articles

img

விவசாயத் தொழிலாளர் வாழ்வைச் சிதைக்கும் நவீன தாராளமயக் கொள்கைகள் - வீ.மாரியப்பன்

விவசாயத் தொழிலாளர் வாழ்வைச் சிதைக்கும் நவீன தாராளமயக் கொள்கைகள்

இந்திய விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும், உலக மக்களின் தேவைக்கும் அதிகமாக, 150 சதவீதம் கூடுதல் உணவு தானியங்களை விளைவித்துக் கொடுத்தாலும், நாட்டில் பசியும் பட்டினியும் வறுமையும் நீங்கிய பாடில்லை. இதற்குக் காரணம் உணவுப் பற்றாக்குறை அல்ல, மாறாக, ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளே ஆகும். இந்தக் கொள்கைகள் விவசாயிகள் மற்றும் விவசா யத் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. விவசாயம் கார்ப்ப ரேட் மயமாக்கப்படுவது, விவசாய நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படுவது போன்றவற்றால் விவ சாயப் பரப்பளவு குறைந்து, நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிறு, குறு விவ சாயிகள் தங்கள் நிலங்களை இழந்து கூலித் தொழி லாளர்களாக மாறி வருகின்றனர்.

பெருகும் விவசாயத் தொழிலாளர்கள், குறையும் வேலைவாய்ப்பு

கிராமப்புற இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக் கையைவிட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. H1952-இல்: விவசாயத்தில் மொத்தப் பணியாளர்க ளில் விவசாயிகளின் பங்கு 82%, கூலித் தொழிலா ளர்கள் 18% இருந்தனர். H தற்போது: விவசாயிகளின் பங்கு 45.2% ஆகவும், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 55% ஆகவும் அதிகரித்துள்ளது. H விவசாயிகள் - தொழிலாளர் விகிதம்: 1961-இல் 100 விவசாயிகளுக்கு 33 விவசாயத் தொழிலாளர்கள் இருந்த நிலையில், 2011 கணக்கெடுப்பின்படி, 100 விவசாயிகளுக்கு 121 தொழிலாளர்களாக உயர்ந்துள்ளது. விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதி கரித்த போதிலும், வேலை நாட்கள் குறைந்துள்ளன. 1991-இல் 100 நாட்களாக இருந்த வேலைவாய்ப்பு, தற்போது 52-லிருந்து 38 நாட்களாகக் குறைந்துள்ளது. வேலையின்மையால் கொத்தடிமைகள் போல, விவ சாயத் தொழிலாளர்கள் பசி மற்றும் பட்டினி என்ற  சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தங்கள் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையைக் கடத்துவதற்கே போராட வேண்டியுள்ளது.

மாறிவரும் வேலைத் தன்மை மற்றும் சந்தையின் நிச்சயமற்ற நிலை

நவீன தாராளமயக் கொள்கைகளால், விவசாயத் துறைக்கான மானியங்கள் வெட்டப்படுவது, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) உத்தரவாதம் இல்லாதது போன்ற காரணங்களால் அரசின் ஆதரவு குறைந்துவிட்டது. முன்பு வானிலை மட்டுமே விவசாயிகளுக்கு நிச்சயமற்றதாக இருந் தது, ஆனால் தற்போது சந்தையின் நிச்சயமற்ற தன்மையானது இயற்கையின் நிச்சயமற்ற தன்மை யைவிடக் கொடுமையாக உள்ளது.

சிறு கைவினைஞர்களும் தங்கள் வேலையை இழந்து விவசாயத் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உழைப்பை இடம் மாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தின் கண்மூடித்தனமான பயன்பாடும் வேலை நாட்களை மேலும் குறைத் துள்ளது. பெரும்பாலான கிராமப்புற உடல் உழைப்புத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகள் மட்டுமின்றி, 100 நாள் வேலை முதல் செங்கல் சூளை  வரை பல வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

வேலையின்மை காரணமாக இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர். விவசாயம் அல்லாத துறைகளில், குறிப்பாக கட்டுமான வேலைகளில் அதிக எண் ணிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். கிரா மப்புறங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர் 1999-இல் 14.4% ஆக இருந்தது, 2011-இல் 30.1% ஆக அதி கரித்துள்ளது.

குறைந்தபட்சக் கூலி மறுப்பும்  ஊதியச் சமத்துவமின்மையும்

விவசாயம் நெருக்கடியில் சிக்குண்ட இந்தச் சூழ லில், கிடைத்த வேலைக்குச் சென்றாலும், குறைந்த பட்ச கூலி கூடக் கிடைக்காத நிலை உள்ளது.

