இந்தியா பொருளாதார சமத்துவ தேசமா?
சில நாட்களுக்கு முன்பு பாஜக ஒன்றிய அரசின் “பத்திரிகை தகவல் அலுவலகம்” (Press Information Bureau) இந்தியா உலகின் நான்கா வது மிகப்பெரிய சமத்துவ தேசம் என உலக வங்கி வரை யறுத்துள்ளதாக ஒரு செய்திக் குறிப்பை ஊடகங்களுக்கு அளித்தது. அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்க ளும் இந்த செய்தியை வெளியிட்டன. இதில் உண்மை உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் என எந்த ஊடகத்துக்கும் தோன்றவில்லை. பாஜக ஆதரவாளர்கள் இது மோடி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என பிரச்சா ரம் செய்தனர். மறுபுறத்தில் இந்தியாவின் பொருளாதாரச் சூழல்களை கவனிக்கும் எவர் ஒருவராலும் இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனெனில் அம்பானியும் அதானியும் ஏனைய பெரும் கார்ப்பரேட்டுகளும் எந்த அளவுக்கு அசமத்துவத்தை உருவாக்கியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உண்மை என்ன? உலக வங்கி அப்படிக் கூறியதா? சங் பரிவாரத்தின் சுய பெரு மிதத்தில் நியாயம் உள்ளதா? இவையெல்லாம் இயற்கை யிலேயே எழும் கேள்விகள்.
குதிரையையும் கழுதையையும் ஒப்பிடுவது சரியா?
ஒரே தளத்தில் உள்ள தரவுகளை ஒப்பீடு செய்வது தான் எந்த ஒரு ஆய்வின் அடிப்படை தேவையாகும். இரு குதிரைகளை ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை இருக்கும் பொழுது ஒரு குதிரையையும் ஒரு கழுதை யையும் ஒப்பீடு செய்வது பொருத்தமற்ற ஒன்று. இந்தியா வின் சமத்துவ சாதனை குறித்து குதிப்பவர்கள் இத்தகைய முட்டாள்தனமான ஒப்பீடைத்தான் செய்ய முனைகின்ற னர். உலக வங்கி அவ்வப்பொழுது அசமத்துவம் குறித்து தரவுகளை வெளியிடுகிறது. இதற்கு அசமத்துவ ஜினி குறியீடு (Gini Index) என பெயர். இந்த ஜினி குறியீடு என்பது வருமான அசமத்துவத்தை அளவிடுகிறது. இந்த குறியீடு 0 எனில் 100 சதவிகிதம் சமத்துவம் என பொருள். 100 எனில் அதிகபட்ச அசமத்துவம் என பொருள். இந்த குறியீடு கணக்கிடுவதற்கு மிக அவசியமான தரவுகள் என்பது வருமான விநியோகம் தொடர்பானது ஆகும். அதாவது ஒரு தேசத்தில் வாழும் மக்களிடையே அந்த தேசத்தின் வருமானம் எப்படி பகிரப்படுகிறது? ஒவ்வொரு மக்கள் பிரிவும் எந்த அளவுக்கு வருமானத்தின் பங்கை பெறுகின்றனர்? இந்த தரவுகள்தான் ஜினி குறியீடு கணக்கிடுவதற்கு அடிப்படையானவை ஆகும். எனினும் பிரச்சனை என்னவென்றால் அனைத்து தேசங்களும் வருமானம் பற்றிய தரவுகளை சேகரிப்பது இல்லை. வளர்ந்த தேசங்கள் வருமான தரவுகளை சேக ரிக்கின்றனர். பெரும்பாலான வளரும் நாடுகள் நுகர்வு தரவுகளை மட்டுமே சேகரிக்கின்றன. இந்தியா வெகு காலத்துக்கு முன்பே வருமான விவரங்களை சேக ரிப்பதை நிறுத்திவிட்டது. குடும்பங்கள் என்ன செலவு செய்கின்றன எனும் விவரங்கள்தான் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் சேகரிக்கப்படுகின்றன. குடும்பச் செலவுகள் என்பதன் மாதிரிகள் சேகரிக்கப் பட்டு அவை வருமானத் தரவுகள் என வகைப் படுத்தப்படுகின்றன.
