articles

img

முதல் அலையில் தொடங்கி இரண்டாவது அலையிலும் இடையறாது தொடரும்... மதுரை மாநகர் கம்யூனிஸ்ட்டுகளின் சமூக நலப்பணி...

2019-ல் கண்டறியப்பட்ட பெருந்தொற்று பாதிப்பு 2020-ல் இந்தியாவில் ஏற்பட்டது. இது மார்ச் மாதத்தில் அதிகரித்து ஜூலை வரை ஊரடங்கை சந்தித்தோம்.முதல் அலையில் அன்னவாசலில்துவங்கிய நமது சமூகப்பணி, நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் (ஆர்செனிக் ஆல்பம் - 30) ஹோமியோ மருத்துவமுகாம்கள், கபசுர குடிநீர் வழங்குதல், கிருமிநாசினி தெளிப்பது - வாழ்வாதாரம்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுதானியங்கள் ஆங்காங்கே வழங்கியது போன்ற செயல்பாடுகளுடன் களத்தில் நின்றோம்.

இரண்டாவது அலையிலும் பெருந்தொற்றுக்கு எதிராக தொடர் கறது.இந்த களப்பணி. அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் உதவி மற்றும் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டது. மதுரைநாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மா.கணேசன் ஆகியோர் கொண்ட ஆலோசனைக்குழுவின் உதவியுடன் 15 பேரைக்கொண்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் 170 பேர்களை தன்னார்வலர்களாக கொண்ட உதவிமையம் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பின் கன்வீனராக வை.ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்.

குழுக்கள் உருவாக்கம்
அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தோப்பூர் அரசு  மருத்துவமனைகளுக்கான தலையீட்டு குழுவில் ஜா.நரசிம்மன், மா.பாலசுப்பிரமணி, ஜெ.லெனின். தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்காக  உதவும் குழுவில் ஏ.ரமேஷ், எஸ்.கோபி, ஏ.பாவல் சிந்தன். ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திக்கான உதவும் குழுவில் கே.அலாவுதீன், வி.எஸ்.அபுதாஹீர், க.திலகர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நிலைமைகளை பத்திரிகையின் வாயிலாக குழுவிற்கு பகிர்ந்தளிக்க ஜெ.பொன்மாறன், ச.லெனின் ஆகியோரைக்கொண்ட குழு. சமூக வலைதளங் களில் வரும் செய்திகளை தன்னார்வலர்களிடம் கொண்டு செல்ல டி.செல்வா, வேல்தேவா, பாவல்சிந்தன்உள்ளடக்கிய குழு. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில்தனிமைப்படுத்திக் கொண்டவர் களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு ஆர்.சசிகலா, பி.கோபி, வேல்தேவா, பாலா,யமுனா தலைமையிலான குழு.ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் நேரடி தலையீடு மற்றும் உதவி செய்வதற்காக வார்டிற்கு 2 பேர் என 7க்கும் மேற்பட்ட குழுக்கள்உருவாக்கப்பட்டு பணிகள் தொய் வில்லாமல் நடைபெற்றுவருகின்றன.மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையுடன் இணைந்து  Corporation health volunteer, வாட்சப்குழு உருவாக்கப்பட்டுள்ளது.   உதவி மற்றும் ஆலோசனை மையம் மூலமாக Medical helpdesk வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செயல்படுத்திவருகிறது. மதுரை மாநகராட்சி பொதுதன்னார்வலர்கள் வலைதளக்குழுவின் மூலமாக தடுப்பூசி முகாம்கள் மற்றும் கொரோனா சோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் பகிரப்படுகிறது.

மருத்துவமனைகள் உதவி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியுடன் கொரோனா மற்றும் பொது நோய்களுக்கு உதவி வருகிறோம்.உதவி மற்றும் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டதற்கு பின்னர் பொது மக்கள் தொடர்பு கொண்டுஉதவி மற்றும் ஆலோசனை பெற்றுவருகின்றனர்.மதுரையில் உள்ள தனியார்மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் உள்ள படுக்கை வசதி, வெண்டிலேட்டர் வசதி, கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் பொதுமக்களிடம் இருந்துவரும் உதவிகேட்புகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

வாகன உதவி
ஆபத்தான நிலையில் உள்ளநோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ்காலதாமதமின்றி கிடைப்பதற்கும், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் வேறுசில நோய்களினால் உயிரிழந்தவர்களின் சடலங் களை மயானங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அமரர் ஊர்தி மற்றும் தமுமுக, தவ்ஹீத் ஜமாத் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் ,தனியார் தன்னார்வல நிறுவனங்களின் உதவியுடன் நல்லடக்கம் செய்யும் பணி தொய் வின்றி நடைபெற்று வருகிறது.

செய்திகள் 
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள அன்றாட நிலைமைகளை, மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை, அரசு வெளியிடும் தரவுகளை குழுவுடன் பகிர்ந்து கொள்வதில் பத்திரிகையாளர்கள் குழு சிறப்பாக பணியாற்றுகிறது.

சமூக வலைதளக்குழு
பொதுவெளியிலிருந்து வரும்செய்திகளை குறிப்பாக கொரோனாதொற்று பாதிப்பு மற்றும் தேவைகளை உடனுக்குடன் குழுக்களுக்கு பகிர்வதிலும் அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதிலும் வலைதளக் குழுவின் பணியில் தொய்வில்லை.

