articles

img

பீகார் தேர்தல் படிப்பினைகள்! - அ.அன்வர் உசேன்

பீகார் தேர்தல்  படிப்பினைகள்!

பீகார் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்ப தாகவும் எதிர்பாராததாகவும் அமைந்துள்ளன எனில் மிகை அல்ல. இந்த முடிவுகளுக்கான காரணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றாலும், சில வெளிப்பாடுகள் தேர்தல் ஜனநாயகம் குறித்து கவலை அளிப்பதாக உள்ளன. தேர்தலுக்கு முன்பும் பின்பும் சில கருத்தாக்கத்தை நிலைநாட்ட பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் முயல்கின்றன. இதனைச் செய்வதன் மூலம் சில முக்கிய சூழ்ச்சிகளை மறைக்க முயற்சிகள் நடக்கின்ற னவா எனும் ஐயம் உருவாகிறது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தேர்தலை ஜனநாயக மயமாக்குவதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை முடக்க ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா எனும் கேள்வியும், தேர்தல் முடிவுகள் திருடப்பட்டதா எனும் கேள்வியும் எழுகிறது. தமிழ்நாடு தேர்தலை சந்திக்கும் அனைவரும் பீகார் படிப்பினைகளை ஆழமாக கவனத்தில் கொள்வது மிக அவசியம்.

தேர்தல் முறைகளின் குறைபாடுகள்

2020 மற்றும் 2025 சட்டமன்ற தேர்தல்களை ஒப்பி டும் பொழுது வாக்கு விவரங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன:

ஆர் ஜே டி தலைமையிலான கூட்டணியின் வாக்கு கள் சரியவில்லை. எனினும், பா.ஜ.க. கூட்டணியின் வாக்குகள் சுமார் 10% அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், ராம்விலாஸ் பஸ்வானின் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்ததன் மூலம் சுமார் 6% வாக்குகள் கூடுதலாகியுள்ளன. மேலும் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்குகள் சுமார் 4% கூடியுள்ளன. மறுபுறத்தில், பிரசாந்த் கிஷோரின் கட்சியும் ஒவைசி கட்சியும் 4.7% வாக்குகளைப் பிரித்துள்ளன. இந்த கட்சிகள் 62 தொகுதிகளில் பெற்ற வாக்குகள் பெரும்பாலும் ஆர்ஜேடி கூட்ட ணியைப் பாதித்துள்ளது என கருதப்படுகிறது.

முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை இணைக்காதது, சுமார் 10 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளிடையே போட்டி போன்ற காரணங்களும் உள்ளன. யாதவ்- முஸ்லிம் பிரிவினருக்கு அப்பாற்பட்டு ஏனைய சமூக பிரிவினரை வென்றெடுப்பதில் உள்ள போதா மையும் காரணமாக உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

ல் இந்துத்துவா சக்திகளின் செயல்பாடு களும், பிரதமரின் மதப்பிளவு உரைகளும் தடுக் கப்படவில்லை. எனினும், இத்தகைய காரணங்க ளைத் தாண்டி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கள் மற்றும் சுமார் 1.4 கோடி பெண்களுக்கு ரூ.10,000 தந்தது ஆகிய இரண்டு அடிப்படை காரணிகள் உள்ளன.

ஊடகங்களின் தவறான கருத்தாக்கம்

தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க.கூட்டணியின் சூழ்ச்சிகளை மறைக்க பல ஊடகங்கள் பொய்யான பிம்பத்தை கட்ட முயல்கின்றன.

Hலாலு பிரசாத் காலத்தில் காட்டாட்சியாம்: லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் காட்டாட்சி நடந்ததா கவும், மக்கள் மனதில் அது இன்னும் பயத்தை தோற்றுவிப்பதாகவும் வலுவான பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது உண்மை எனில், 2020 தேர்தல்களில் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி எவ்வாறு பெரிய வெற்றியைப் பெற்றது என்ற கேள்வி எழுகிறது.

H நிதிஷ் குமார் காலத்தில் பீகார் வளர்ச்சியாம்: இது வும் உண்மை அல்ல; தொழில், விவசாயம் என எதிலும் முன்னேற்றம் இல்லை. மேலும், பல சமூக  குறியீடுகளில் பீகார் மோசமாக உள்ளது.

