ஆன்மீக விழாவில் கலவரத் தீ ஆர்எஸ்எஸ் சதித் திட்டத்தின் பின்னணி என்ன
“இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புது மையான பல மனிதர்களைக் கண்டிருக்கி றது... கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக…” 1952-இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் கலைஞர் எழுதிய மேற்கண்ட வசனங்களை இப்போது கேட்கும் போது, திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பு நினைவுக்கு வருகிறது. இந்திக்கு இராமன்; தமிழுக்கு முருகன் சுதந்திர இந்தியாவில் ஆர்எஸ்எஸ், இராமரை முன்னிறுத்தி கலவர விதையை விதைத்து இஸ்லாமிய சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தை இடித்து ராமர் கோவிலைக் கட்டியது. அதன் விளைவாக, மத ரீதியாக ஒரு பகுதி மக்களை அணிதிரட்டி, அரசியல் செல்வாக்கை உருவாக்கி, மத்தியிலும் பல மாநிலங்க ளிலும் ஆட்சியையும் அதிகாரத்தையும் நிறுவியி ருக்கிறது. தென் மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இராமரை
முன்வைத்து ஆர்எஸ்எஸ் உருவாக்க நினைக்கும் கலவர அரசியல் வெற்றி பெறவில்லை. எனவே, மண்ணுக்கேற்ற வகையில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை முன்வைத்து அரசியல் ஆதாயம் காண, ஆண்டுக் கணக்கில் சதித் திட்டத்தோடு செய லாற்றி வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய தருவாயில் “வேல் யாத்திரை”யை முன்னெ டுத்தார்கள். இப்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை மையமாகக் கொண்டு அரசியல் ஆதாயம் பெறுவ தற்காகக் கலவரத்திற்கான விதைகளைத் தூவத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டின் தொடக் கத்தில் சந்தனக்கூடு திருவிழாவை மத அரசியல் பிரி வினைக்குக் கையில் எடுத்தது பாஜக கூட்டம். திருப்ப ரங்குன்றம் மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. மலையின் மற்றொருபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. வழக்கமாக ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியான தரு ணத்திலிருந்தே பிரச்சனையைத் தொடங்கினார்கள். அடுத்து, மதுரையில் “முருக பக்தர்கள் மாநாடு” நடத்தி, முருக பக்தர்களை அரசியல் ரீதியாகக் கபளீ கரம் செய்யச் சதித் திட்டம் தீட்டினார்கள். இப்போதோ, நீதித்துறை வடிவில் பிரச்சனையைச் சகுனித்தன மாக முன்னெடுக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலைக் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக 2017-இல் இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு கோவில் நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், தனிநபர் ஒரு வரின் வழக்கை அடிப்படையாகக் கொண்டு, நீதித் துறையின் விதிகளுக்கு மாறாக, மனுதாரர் முறையிட்ட வழிபாட்டுத் தலத்திற்கு நேரில் ஆய்வுக்குச் சென்று, மனுதாரரின் விருப்பத்திற்கு உரிய வகையில் தீர்ப்பு வழங்கி, சட்ட விதிகளுக்கு முரணாக உடனடியாக அமல்படுத்தும்படி வற்புறுத்தியிருக்கிறார். கலவரம் உருவாகும் வகையில் அவர் மேற்கொண்ட அத் தனை நடவடிக்கைகளையும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் ஆன்மீக உணர்வை அரசியல் களத்தில் அறுவடை செய்வதற்கான சதித் திட்டத்தின் அடித்தளத்தை உள்வாங்கிச் செயலாற்ற வேண்டியுள்ளது. சக்கரவியூக சதித் திட்டம் சமூக நீதி, மாநில உரிமை, சனாதன ஒழிப்பு, கூட்டாட்சிக் கோட்பாடு, பகுத்தறிவு, பெண்ணுரிமை போன்ற தளங்களில் தமிழக மண்ணில் அரசியல் உரை யாடல்கள் வலுவாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய உரையாடல்கள் இயல்பா கவே சனாதன கோட்பாட்டிற்கும்
