articles

நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டஅறிவிப்பு

நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டஅறிவிப்பு

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கி ணைப்புக் குழுவின் மாநில ஒருங்கிணை ப்புக் குழு கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடைபெற்றது. நகராட்சி மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து அரசு கருவூலம் மூலம்  ஊதியம் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக வைக்கப்பட்டது. நகராட்சி மாநகராட்சி ஊழி யர்களுக்கு கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது. புதிய பணி விதிகளில் பதவி உயர்வு என்பது எட்டாக் கனியாக உள்ள நிலையை சுட்டிக்காட்டி, பணி விதிகளில் உரிய திருத்தங்களை மேற் கொண்டு பதவி உயர்வு வழங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மறையக்கூடிய பணியிடங்க ளில் பணிபுரிபவர்களுக்கு அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப காலியாக உள்ள பணியிடங்களில் பணி நியமனம் செய்திடுமாறும் வலியுறுத்தப்பட்டது. அரசாணை எண் 152 மற்றும் அரசாணை எண் 10 வெளியிடுவதற்கு முன்பாகவே கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண் ணப்பம் அளித்தவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிடுமாறு கோரப்பட்டது. எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநகராட்சிகளில் ITI முடித்து பணியாற்றும் செயல்திறன் பணியாளர்கள் நிலை இரண்டு மற்றும் நிலை ஒன்று ஆகியோர்களுக்கு விதிகளை ஒருமுறை மட்டும் தளர்வு செய்து தொழில்நுட்ப உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கிடுமாறு கோரப்பட்டது. நகராட்சி வருவாய் உதவியாளர்கள் 97 பேர் கடந்த நவம்பர் 2024 ல் பணியிட மாறுதல் செய்யப் பட்ட நிலையில், அவர்களுக்கு மீண்டும் அதே நகராட்சிக்கு அல்லது அவர்கள் விரும்பும் நகராட்சிக்கு பணியிடம் மாறுதல் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023 க்கு முன்பாக பணியில் சேர்ந்து துறைத்தேர்வில் தேர்ச்சி பெற்று பதவி உயர்வு பெற்றவர்களுக்கு புதிய விதிகளின் கீழ் சேர்க்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்குமாறு கோரப்பட்டது. நகராட்சி மாநகராட்சி பேரூராட்சிகளில் பணி யாற்றும் சுகாதார அலுவலர்களுக்கு ஒரே மாதி ரியான ஊதிய விகிதம் வழங்கிடுமாறும், செயல் திறனற்ற பணியாளர்களுக்கு 1,300 தர ஊதி யத்தை 1900 ஆக உயர்த்தி தர வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்திடு மாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. நகர மாநகர சுகாதார செவிலியர்கள் 20 ஆண்டு களுக்கு மேலாக ஒரே பதவியில் பணிபுரிந்து வரும் நிலையை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வு வழங்கிடுமாறு கோரப்பட்டது. நகராட்சி மாநகராட்சி குடிநீர் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பேரூராட்சி ஊழியர்களுக்கு 2015 ல் வெளி யிடப்பட்ட அரசாணை எண் 142 ஐ போல் நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கும் அமல்படுத்திட வேண்டும் என்று கோரப்பட்டது. ஓய்வூதிய பிரேர ணைகளை தேவையில்லாமல் காலம் தாழ்த்து வதை நிறுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து ஓய்வூதியத்தை அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 17 அன்று சென்னையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பாக நகராட்சி மாநகராட்சி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.