவான பார்வை இல்லை

F நுகர்வோர் விலை கட்டுப்பாட்டுக்கான வழிமுறைகள் இல்லை

F பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்த திட்டங்கள் இல்லை

பாஜக அரசின் நலத்திட்டங்களை தனது பிரச்சாரத்தில் விமர்சிப்பதோடு எம்விஏ நின்றுவிட்டது. அவற்றுக்கு மாற்றாக, மக்களின் உரிமைகளை அடிப் படையாகக் கொண்ட புதிய நலத்திட்டங்களை தனது பிரச்சாரத்தில் வடிவமைக்கவில்லை. மக்களுக்கான அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்றவற்றை வலுவாக பிரச்சாரத்தில் முன்வைக்க வில்லை.

இந்த கொள்கை வறட்சியே எம்விஏ மீதான மக்க ளின் நம்பிக்கையை சிதைத்தது. ஆட்சி மாற்றம் மட்டுமே குறிக்கோளாக முன்வைத்தது. மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை கொண்டு வரும் மாற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்த தவறியது. இதுவே அதன் அரசியல் தோல்விக்கு அடிப்ப டையான காரணமாக அமைந்தது.

இந்த கொள்கை வறட்சியே எம்விஏ மீதான மக்க ளின் நம்பிக்கையை சிதைத்தது. ஆட்சி மாற்றம் மட்டுமே குறிக்கோளாக முன்வைத்தது. மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை கொண்டு வரும் மாற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்த தவறியது. இதுவே அதன் அரசியல் தோல்விக்கு அடிப்ப டையான காரணமாக அமைந்தது.

எஸ்.பி.ராஜேந்திரன்