articles

img

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மிரட்டிய விவகாரம் -ஏ.ஆர்.பாபு

கோயம்புத்தூர், செப். 13 - ஏ.ஆர்.பாபு எந்த விமர்சனத்தையும் எதிர் கொள்ள திராணியற்றவர் களாக பாஜகவினரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இருக்கிறார்கள். இதன் விளைவாக பிரபல அன்ன பூர்ணா உணவகத்தின் உரிமை யாளரை மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோ எடுத்து வெளி யிட்டுள்ள சம்பவம் தொழிற்துறை யினரை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜிஎஸ்டி-யில் குளறுபடிகள்

கோவை கொடிசியா வளாகத் தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் புதனன்று கலந்துரையாடி னார். அப்போது, அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனி வாசன் பேசுகையில், ஜிஎஸ்டியால் ஹோட்டல் தொழில் சந்தித்து வரும்  நெருக்கடிகள் குறித்தும், இதற்கு தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் கொங்குத்தமிழில் நகைச்சுவை உணர் வோடு பேசினார். அவருடைய பேச் சானது, எந்த இடத்திலும் அதி காரத்தை நோக்கி கேள்வி எழுப்பு வதாகவே அமையவில்லை. எனி னும், அந்தப் பேச்சை கேட்ட எல்லோ ரும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருக்கும் பிரச்சனைகளை உணர்ந்து ஆமோதித்தனர். 

நியாயத்தை உணர்ந்த அதிகாரிகள்

அவரது பேச்சில், ‘ஒரே வகை யான உணவுப் பொருட்களுக்கு வெவ்வேறு ஜிஎஸ்டி விகிதம் அடிப்படையில் பில் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. குறிப்பாக, பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது, அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. இதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் ஜாமையும், பட்டரையும் கொடுத்து விடுங்கள் நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள். கடை நடத்த முடிய வில்லை மேடம். ஒரே மாதிரியாக ஜிஎஸ்டி பண்ணுங்க மேடம், ஒரு  பேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு  திரும்பினால் பில் போடுவதற்குள் கம்ப்யூட்டரே திணறுதுங்க. தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங் கள்’ என எதார்த்தமாக பேசினார்.  இந்தப் பேச்சைக் கேட்ட நிதியமைச் சர் நிர்மலா சீதாராமனின் அருகில் அமர்ந்திருந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் கூட, அன்னபூர்ணா சீனிவாசன் பேசுவது சரிதான் என்பதுபோல தலையை ஆட்டியதை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் கவனித்தனர்.

மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த கொடுமை

கோவையின் அடையாளம் தொழிற்துறை என்றாலும், அன்ன பூர்ணா ஹோட்டல் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை பெற்றுள் ளது. பொதுமக்களின் நம்பிக்கை யை பெற்ற நிறுவனமாக இயங்கி வருகிறது. ஆனால், விமர்சனத்தை கொஞ்சமும் எதிர்கொள்ள திராணி யற்ற கும்பலாக பாஜக இருக்கிறது என்பதற்கு உதாரணமாகத்தான் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமை யாளர் சீனிவாசனை மிரட்டி மன்னி ப்பு கேட்க வைத்திருக்கிறார்கள். 

பிரச்சனை என்னவென்றால், நான்கு சுவருக்குள் நடந்த இந்த சம்பாசனைகளை அங்கேயே முடித்துக்கொள்ளாமல், அதிகார மமதையில், அதனை வீடியோவாக எடுத்து, பொதுவெளியில் பாஜக வின் ஐடிவிங் வெளியிட்டு ஒரு தொழிலதிபரை அவமானப்படுத்தி யுள்ளது. இதுதான் இப்போது வெடித்துக் கிளம்பியிருக்கிறது. தன்னைக் கேள்வி கேட்கக்கூடாது என்கிற ஆணவத்தின் உச்சத்தில் நிர்மலா சீதாராமன் இருக்கிறார் என கோவையின் தொழிற்துறை யினர் கொதித்து வருகின்றனர். 

