மரவள்ளி டன்னுக்கு ரூ.15,000 விலை கேட்டு அக். 8ல் ஆர்ப்பாட்டம்
சேலம், செப்.21- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலத்தில் மரவள்ளி விவசாயிகள் கோ ரிக்கை சிறப்பு மாநாடு செப்.20, சனிக்கிழமை நடைபெற்றது. சேலம், நாமக்கல், பெரம்ப லூர், கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட மர வள்ளி சாகுபடி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர். மாநாட்டில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,000 என படுவீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், குறைந்தபட்சம் ஆதார விலையாக டன்னுக்கு ரூ.15,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஜவ்வரிசிக்கு மூட்டைக்கு ரூ.4,500, ஸ்டார்ச்சுக்கு ரூ.3,500 என குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 18 முத்தரப்பு கூட்டத்தின் முடிவுகள் இம்மாநாட்டில், செப்டம்பர் 18ல் அமைச்சர் இரா.ராஜேந்திரன் தலைமை யில் நடைபெற்ற மூன்று தரப்பு கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேற்கண்ட முத்தரப்புக் கூட்டத்தில், சிறு குறு நடுத்தர தொழில்துறை ஆணையர், மாவட்ட ஆட்சி யர், சேகோசர்வ் நிர்வாக இயக்குனர், வரு வாய், வேளாண், உணவு பாதுகாப்பு துறைக ளின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மக்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், ஜவ்வரிசி உற் பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் மூன்று தரப்பும் கருத்து களை தெரிவித்தனர். டன்னுக்கு ரூ.15,000 என்ற கோரிக்கை நியாயமானது என அனை வரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதில் ஒரு விவசாயி, ஒரு ஜவ்வரிசி உற்பத்தி யாளர், ஒரு வியாபாரி, சேகோசர்வ், உணவு பாதுகாப்பு துறை, வேளாண் துறைகளில் இருந்து தலா ஒருவர் சேர்த்து, 2 வாரத்தில் வேளாண்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்வது என முடிவானது. மாநாட்டில் வெளிப்பட்ட கவலைகள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற மேற்கண்ட முத்தரப்பு கூட்டத்தில் அமைச்ச ரின் அறிவிப்பு, மரவள்ளி கிழங்கு அறுவடை துவக்க காலம் என்பதால் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர். விவசாயிகள் “சேகோசர்வ் மூலம் ஜவ்வரிசி அனைத்தும் வியாபாரம் செய்ய வேண்டும்” என்றும், “எங்களுக்கு தேவை டன்னுக்கு ரூ.15,000 விலை” என்றும் கருத்து தெரிவித்தனர். சிறு குறு நடுத்தர தொழில் மற்றும் வணிக துறை ஆணையர் “இருவித கருத்து மரவள்ளி விவசாயி மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மத்தியில் இருக்கிறது, ஆகவே முடிவு எடுக்க முடியாது” என குறிப்பிட்டது அரசின் பொ றுப்பைத் தட்டிக்கழிப்பது போல் ஆகிவிட்டதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். குழு பரிந்துரை வந்து வேளாண்துறை க்குச் சென்று வருவதற்குள் இந்த போக அறு வடையும் முடிந்துவிடும் என்பதால், தமிழ்நாடு அரசு முத்தரப்பு கூட்டத்தில் வந்த பெரும் பான்மை கருத்தின் அடிப்படையில் யதார்த்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உடனடியாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுக்கு முன் டன்னுக்கு ரூ.16,000 வரை விற்பனையான மரவள்ளி, கடந்த ஆண்டு ரூ.4,000 ஆகவும், தற்போது ரூ. 3,000க்கும் கீழாகவும் சரிந்துள்ளது. இந்நிலை விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிவிடக்கூடும் என்று அச்சம் தெரி விக்கப்பட்டது. அக்டோபர் 8 ஆர்ப்பாட்டம் இந்நிலையில், மரவள்ளி கிழங்குக்கு டன்னுக்கு ரூ.15,000, ஜவ்வரிசி மூட்டைக்கு ரூ.4,500, ஸ்டார்ச் மூட்டைக்கு ரூ.3,500 இந்த ஆண்டுக்கு கொள்முதல் விலையாக அறி வித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வற்புறுத்தி அக்டோபர் 8ல் மரவள்ளி சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என மாநாடு தீர்மானித்தது. அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்க வேண்டுமாய் மாநாடு கேட்டுக்கொண்டது. மாநாட்டில் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஏ.அன்பழகன் வரவேற்றார். மாநில தலைவர் டி.ரவீந்திரன் துவக்கி வைத்து உரை யாற்றினார். மாநில செயலாளர் பி.பெருமாள், ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் அரங்க.சங்கரய்யா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் நிறைவுரை ஆற்றினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ஆதிநா ராயணன், பெரம்பலூர் மாவட்ட தலை வர் ராஜேந்திரன், வாழப்பாடி கொ.ம.தே.க. தலைவர் செல்லப்பன், ஐவிச பொதுச்செயலா ளர் வழக்குரைஞர் கோவிந்தன் உள்ளிட்டு 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.