தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஒன்றிய அரசு தொடர் முயற்சி
தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருகிறது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு தீர்ப்பாயங் களுக்கான சீர்திருத்த சட்ட விதி களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீர்ப்பாய சீர்திருத்த சட்ட விதிகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ரத்து செய்யும் விதமாக ஒன்றிய அரசு, இந்த சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.