articles

போராடும் மக்கள்-எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை கைது செய்வதா? கரூர் வெண்ணைமலை பகுதி மக்களை வெளியேற்றும் காவல்துறையின் அராஜகத்திற்கு கண்டனம்

போராடும் மக்கள்-எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை கைது செய்வதா? கரூர் வெண்ணைமலை பகுதி மக்களை  வெளியேற்றும் காவல்துறையின் அராஜகத்திற்கு கண்டனம்

சென்னை, நவ.20-  பல தலைமுறைகளாக வசித்து வரு கின்ற கரூர் வெண்ணைமலை பகுதி மக்களை வெளியேற்றும் இந்து சமய அறநிலை யத்துறையின் ஜனநாயக விரோத போக்கை யும், நீதிமன்றத் தீர்ப்பு என்ற பெயரில் காவல்துறையின் அராஜகத்தையும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது.  இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் 548 ஏக்கர் நிலத்தில் 150 ஆண்டு களுக்கு மேலாக இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலமாக முறையாக பத்திரப்பதிவு செய்தும், அரசு அனுமதி பெற்றும் வீடு களும் கடைகளும் சிறு, குறு தொழில் நிறு வனங்களும் செயல்பட்டு வருகின்றன. 1200-க்கும் மேற்பட்ட வீடுகளும் 60-க்கும்  மேற்பட்ட சிறு கடைகள், வணிக நிறுவனங் களும் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத் தைச் சார்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மேற்கண்ட நிலங்கள் அனைத்தும் வெண்ணைமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்றும் அவற்றை ஆக்கிரமித்து உள்ளவர்களை அகற்ற வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் பல தலைமுறைகளாக அனுபவித்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்ற ஆணை யைப் பெற்று இந்து சமய அறநிலை யத்துறை, பொதுமக்கள் குடியிருக்கும் வீடு களுக்கும் சிறு, குறு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை பூட்டி சீல் வைப்பதை கண்டித்து, கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களையும் தலைவர்களையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காவல்துறை அராஜகமாக கைது செய்து வருவதை வன்மையாகக்கண்டிக்கிறோம். மக்களை காக்க அரசு மேல்முறையீடு செய்க! மேற்கண்ட சொத்துகள் சம்பந்தமாக உரிமையியல் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்   சூழ்நிலையில், மக்களை வெளியேற்றுவது போன்ற அராஜகமான, சட்டத்திற்கு புறம்பான முறை யில் இந்து சமய அறநிலையத் துறையும் காவல்துறையும் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக பொது மக்களை காப்பாற்றுகின்ற வகையில் நீதி மன்றத்தில் உரிய முறையில் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்து மக்களின் அடிப்படை உரிமைகளை பாது காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்  கின்றோம். இந்து சமய அறநிலையத்துறை யின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கையும், நீதிமன்ற தீர்ப்பு என்ற  பெயரில் காவல்துறையின் அராஜகத்தை யும், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் சங்கம் வன்மையாக  கண்டிக்கிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.