உழைப்பாளிகளின் செலவும் பணக்காரர்களின் பதுக்கலும்
உழைப்பாளிகள் பிரிவை பொறுத்தவரை வருமான மும் நுகர்வும் கிட்டத்தட்ட ஒன்றுதான்! ஏனெனில் உழைப்பாளிகள் தமது வருமானம் முழுவதையும் உணவு/ இருப்பிடம்/ துணி/ கல்வி/ மருத்துவம் ஆகிய வற்றின் தேவைகளுக்கு செலவு செய்ய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அவர்களின் சேமிப்பு மிகக் குறைவு. ஆனால் வசதி படைத்தவர்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியைத்தான் செலவு செய்கின்றனர். இன்னொரு பெரும்பகுதியை சேமிக்கின்றனர் அல்லது பதுக்கு கின்றனர். இந்த விவரங்கள் நுகர்வு தரவுகளில் பிரதிப லிப்பது இல்லை. குடும்பங்களின் நுகர்வு ஆய்வுகளில் பெரும்பாலும் பில்லியனர்களும் மில்லியனர்களும் உட்படுத்தப்படுவது இல்லை. உலகவங்கி, ஒரு பிரிவு தேசங்களின் வருமானத் தரவுகளையும் இன்னொரு பிரிவு தேசங்களின் நுகர்வு அல்லது செலவு தரவுகளையும் சேகரித்து வெளியிடு கிறது. உதாரணத்துக்கு பிரான்சு/ பிரிட்டன்/ பின்லாந்து/ ஐஸ்லாந்து/ பெல்ஜியம்/ செக்கியா போன்ற தேசங்கள் வருமான தரவுகளை முன் வைத்துள்ளன. அதே சமயம் இந்தியா/ இந்தோனேஷியா/ ஈரான்/ பாகிஸ்தான் ஆகிய வளரும் தேசங்கள் நுகர்வு தரவுகளை முன் வைத்துள்ளன. இதனை உலக வங்கி தெளிவாகக் குறிப்பிட்டு இவை இரண்டையும் ஒப்பிட இயலாது எனும் எச்சரிக்கையையும் சொல்கிறது. பிற தேசங்களின் வருமானத் தரவுகளையும் இந்தி யாவின் நுகர்வுத் தரவுகளையும் ஒப்பிட்டு இந்தியா உலகிலேயே நான்காவது மிகப்பெரிய சமத்துவ தேசமாக பரிணமித்து விட்டது என பாஜக அரசாங்கமும் சங் பரிவாரத்தினரும் கொண்டாடுகின்றனர். இவர்களின் “களநாயகன்” தன்னந்தனியாக வெள்ளத்தில் நீந்தி சென்று நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றினார் என பிம்பம் உருவாக்கியது போல; சிறு வயதிலேயே அவர் முதலையுடன் சண்டையிட்டார் என பீலா விட்டது போல; அவர் ஒருவரே ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்திவிடுவார் என பிம்பம் உருவாக்கியது போல இப்பொழுது சமத்துவ இந்தியாவை படைத்துக் கொண்டுள்ளார் என பிம்பம் கட்ட முயல்கின்றனர். ஆனால் மக்கள் தமது சொந்த அனுபவத்திலிருந்து இது உண்மை அல்ல என்பதை உணர்கின்றனர்.