மத்திய அரசின் அதி காரக் குவிப்பிற்கும் எதிரானவை. எனவே, தமிழ்ச் சமூகத்திலும் அரசியல் பண்பாட்டுத் தளங்களிலும் தங்களது அடித்தளத்தை உருவாக்குவதற்கேற்ப, விவாதக் களத்தின் புள்ளியை மாற்றி அமைக்கும் வேலையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் கூட்டம். இதன் காரணமாகவே, நூற்றாண்டு காலமாகத் தமிழ் மண்ணில் வேரூன்றி உள்ள வேத மறுப்புச் சிந்த னைக்கு மாறாக, பார்ப்பனியக் கருத்துகளை அடிப்ப டையாகக் கொண்ட சனாதனக் கருத்தியலை முன்னெ டுப்பதற்கு ஒரு பெரும் சதித் திட்டத்தோடு பாசிச ஆர்எஸ்எஸ் செயலாற்றி வருகிறது. வேத மொழியை நெஞ்சில் நயவஞ்சகமாக ஒளித்து வைத்துக் கொண்டு, தமிழ் மொழியின் ஆதரவா ளர்களாக வேடமிட்டு நடிப்பது; திருவள்ளுவருக்குக் காவி நிறம் பூசுவது; 2022 முதல் “காசி தமிழ் சங்கமம்”, 2023-இல் “சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கம்” போன்றவை தொடங்கப்பட்டுள்ளன. சரி, “சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கம்” எதற்காக இப்போது தொடங்கப்பட்டுள்ளது? 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 2.75 லட்சம் சௌராஷ்டிர மொழி பேசும் வாக்காளர்கள் உள்ளனர். மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அவர்களின் வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றும் நோக்குடனே தமிழ்நாட்டுக்கும் குஜராத்திற்கும் உள்ள இணைப்பை இப்போது வேகமாக முன்னெடுக்கிறார்கள். வன்மம் கக்கும் பவன் கல்யாண் மதுரையில் “முருக பக்தர்கள் மாநாடு” தொடங்கி, திருப்பரங்குன்றம் பிரச்சனை வரை கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளார் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண். ஆர்எஸ்எஸ் வகுத்த திட்டத் தின்படி தமிழ்நாடு அரசியல் அரங்கில் நடிக்க பவன் கல்யாண் இறக்கி விடப்பட்டுள்ளார். 2011 கணக்கெ டுப்பு அடிப்படையில் தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் தமிழ் மக்கள் ஆறு சதவீதம் உள்ளனர். கோயம்புத்தூர், சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தெலுங்கு மொழி பேசுவோர் அடர்த்தியாக வசிக்கின்ற னர். தெலுங்கு மொழிச் சிறுபான்மையினர் பெரும் பாலும் திராவிட இயக்க அரசியல் செல்வாக்கின் கீழ், குறிப்பாக திமுக ஆதரவாளர்களாகத் தேர்தல் அர சியலில் செயல்படுகின்றனர். இதில் ஒரு உடைப்பை உருவாக்க எச்சில் ஒழுகும் ஆசையோடு நடிகர் பவன் கல்யாண் வலம் வர முயல்கிறார். தமிழகம்: நேற்று, இன்று, நாளை... 1963-இல் கன்னியாகுமரியில் விவேகானந்த ருக்கான நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக விவேகானந்த கேந்திரம்
