articles

தேசிய அடையாளங்கள் விஷயத்தில் விபரீதம் கூடாது ‘வந்தே மாதரம்’ சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை திரும்பப் பெறுக! ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

தேசிய அடையாளங்கள் விஷயத்தில் விபரீதம் கூடாது ‘வந்தே மாதரம்’ சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை திரும்பப் பெறுக! ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

புதுதில்லி, பிப்.13- ஒன்றிய பாஜக அரசானது, ‘வந்தே மாதரம்’ பாடலில் மேலும் நான்கு சர ணங்களை சேர்த்திருப்பது அரசிய லமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இல்லை, எனவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அரசியலமைப்புச்  சட்டத்திற்கு மாறானது! ஒன்றிய பாஜக அரசு, வந்தே மாதரம் தேசியப் பாடலில், நான்கு சரணங் களைக் கூடுதலாக சேர்த்து ஓர் உத்த ரவை பிறப்பித்துள்ளது. இது அர சியலமைப்புச் சட்டத்தின் உணர்வைப் பிரதிபலித்திடவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(a) பிரிவில், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று தெளிவாகக் கூறுகிறது. அரசியல் நிர்ணய சபையில் நடை பெற்ற முழுமையான விவாதத்திற்குப் பிறகு, தேசியப் பாடல் குறித்து குடி யரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட அறிக்கையை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அதன்படி அதன் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும்.   மதச்சார்பின்மையை பிரதிபலிக்கவில்லை! இப்போது மீதமுள்ள நான்கு சரணங்களையும் சேர்க்குமாறு ஒன்றிய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற தன்மையை எதிரொலிக்கவில்லை என்று அரசியல் நிர்ணயசபை கருதியது. தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதம் தொடர்பாக பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு, மறைமுக நோக்கங்களுடன் தேவையற்ற சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கிறது. இதுபோன்ற வரலாற்று கலாச்சார சின்னங்களுடன் விளையாட பாஜக அரசு அனுமதிக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வை நிலைநிறுத்தி, இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு நாங்கள் அரசாங்கத்தை கோருகிறோம். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)