Hஇந்தியத் தொழிலாளர் சந்தையில் 40 சத வீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்ச ஊதி யத்திற்குக் கீழே சம்பாதிக்கின்றனர்.  H 2021-22 ஆம் ஆண்டின் சராசரி ஊதிய விகிதம் ஆண் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ₹340 ஆகவும்,  பெண் தொழிலாளர்களுக்கு ₹278 ஆகவும் உள்ளது. H பெரும்பாலான கிராமப்புறத் தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாகவே பெறுகின்றனர். H 2013-14 முதல் 2018-19 வரை விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களுக்கான ஊதியம் ஆண்டுக்கு மூன்று சதவீதம் குறைந்துள்ளது. H ஆண் தொழிலாளர்களை விடப் பெண் தொழி லாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படு கிறது. 2021-22 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் பெண் தொழிலாளர்களின் ஊதியம் 15 சதவீதம் குறைவாக இருந்தது.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் சமூக பாது காப்புத் திட்டங்களுக்கான பட்ஜெட் நிதி குறைப்பு போன்ற மோடி அரசின் செயல்பாடுகளே இந்தக் கூலிச் சரிவுக்குக் காரணமாகும். நவதாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, விவ சாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதி யங்களைச் செயல்படுத்துவதற்கான முறையான வழிமுறையும் இல்லாதநிலை தொடர்கிறது.

விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள்

வேலையின்மை, குறைவான கூலி போன்ற கடு மையான நெருக்கடிகளால் விவசாயத் தொழிலா ளர்கள் தற்கொலை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 2013 வரை பதிவு செய்யப்படாத இவர்களின் தற் கொலைகள், 2014-இல் இருந்து பதிவு செய்யப்பட்டன.

H 2014-2024 ( பாஜக ஆட்சி) வரை: மொத்தமாக 40,685 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வட்டியுடன் அசலையும் முழுத் தொகை யையும் கட்டினால் மட்டுமே நகையைத் திருப்பித் தரும் மோசமான முடிவை அரசு அமல்படுத்தி வருகிறது.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் மோடி அரசு

கிராமப்புற ஏழைகளின் வாழ்வுரிமையைப் பாது காக்க, அவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிப்பதற்காக - இடதுசாரிகளின் வலுவான போராட்டம் மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (2005) கொண்டுவரப்பட்டது. இதுவே வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கிய முதல் சட்டமாகும். இத்திட்டம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கும், கொரோனா காலத்தில் பட்டினி நீங்கவும் உதவியது.

இந்தச் சட்டம் மகளிர் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டமாகும். 2022-23 ஆம் ஆண்டில் மொத்தத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 56 சதவீதம் பெண்கள் இருந்தனர்.

ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு, நவீன தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் இத்திட்டத்தை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகக் கருதி, அதை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறது.

H நிதி குறைப்பு: போதுமான நிதி ஒதுக்காமல், கடந்த மூன்று ஆண்டுகளாக ₹86 ஆயிரம் கோடிகள் மட்டுமே ஒதுக்குகிறது. வல்லுநர்கள் கோரும் ₹2.64 லட்சம் கோடியை ஒதுக்குவதில்லை.

Hதாக்குதல்கள்: குறைந்த ஊதியம், ஆதார் ஆன்லைன் வருகைப்பதிவு (NMMS), ஆதார் இணைப்பு (ABPS), சாதிவாரியாக நிதி ஒதுக்கீடு போன்ற நிபந்தனைகளை விதித்து இத்திட்டத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வரு கிறது.

Hவேலை அட்டை நீக்கம்: திட்டமிட்டு நிபந்தனை களை விதித்து, கடந்த 5 ஆண்டுகளில் 1.76 கோடி குடும்பங்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

வேலை செய்தவர்களுக்குச் சம்பளம் கொடுக்கா மல் தாமதிப்பது, சட்டத்தில் உள்ள மற்ற பல சலு கைகளை முறையாக அமல்படுத்தாமல் இருப்பது போன்ற செயல்களால் இத்திட்டத்தை அரசு முடக்கப் பார்க்கிறது.

தமிழ்நாட்டிற்கு நிலுவைத் தொகை: செய்து முடித்த பணிக்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ₹1251.39 கோடி ரூபாய் நிலுவை வைத்து, தமிழ்நாட்டு மக்களைத் தண்டித்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு நிலுவைத் தொகை: செய்து முடித்த பணிக்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ₹1251.39 கோடி ரூபாய் நிலுவை வைத்து, தமிழ்நாட்டு மக்களைத் தண்டித்து வருகிறது.