articles

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கும் டிரம்ப்பின் வர்த்தகப் போருக்கும் சரணடைவதை நிறுத்துங்கள்!

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கும் டிரம்ப்பின் வர்த்தகப் போருக்கும் சரணடைவதை நிறுத்துங்கள்!

தாராள வர்த்தகத்தின் பெயரில் விவசாயம், பால்வளம்,  மீன்பிடித் துறைகளில் சமமற்ற ஒப்பந்தங்கள் கூடாது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24ஆவது மாநாடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடுத்த வரித்தீர்வை போருக்கு இந்திய அரசு நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தது தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது; இது நாட்டின் நலன்கள், விவசா யிகள், மற்ற உழைக்கும் மக்கள் மற்றும் உள்நாட்டு தொழில்களின் நலன்களை காவு கொடுக்கிறது.

அமெரிக்காவின் வரித்தீர்வைகள் மற்றும் இந்தியாவின் சரணாகதி

அமெரிக்கா 2025 ஏப்ரல் 5 அன்று அனைத்து நாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்க ளுக்கு 10% அடிப்படை வரித்தீர்வையும், வெவ்வேறு நாடுகளுக்கு 49% வரை மாறுபடும் “பரஸ்பர வரித்தீர்வை களையும்” விதித்துள்ளது. இந்தியாவுக்கு 26% பரஸ்பர வரித்தீர்வையை விதித்துள்ளது. அமெரிக்காவின் பல வர்த்தக கூட்டாளிகளைப் போலல்லாமல், இந்தியா டொனால்டு டிரம்ப்பின் கட்டளைகளுக்கு சரண டைந்து, இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரித்தீர்வை மற்றும் வரி யல்லாத தடைகளை குறைக்கும் திட்டங்களை முன் னெடுக்கிறது. மத்திய அரசு ஐரோப்பிய ஒன்றியம், நியூ சிலாந்து மற்றும் பிற நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய தீவிரமாக உள்ளது.

விவசாயச் சந்தையை  திறக்க அழுத்தங்கள்

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவார்டு லுட்னிக், இந்தியா தனது விவசாய சந்தையை திறக்க வேண்டும் என்றும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் விவசாயம் ‘வெளியே இருக்க  முடியாது’ என்றும் வலியுறுத்தினார். ஆஸ்திரேலியாவு டனான ஒப்பந்தத்தின்படி பயறு வகைகளை குறிப்பிட்ட அளவில் சுங்க வரியின்றி இறக்குமதி செய்வ தற்கான கட்டமைப்பை ஏற்படுத்த இந்தியா ஏற்கனவே  தயார் நிலையை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்க விவசாயிகளுக்கு பெரிய அள வில் மானியங்கள் வழங்கப்படும் சூழலில், எந்த  இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் மிகவும் சமமற்றதாக இருக்கும் என்பது மிகத் தெளிவாகிறது.

பால்வளத் துறையின்  மீதான தாக்கம்

பெரிய அமெரிக்க வணிகப் பொருட் குழுமங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ள உள்நாட்டு மானி யங்கள் கூடாது என்றும்; அவை நீடித்தால் அதன் பேரில் வர்த்தக தடைகள் விதிப்போம் என்றும் அச்சு றுத்தல்களை எழுப்புகின்றன. விவாதிக்கப்படும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் பால் உற்பத்தியாளர்க ளுக்கு மரண அடியாக இருக்கும், ஏனெனில் வரித் தீர்வை மற்றும் சந்தை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் அமெரிக்காவின் பால் பொருட்கள் ஏற்றுமதி இந்தி யாவில் பெரும் அளவில் அதிகரிக்கும்.

டிரம்ப்பின்  அச்சுறுத்தல்களின் நோக்கம்

டிரம்ப்பின் அச்சுறுத்தல்களின் நோக்கம், வாழ்வா தாரத்திற்காக இந்தத் துறையை நம்பியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான இந்திய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களைக் கொண்ட விவ சாயத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள அற்ப பாது காப்பையும் குறைப்பதாகும். இந்தியாவில் விவசா யிகளின் மொத்த எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். விவசாய பொருட்களுக்கான 39% சராசரி வரித்தீர்வை, உலக வர்த்தக அமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட கட்டுப் பாட்டு விகிதத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். அமெரிக்காவின் நடவடிக்கை இந்திய விவசாயத்தை அமெரிக்க இறக்குமதிகளுக்கு முற்றிலும் திறக்கு மாறு இந்தியாவை கட்டாயப்படுத்துவதாகும்.

