articles

img

வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டிகள்...-வீ.அமிர்தலிங்கம்

இராமையாவின் குடிசை என்றதுமே நம் நெஞ்சமெல்லாம் தீ மூட்டும். 44 வெண்மணித் தியாகிகளின் நினைவல்லவா? 1968 டிசம்பர் 25. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் செங்கொடி இயக்கம் நடத்திய சம உரிமைக்கான போராட்டத்தின் உச்சம். மனிதனாக நடத்திடாமல் விலங்குகளைப் போல விவசாயக் கூலித் தொழிலாளர்களை காலங் காலமாக அடக்கியவர்களுக்கு எதிராக எழுந்த பெரும் வெடிப்பு. அரைப்படி நெல் கூலி உயர்விற் காக மட்டுமா அவர்கள் போராடினார்கள். அரைப்படி அல்ல, அதைவிட அதிகம் தருவதற்கும், நிலச்சுவான் தாரர்கள் தயாரான போதும், “செங்கொடியை இறக்கு - நெல் உற்பத்தியாளர் சங்கக் கொடியை ஏற்று”  என்று வற்புறுத்தியபோதும் எங்கள் உயிரே போனா லும் நாங்கள் எங்கள் செங்கொடியை இறக்க மாட்டோம் என நெஞ்சுரத்தோடு கர்ஜித்து, கல்வி வாய்ப்பற்ற அந்த மக்கள் உறுதியோடு நின்றதால் அல்லவா செந்தீயில் வெந்து மடிந்தார்கள். அந்த உச்சபட்ச தியாகம் தான், அரை நூற்றாண்டு கடந்தும் அவர்க ளின் நினைவை இன்றும் உழைக்கும் வர்க்கம் போற்று கிறது. வரும் காலமெல்லாம் போற்றிக் கொண்டே இருக்கப் போகிறது.

விடுதலை வந்ததா? 

பிரிட்டிஷ்காரர்களின் காலனி ஆதிக்க ஆட்சியில் நாட்டின் செல்வ வளங்கள், உழைப்பு, உற்பத்தி அனைத்தும் சூறையாடி கொள்ளையடித்துச் செல்லப் பட்டது. விடுதலைக்குப் பிறகு நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்படும் என்று கூறிய ஆட்சியாளர்களின் உறுதிமொழி மக்களுக்கு உதவாமலே போனது. ஆனால் அதற்கு மாறாக நிலப்பிரபுத்துவ, பணக்கார வர்க்க நலன்களுக்கு தேசத்தின் சொத்துக்கள் பந்தி வைக்கப்பட்டே வருகிறது. உழைக்கும் மக்கள் ஓட்டாண்டிகள் ஆக்கப்பட்டனர். செங்கொடி இயக்கத் தின் தளங்கள் வருவான இடங்களில் எல்லாம் கம்யூ னிஸ்ட்டுகள், அடிமைப்பட்டுக்கிடந்த மக்களை ஒன்று திரட்டி சமரசமற்ற வர்க்கப் போரை நடத்தி சுதந்திர  பெருமூச்சை  சுவாசிக்க வைத்தனர். ஆட்சி அதிகாரங்க ளில் அவ்வப்போது மாற்றங்கள் உருவாகிறது. ஆனால் உழைப்போரின் வாழக்கைத் தரத்தில்தான் மாற்றங்கள் வரவில்லை.

போராட்டம் ஓயாது...

உழைப்பிற்கு ஏற்ற கூலி; சம உரிமைக்காக போரா டிய வெண்மணித்  தியாகிகளின் போராட்டத் தேவை இன்றும் தொடருகிறது. நிலப்பிரபுத்துவம் கடந்த 50 ஆண்டுகளில் பல பரிமாணங்களை அடைந்து நவீன ஒடுக்குமுறையை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏவுகிறது. உழைப்புச் சுரண்டலுக்கு ஒன்றிய அதிகார வர்க்கம் ஒத்திசைவு செய்கிறது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைப்பாளிகளுக்கு கேர ளாவின் இடதுசாரி ஆட்சி தவிர வேறு எந்த அர சாட்சியும் குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தை உரு வாக்கிச் செயல்படுத்தவில்லை. அவுட்சோர்சிங், தினக்கூலி உள்ளிட்ட நிரந்தரமற்ற வேலை, கூலி நிலை மைகளே அரசுகளால் அமலாக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. c\