உரு வானதும், ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து முன் னெடுக்கப்பட்ட முக்கிய முயற்சிகளாகக் கருதப்படு கின்றன. அங்கு நிலவியிருந்த கிறிஸ்தவ சமூகத்தின் செல்வாக்குக்கு எதிராக, குறிப்பாக நாடார் சமூ கத்தைச் சேர்ந்த இந்துக்களை ஒருங்கிணைத்து அர சியல் சமூக அடித்தளத்தை உருவாக்கும் பணிக ளில் ஆர்எஸ்எஸ் தீவிரமாகச் செயலாற்றத் தொடங்கி யது. 1982 மார்ச் மாதம் நடைபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மாசித் திருவிழாவில் உருவான கலவரத்தினால், இந்துக்களுக்கு ஏற்பட்டி ருந்த ‘இந்து’ உணர்வைப் பயன்படுத்தி, அவர்களை மதத்தால் ஒன்றிணைக்க இந்து சமய வகுப்புக ளைத் தொடங்கி, அவற்றின் மூலம் இளம் மனங்களில் இந்துத்துவ ஆதரவுப் பண்புகளை உருவாக்கு வதில் வெற்றி பெற்று, அரசியல் தளத்தை கன்னியா குமரியில் வலுப்படுத்தியுள்ளது. தொழில் நகரமான கோவையில் இஸ்லாமிய வெறுப்பைக் கட்டமைப்பதற்காக, 1982-இல் “இந்து எழுச்சி மாநாடு” இந்து முன்னணி முதலான மதவெறி அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. நாடெங்கும் பிரிவினைக் கலவரங்கள் கொழுந்துவிட்டுக் கொண்டி ருந்த நேரத்திலும் அமைதி காத்த தமிழகத்தில், கோவையில் 1997–98 காலகட்டத்தில் வன்முறைக் கலவரங்களாலும் படுகொலைகளாலும் பெரும் பதற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. கன்னியாகுமரியில் கிறிஸ்தவ மத வெறுப்பை அரசியல் அறுவடைக்கு பயன்படுத்திய ஆர்எஸ்எஸ் கூட்டம், கோவையில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த காவலர் அந்தோணி செல்வராஜ் கொலையில் “அந்தோணி” என்ற வார்த்தையை மறைத்து, “இந்து செல்வராஜ்” கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பி, இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்து வன்முறை வெறியாட்டம் நடத்தினர். கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சி தான் மதுரை திருப்பரங்குன்றம். வன்முறைக் கலவரத்திற்கான வித்தாக நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு அமைந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. மதத்தின்
அடிப்படையில் மனித மனங்களில் பிளவு உருவாகி விடக்கூடாது என்ற தகிப்பில் தமிழ்நாடு அரசு செயலாற்றியது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் அறநிலையத்துறையும் காவல்துறையும் செயலாற்றிய விதம் பாராட்டுத லுக்குரியது. முன்னுள்ள சவால்கள் வேத மரபுக்கு எதிராகப் புரட்சிகரக் கருத்துக்கள் வலுவாகக் களமாடிய தமிழக மண்ணில், எதிர்ப் புரட்சி சக்திகள் முன்னேறத் துடிக்கின்றனர். இக் கூட்டத்தை அரசியல் தளத்திலும் சமூகப் பண்பாட்டுத் தளத்திலும் தடுத்து நிறுத்த, முற்போக்குச் சக்திகள் அனைத்துத் தளங்களிலும் வலுவாகச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. சில மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பாசிச ஆர்எஸ்எஸ் க
ருத்தி யலை எதிர்கொள்வதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு உறுதியாகச் செயல்பட்டு வருவதால், சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை மேலும் பலப்படுத்தி தேர்தலை எதிர்கொள்வோம். பொய்யை உண்மையாகத் திரித்து ஒரு சமூகப் பிரிவினரை எதிரியாகக் கட்டமைத்து, குடும்பம், சமூகம், அரசு நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை, சினிமா, ஊடகம், சமூக வலைதளம் என அனை த்துத் தளங்களிலும் வஞ்சகத்தையும் வன்மத்தை யும் பரப்புவதைக் கூர்மையாகக் கண்காணித்து, இந்துத்துவா சக்திகளையும் அவர்களின் சதிகளை யும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்!
