articles

img

வீணான காந்தங்களிலிருந்து அரிய மூலகங்கள்

வீணான காந்தங்களிலிருந்து அரிய மூலகங்கள்

அரிய மூலகங்களால்(rare earth elements) ஆன காந்தங்கள் கணினி வன்தகடு மற்றும் மின் வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நவீன தினசரி வாழ்விற்கு அத்தியாவசியமான லேசர், கண்ணாடி, மின்னணு இன்னும் பலவற்றில் அரிய மூலகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கவும் பிரிக்கவும் மிகவும் செலவு பிடிக்கக்கூடியவை. இந்த மூலகங்கள் ஒத்த குணங்கள் உடையவை; மேலும் பூமியில் கூட்டுப் படிவங்களாகவே  காணப்படுகின்றன. எனவே இவற்றை பிரித்தெடுப்பது கடினமானது.  உலகிலுள்ள அரிய மூலகங்களின்  பெரும்பகுதியையும் அவற்றை சுத்தம் செய்வது, பிரித்தெடுப்பது ஆகிய திறன்களையும் சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அரிய மூலக காந்தங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. பயன்படுத்தப்பட்ட காந்தங்களிலிருந்து இந்த மூலகங்களை பிரித்தெடுக்க ஒரு புதிய முறையை ரைஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியலாளர் ஜேம்ஸ் டூர் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  வீணான காந்தங்களை குளோரின் வாயு இருப்பில் துரிதமாக சூடாக்குவதே இந்த முறை. இதற்கு   இப்போதுள்ள முறைகளை விட 87சதவீதம் மின்சாரம் குறைவாகவே தேவைப்படுகிறது. மேலும் பசுமைக்குடில் வாயுக்களை  84%  குறைவாக வெளிவிடுகிறது. இந்த ஆய்வுக் கட்டுரை Proceedings of the National Academy of Sciences என்கிற இதழில் வெளிவந்துள்ளது.