ஜனநாயகப் புரிதலும்- நவீனமும் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்திலும் உழைக்கும் வர்க்கத்தை  ஒடுக்க நினைக்கும் முகங்கள் மட்டும் மாறிக் கொண்டே யிருக்கின்றன. அன்று நிலச்சுவான்தாரர்கள், இன்று ஒன்றிய ஆட்சியாளர்களைப் போன்றவர்களும் - கார்ப்பரேட்டுகளும். உழைக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கமாகவே இருந்து கொண்டு இருக்கிறது. ஒடுக்க நினைப்பவர்கள் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு இருக்கிறார்கள் இப்படியாக இருதுருவ அரசியல் என்பது நீடித்துக் கொண்டே இருக்கிறது.

கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக தொழிலா ளர்களைச் சுரண்ட முற்படும் போக்கை சமீபத்திய சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் உலகிற்கு உணர்த்தியது. வேங்கைவயலில் மனிதம் துறந்து, மலம் கலந்தது சமூகக் கொடுமையின் அவலங்களை  வெளிச்சம் போடுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மதம், சாதியின் பெயராலும் வெட்டிப் பறிக்கப்படும் பல நூறு உயிர்களின் மூச்சு. இதுபோன்ற ஆயிரக்க ணக்கான நிகழ்வுகள் ஒவ்வொன்றின் முன்பும் வெண்மணி தியாகிகளின் போராட்டம் ஓயாது என்பதை ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

மாற்றம் மட்டுமே தீர்வு

ஆளும்வர்க்கங்கள் லாப நோக்கத்தை மட்டுமே கொண்ட முதலாளித்துவ ஊடகங்கள், சமூக ஊட கங்கள் இடதுசாரிகளின் தேவை ஓய்ந்துவிட்டதைப் போன்ற மாயையை உருவாக்க முற்படுகின்றன. இது உண்மையானதல்ல. முதலாளித்துவத்தின் சூழ்ச்சியே. இடதுசாரிகளின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது அண்மையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடு களிலும் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களில் இடதுசாரி தலைவர்கள் ஜனாதிபதிகளாக தேர்வு செய்யப்பட் டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக நமது தமிழகத்தின் கடைக்கோடி எல்லையான வேதா ரண்யத்திலிருந்து, கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நமது அண்டை நாடான இலங்கையில் கூட சிறிது மாற்றம் உருவாகி இடதுசாரி சிந்தனை கொண்ட அனுர குமார திசா நாயக ஜனாதிபதியாக தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதைப்போன்ற மாற்றம் வளங்கள் பல கொண்ட இந்தியாவிற்கும் இடதுசாரி அரசியல் அவசி யம் என்பது பல தருணங்களில் உணர்த்தப்பட்டு வரு கிறது. இடதுசாரி அரசியலால் மட்டுமே இந்திய மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த முடியும். அதை நோக்கி முன்னேறுவதற்கு நமது போராட்டப் பாதை ஓயாது. அந்த சமரசமற்றப் போராட் டப் பாதைக்கு வர்க்கப்போரின் தியாகிகளான, வெண்ம ணித் தியாகிகள் வழிகாட்டியாய் விளங்கிக் கொண்டே யிருப்பார்கள்.

உறுதியேற்போம்!

இத்தகைய அரசியல் சூழலில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில, அகில இந்திய மாநாடுகள் வெற்றிகர மாக நடைபெற உள்ள நிலையில், வெண்மணித் தியாகி களின் நினைவுகளோடு இயக்கத்தை முன்னெ டுத்துச் செல்வோம்! தொழிலாளர்கள் - விவசாயி கள் - விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டி,  கிராமப்புற எழுச்சியே மக்கள் விடுதலைக்கான மாபெ ரும் முன்னெடுப்பு என்பதை நிலைநாட்டுவோம்! போராட்டப் பாதையை கூர்மைப்படுத்துவோம்! விதை கள் உறங்கிப் போனால் விளைச்சல் பாதிக்கு மல்லவா? விதைகளே உறங்காதீர்கள்!

வெண்மணித் தியாகிகள் வழிகாட்டுகிறார்கள்.
தியாகிகளின் புகழ் திக்கெட்டும் ஓங்கட்டும்!

கட்டுரையாளர் : மாநிலப் பொதுச் செயலாளர், 
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்