அமெரிக்க கோதுமை  கழகத்தின் கூற்றுகள்

அமெரிக்க கோதுமை கூட்டமைப்பு, இந்தியாவில் விவசாயிகளுக்கு அரசு அளித்துவரும் அற்பமான மானியத்தைக் கூட உயர் அளவிலான உள்நாட்டு ஆதரவு என்கிறது; அமெரிக்காவின் வர்த்தகத்தை சிதைக்கும் அளவு உயர் வரித்தீர்வைகள் உள்ளதாக வும் கூறுகிறது. அவர்கள் அமெரிக்க உற்பத்தியாளர்க ளுக்கு பொருளாதார வருவாயில் பெரும் அதிகரிப்பு கிடைக்க வேண்டும் என மதிப்பிடுகின்றனர். 2031/32க்குள்  792 மில்லியன் டாலர் அளவிற்கு அதிக ரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். அதேபோல், மக்காச்சோளத்தின் விஷயத்தில், மரபணு மாற்றப் பட்ட மக்காச்சோளம் மற்றும் எத்தனால் மீதான இந்தி யாவின் இறக்குமதி தடையை நீக்க ஒரு முயற்சி உள்ளது, இதன் மூலம் அமெரிக்காவுக்கு 300 மில்லி யன் டாலர் அளவிற்கு திடீர் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோயாபீன், பாதாம், பிஸ்தா, அக்ரூட், ஆப்பிள் மற்றும் தோட்டக்கலை பயிர் கள் அனைத்தும் பேச்சுவார்த்தைக்கு உள்ளாகின்றன. அமெரிக்க தளத்தில் உள்ள பொருள் குவிப்புக் குழுமங்கள் முதன்மையாக செயல்படுகின்றன.

பேச்சுவார்த்தைகளின் வெளிப்படையற்ற தன்மை

அனைத்து பேச்சுவார்த்தைகளும் மாநில அரசு களையோ அல்லது நாடாளுமன்றத்தையோ நம்பிக் கைக்கு எடுத்துக்கொள்ளாமல் நடத்தப்படுகின்றன. இத்தகைய ஒப்பந்தங்கள் சர்வதேச தொழிலாளர் தர நிலைகளின் செயல்பாட்டையும் உறுதி செய்வ தில்லை.

பிற நாடுகளின் திடமான எதிர்ப்பு

சீனா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் டிரம்ப்பின் வரித்தீர்வைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்பை காட்டி, தங்கள் பொருளாதார நலன் களை பாதுகாக்க அணிதிரண்டபோது, இந்தியா சரண டைந்து தனது தேசிய நலன்களை விட்டுக்கொடுப்ப தைத் தேர்வு செய்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா வுக்கு 70% க்கும் அதிகமான ஏற்றுமதியைக் கொண்ட கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவை, அமெரிக்கா வுக்கு பதிவு தர ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. அதே சமயம் அமெரிக்காவுக்கு 18% மட்டுமே ஏற்று மதியைக் கொண்ட இந்தியா, அமெரிக்காவின் பலாத் கார தந்திரங்களுக்கு எதிராக நிற்க மறுக்கிறது. அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை அவமானப்படுத்தி வரும் நிலையிலும், அரசின் வேண்டுகோளின் பேரில் ஏர்டெல் மற்றும் ஜியோ சமீபத்தில் எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங் க்குடன் இணைந்ததே சமீபத்திய அத்தகைய நிகழ்வா கும். விவசாயத்தைத் தவிர, மருந்துகளில் இருந்து ஆட்டோ பாகங்கள் வரையிலான துறைகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன்க ளும், இந்த துறைகளில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களும் பாதிக்கப்படும்.

அடிபணியாதே!

டிரம்ப் 2.0 ஆட்சியின் ‘பெரிய’ ஏகாதிபத்திய திட்டங்க ளுக்கு இந்திய அரசு பணிந்து போகக்கூடாது என்று சி.பி.ஐ.(எம்) வலியுறுத்துகிறது. அமெரிக்கா வரித் தீர்வை போரை நிறுத்த வேண்டும். அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு சரணடைவதற்கான எந்த முயற்சிகளை யும் கடுமையாக எதிர்ப்போம். J    அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைக ளையும் அனைத்து சமமற்ற தாராள வர்த்தக ஒப்பந் தங்களையும் கைவிடுங்கள்! J    ஏகாதிபத்திய நலன்களுக்கு அடிபணிவதை நிறுத்து ங்கள்! J    டிரம்ப்பின் வரித்தீர்வை போருக்கு எதிராக போரா டுங்கள்!