ஆரம்ப சுகாதார மருத்துவமனையுடன் இணைந்து களப்பணிதன்னார்வலர்களையும் - மருத்துவமனை பணியாளர்களையும் இணைத்து பணியாற்றுவதில் மதுரைமாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் 1-4, 2-3 என இரண்டு மையங்களில் மதுரை  நகர்நல முதன்மை அலுவலர், உதவி நகர்நல அலுவலர், மருத்துவ அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் நமது தன்னார்வலர்களை கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் 105 தன்னார்வலர்கள்பங்கேற்றனர். இதன் மூலம் தினந்தோறும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 31 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளின் மூலம் நடைபெறும் முகாம் களில் நமது தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

பகுதிக்குழுக்கள் - சிஐடியுவின் பங்களிப்பு
கொரோனா பெருந்தொற்று மதுரையில் 300-ஐ தொட்டபொழுதே மதுரை மாநகராட்சியும் - சிஐடியு வெண்டிங் கமிட்டியும் இணைந்து நான்கு மண்டலங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கபசுரகுடிநீரை நாள் ஒன்றுக்கு பல நூறுலிட்டர்களை தயாரித்து மதுரை மக்களுக்கு விநியோகித்தது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மேலப் பொன்னகரம் பகுதிக்குழு முதலில் துவங்கி செல்லூர், அரசரடி, மத்தியப்பகுதி, பழங்காநத்தம் என அனைத்து பகுதிக்குழுக்களும் வீடுவீடாகச் சென்று கபசுரகுடிநீரை வழங்கி வருகிறது. இப்பணியில் வயது ஒரு தடையல்ல என பல்வேறுதோழர்கள் களப்பணியில் உள்ளனர்.    

உதவியாளர்களுக்கு உதவி
கொரோனா நோய் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு உதவிவரும் உதவியாளர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கிவருகின்றன புதூர், ஜெய்ஹிந்புரம் உள்ளிட்ட பகுதிக்குழுக்கள் . இதில் ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்குழுவினர் நாள் ஒன் றுக்கு 150 பேருக்கு கடந்த 10 தினங்களாக உணவு வழங்கி வந்தனர்.

மயான ஊழியர்களும் முன்களப் பணியாளர்களே
முதல்அலை மற்றும் இரண்டாவது அலை ஏற்பட்டு கொரோனாவினால் உயிரிழந்தவர்களை எரியூட்டுவதில், அடக்கம் செய்வதில் மயான ஊழியர்களின் துணிவு, தியாகம் போற்றப்பட வேண்டிய ஒன்று. நாள் ஒன்றுக்கு 9 மணிநேரம் செயல்பட்டுவந்த தத்தனேரி கைலாசபுரம், கீரைத்துரை மின் மயானங்கள் 24x7 ஆக மாறியது.சலிப்பு இல்லாமல் சேவையாற்றி வருகின்றனர் மயான ஊழியர்கள். மகத்தான சேவையாற்றிவரும் மயான ஊழியர்கள் 50 பேருக்கு (கைலாசபுரம்) ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளது மதுரை கோட்ட எல்.ஐ.சிஊழியர் சங்கம். இது பாராட்டுக்குரிய செயலாகும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்றமுறையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் என்ற முறையிலும் மதுரை மக்களின் நலன்களுக்காகவும், தமிழகத்தின் நலன்களுக்காகவும் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முன்முயற்சி பேரிடர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டு வருகிறது. அரசு ராஜாஜி மzத்துவமனை மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனைகளில் 2020-ல்கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் தனது தொகுதி மேம்பாட்டுநிதிமூலம் கொரோனா சிகிச்சைக்கான பல்வேறு பரிசோதனைகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கும் நோய்தடுப்பு மருந்து பெட்டகங்களுக்கும், நிதி ஒதுக்கீடு செய் துள்ளது பாராட்டுக்குரியது.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியை அதிகப்படுத்துவதிலும் தோப்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் உள்ளிட்ட படுக்கை வசதியை 30-ல் இருந்து 153ஆக அதிகப்படுத்துவதிலும் பின்னர் 500 படுக்கையாக அதிகப்படுத்துவதிலும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பணி முன்களத்தில் உள்ளது.

தடுப்பூசி முகாம்
கொரோனாவை விரட்டும் பேராயுதம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான். இதில் ஒருசிலரிடம் இருந்ததயக்கத்தை உடைப்பதில் மதுரைநாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் முன்முயற்சியில் மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், தீக்கதிர் அலுவலகம், அரசு போக்குவரத்து சங்கம், மதுரை மாவட்ட சிஐடியு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் தடுப்பூசி முகாமிற் கான மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், முதியவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் பொதுமக்கள் ஒரு சிலரிடம் இருந்த தயக்கத்தை ஓரளவு குறைக்க முடிந்தது. தடுப்பூசி முகாம்களை ஒருங்கிணைப்பதில் இரா.லெனின் சிறப்பாக செயல்பட்டார்.கொரோனா என்ற பெருந்தொற்றிலிருந்து அனைத்து பகுதியினரையும் பாதுகாப்பதில் முன்களப்பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள்,செவிலியர்கள், சுகாதாரபணியாளர்கள், காவல்துறையினர், மயான ஊழியர்கள் அனைவரோடும் இணைந்து பெருந்தொற்றை அழித் தொழிப்பதில் பிரதிபலன் பாராமல் மக்களின் நலன் சார்ந்து சமூக பணியாற்றுபவர்களில் என்றென்றும் கம்யூனிஸ்ட்களுக்கு ஓர் இடம் உண்டு.போகிற போக்கில் மேலப்பொன் னகரம் பகுதியில் தோழர்கள் வீடுவீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கிய போது, ஒரு தாயின் குரல் “ தேர்தலில் தோற்றாலும், ஜெயித்தாலும் எப்பவுமே நீங்கதான்யா மக்களுக்கு ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கீங்க” என்று கூறியது. கம்யூனிஸ்ட் களுக்கு  இதை விட சத்தான டானிக்வேறென்ன?

வை.ஸ்டாலின்

சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்