சமூக குறியீடுகளில் பீகார்:

இந்தியாவின் தேசிய சராசரியே மோசமாக உள்ள நிலையில், அதைவிட மோசமாக பீகாரின் நிலை உள்ளது. ஒன்றிய அரசுக்கு தரும் ஒவ்வொரு ரூபாய் க்கும் பீகார் 6 முதல் 7 ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு பெற்றும், இந்த நிலை நீடிக்கிறது. நிதிஷ் குமார் காலத்தில் வளர்ச்சி இருந்தது என்பதும், அது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் உண்மை அல்ல.

தேர்தல் நடத்தை விதிகளை  மீறிய சலுகைகள்

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மிகச்சில நாட்கள் முன்பு 125 யூனிட்டுகள் இலவச மின்சாரம், சமூக ஓய்வூதியம் மூன்று மடங்காக உயர்வு ஆகியவை அறிவிக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, 1.4 கோடி பெண்களுக்கு நேரடியாக வங்கியில் ₹10,000 தரப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், லட்சக்கணக்கான பெண்களுக்கு தவணை முறை யில் பணம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது; இப்படி சுமார் ₹14,000 கோடி செலவிடப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் முரண்பட்ட இந்த நிகழ்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஆட்சே பித்த பின்னரும் தேர்தல் ஆணையம் மவுனம் காத்தது. 34% குடும்பங்கள் மாதத்துக்கு ₹6000க்கும் குறை வாக வருமானம் ஈட்டும் ஒரு மாநிலத்தில், ₹10,000 என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்களின் வாக்குகள் 63% எனில், பெண்களின் வாக்குகள் 72% பதிவாகியுள்ளன. முதல் கட்ட தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பணம் வங்கியில் செலுத்தப்பட்ட போதும், தேர்தல் ஆணையம் தடைவிதிக்காமல் அமைதி காத்தது. இதன் பாரபட்சம் பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமான தாக்கத்தை வலுவாக உரு வாக்கியது என்பதை மறுக்க இயலாது.

எஸ் ஐ ஆர் தாக்கம்

பீகாரில் சுமார் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டனர். சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 28,255 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதே சமயம், தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 49 லட்சம் வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது. வாக்கு வித்தியாசத்தைவிட கூடுதலாக வாக்குகள் நீக்கப் பட்டுள்ளன. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது.

174 தொகுதிகளில், வாக்கு வெற்றி வித்தியா சத்தைவிட நீக்கப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்தன. 2020 தேர்தலுடன் ஒப்பிடும் பொழுது 2025 தேர்தலில் இரு கூட்டணிகளுக்கு இடையே கைமாறிய 91 தொகுதிகளில், 75 தொகுதிகளில் தேசிய  ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது.

Hஐக்கிய ஜனதா தளம் வென்ற சந்தேஷ் தொகுதி யில் வெற்றி வித்தியாசம் 27 வாக்குகள், ஆனால் நீக்கப்பட்ட வாக்குகள் 25,062.

Hபா.ஜ.க. வென்ற அஜியோன் தொகுதியில் வெற்றி வித்தியாசம் 95 வாக்குகள், ஆனால் நீக்கப்பட்ட வாக்குகள் 20,221.

எஸ் ஐ ஆர் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி பல தொகுதிகளில் வென்றுள்ளது வெள்ளிடைமலை.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளுக்கு பீகார் தேர்தல் முக்கியமான படிப்பினைகளை அளித்துள் ளது. எத்தகைய சூழ்ச்சி செய்தாவது வெற்றிபெற வேண்டும் எனும் பாஜகவின் நோக்கத்தையும், அதற்குத் துணை நிற்கும் அஇஅதிமுகவையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. தேர்தல் ஆணை யத்தின் நடுநிலை தவறுதல், எஸ்ஐஆர் குளறு படிகள், நீதித்துறையின் மெத்தனப் போக்கு ஆகி யவை பெரிய சவால்களாகும். மதச்சார்பற்ற சக்தி களின் வலுவான ஒற்றுமையும், மக்களை வென்றெ டுப்பதும்தான் இன்றைய மிகப்பெரிய கடமை.