பாஜக-வுக்குள் நடக்கும் போட்டா போட்டி அரசியல்

கோவையில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் அண்ணாமலையா, வானதி சீனிவாசனா என்கிற அதிகார போட்டியின் விளைவாகவே இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அரசியல் செயற்பாட்டாளர்கள் விமர்சிக்கின்றனர். அண்ணாமலை கோவையில் போட்டியிட்டபோது, மூன்றுமுறை பிரதமர் மோடியை யும் மற்றும் ஒன்றிய அமைச்சர்களை யும் அழைத்து வந்து தனது பலத்தை நிரூபிக்க முயன்றார். ஆனால், அண்ணாமலை அல்ல, நான்தான் கோவையில் செல்வாக்கு மிக்கவர் என்பதை நிரூபிக்கவே, அண்ணா மலை வெளிநாடு சென்று இருக்கும் நிலையில், வானதி சீனிவாசன் நிதி யமைச்சரை வரவழைத்து கருத்துக் கேட்கிறோம் என்கிற பெயரில், தொழிற்துறையினரை அசிங்கப் படுத்தி உள்ளனர். மன்னிப்புக் கேட்க வைத்தவர்களும் இவர்கள் தான், அதனை வீடியோவாக எடுத்து வெளி யிட்டவர்களும் இவர்கள்தான், மன்னிப்பு வீடியோ வெளியிட்டதற் காக மன்னிப்புக் கேட்பவர்களும் இவர்கள்தான். ஆனால் அவர்களின் மன்னிப்புக்கேட்பை அரசியலின் அரிச் சுவடியை மட்டும் அறிந்தவர்கள் கூட  ஏற்கமாட்டார்கள் என்பது நிதர்சனம்.

அழைத்து வந்து அவமானப்படுத்திவிட்டார்கள்

இச்சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள தொழிற்துறை யினரிடம் பேசுகையில், “ஜிஎஸ்டி யில் இருக்கும் நெருக்கடிகள் குறித்து முன்கூட்டியே மனுவாக கொடுத்து விட்டோம். இதனைத் தொடர்ந்தே உங்களிடம் பேசுகிறோம், அனை வரும் வாருங்கள்’ என்றனர். நாங் களும் எங்கள் பிரச்சனைக்கு இப்போ தாவது தீர்வு வரும் என நினைத்து  அக்கூட்டத்தில் கலந்து கொண் டோம். ஆனால் நாங்கள் அசிங்கப் பட்டுப் போனதுதான் மிச்சம். இவர்களுக்கு திறமையும் இல்லை, தகுதியும் இல்லை. இவர்கள் எத னையும் செய்யமாட்டார்கள் என்பதே உண்மை. கோவையின் அனைத்துத் தரப்பினரின் அன்பையும் பெற்ற வர் அன்னபூர்ணா சீனிவாசன், இவரை மிரட்டி மன்னிப்புக் கேட்க  வைத்துள்ளனர் என்பதை சீரணிக் கவே முடியவில்லை. தனித்தனி யான தொழில் அமைப்புகள் கண்ட னம் தெரிவிப்பதை காட்டிலும், அனைத்து அமைப்பினரும் ஒன்று  சேர்ந்து விரைவில் கண்டன அறிக்கை வெளியிட இருக்கிறோம்” என்றனர்.

செல்போன் உதிரிபாகம் குறித்த கேள்வியால் ஆத்திரம்!
2-ஆம் நாளில் சூலூர் இளைஞரை மிரட்டிய நிர்மலா சீதாராமன்!

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மிரட்டிய அடுத்த நாளே சூலூர் இளைஞர் ஒருவரையும் நிர்மலா சீதாராமன் மிரட்டி அராஜகமாக நடந்து கொண்டுள்ளார்.

கோவை சூலூர் ஊஞ்சபாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை வியாழனன்று நடைபெற்றது. இதில், பங்கேற்றுவிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிளம்பிய போது, வெளியில் நின்று கொண்டிருந்த அருண் சந்திரன் என்ற பட்டதாரி இளைஞர், நிர்மலா சீதாராமனிடம், “செல்போன் உதிரி பாகமான செமிகண்டக்டர் என்ற உதிரிபாகத்தை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன், அந்த இளைஞரிடம் இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளை படித்துத் தெரிந்து கொண்டு, அதன்பின் தில்லி வந்து சந்தித்து நேரடியாக விவாதம் செய்து கொள்ளுமாறு அந்த ஆவேசத்தோடு கூறினார். அந்த இளைஞர் மீண்டும் தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்க முற்பட்டார்.

இதனால் கோபம் அடைந்த நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என எச்சரித்து விட்டு, அந்த இளைஞரையும் எச்சரித்தார். இதனையடுத்து, அருகில் இருந்த போலீசார் அந்த இளைஞரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.