இந்தியாவில் அசமத்துவம்
மேற்கண்ட ஆய்வு பொருத்தமானதல்ல எனில் இந்தியாவின் அசமத்துவத்தை எப்படி கணக்கிடுவது? “சர்வதேச அசமத்துவ ஆய்வுக் கூடம்” (World Inequality Lab) போன்ற அமைப்புகள் பல்வேறு தரவு களை சேகரிப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்கி யுள்ளன. உதாரணத்துக்கு சாதாரண மக்களின் வருமானமும் நுகர்வும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்ப தால் அவர்களின் நுகர்வுத் தரவுகள் சேகரிக்கப்படு கின்றன. பணக்காரர்களின் வருமானத்தை கணக்கீடு செய்ய அவர்களின் வருமான வரி தரவுகள் சேகரிக் கப்படுகின்றன. இந்த இரு வகை தரவுகளும் ஒன்று சேர்க்கப்பட்டு வருமான அசமத்துவம் கணக்கிடப்படு கிறது. இது முழுமையானது இல்லையென்றாலும் ஓரளவு பொருத்தமாக உள்ளது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் அசமத்துவம் குறித்து கீழ்க்கண்ட விவரங்களை சர்வதேச அசமத்துவ ஆய்வுக் கூடம் வெளியிட்டுள்ளது: அடிமட்டத்தில் உள்ள 50 சதவிகிதம் பேர் அதாவது 46.11 கோடிப் பேர் மொத்த வருமானத்தில் 15 சத விகிதமும் பண மதிப்பில் ஆண்டுக்கு ரூ. 71,163 மட்டுமே பெறுகின்றனர். ஆனால் மேல் மட்டத்தில் உள்ள 1சதவிகிதம் பேர் அதாவது 92 லட்சம் பேர் 23 சதவிகித வருமானமும் ரூ.53,00,549 சராசரி வருமானமும் பெறு கின்றனர். அடி மட்டத்தில் உள்ள பெரும்பான்மை யானவர்களை காட்டிலும் மேல் மட்டத்தில் உள்ள 1 சதவிகிதம் பேர் 75 மடங்கு கூடுதலாக வருமானம் ஈட்டுகின்றனர். இன்னும் மோசமான அசமத்துவம் என்னவெனில் இந்திய மக்களில் 0.001 சதவிகிதம் அதாவது மிக மிக மேல்மட்டத்தில் உள்ள வெறும் 9221 பேர் சராசரியாக ஆண்டுக்கு ரூ.49 கோடி அதாவது அடிமட்ட மக்களை ஒப்பிடும் பொழுது 6800 மடங்கு கூடுதலாக வருமானம் ஈட்டுகின்றனர். இதனை சமத்துவ சூழல் என அழைக்க முடியுமா? இந்திய மக்களின் பல்வேறு பிரிவினரின் சொத்து விவரங்களும் இதே அசமத்துவத்தை பிரதிபலிக்கின்றன: 50சதவிகித ஏழைகளிடம் உள்ள சராசரி சொத்தைவிட மேல்மட்ட 1 சதவிகிதம் பேரிடம் 312 மடங்கு அதிகம் சொத்து உள்ளது. அதிலும் மிக மிக மேல்மட்ட 9221 பேரிடம் சராசரியாக 1.3 லட்சம் மடங்கு அதிகமாக உள்ளது. இதனை யாராவது சமத்துவம் என வரை யறுக்க இயலுமா?
பொருளாதார அசமத்துவமும் சமூக அசமத்துவமும்
இந்தியாவில் அசமத்துவம் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; அது சமூகப் பிரச்சனையாகவும் சாதிய அசமத்துவமாகவும் உள்ளது. பொருளாதார அசமத்துவமும் சமூக அசமத்துவமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதை கீழ்க்கண்ட விவரங்கள் வெளிப்படுத்துகின்றன: H டாலர் பில்லியனர்களின் சொத்தில் 90 சதவிகிதம் உயர்சாதியினரிடம் உள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவி னரிடம் 6 முதல் 7சதவிகிதம் சொத்தும் தலித் பிரிவின ரிடம் 2 முதல் 3சதவிகிதம் சொத்தும் உள்ளது. பழங்குடி இன பிரிவிடம் அறவே டாலர் பில்லியனர்கள் இல்லை. ஒட்டு மொத்த சொத்து உடமை விவரங்களும் உயர்சாதி யினரிடம் கூடுதல் சொத்துக்கள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. H இந்திய அளவில் மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவிகிதமாக உள்ள உயர்சாதியினரிடம் 54 சதவிகிதம் சொத்துக்கள் உள்ளன. H 45 முதல் 50சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவி னரிடம் 34 சதவிகிதம் சொத்துக்கள் உள்ளன. H 19.7சதவிகிதம் உள்ள தலித் மக்களிடம் 8 சதவிகித சொத்தும் 9 சதவிகித மக்கள் தொகை கொண்ட பழங்குடி இன மக்களிடம் 4 சதவிகித சொத்து மட்டுமே உள்ளது.
127ஆம் இடத்தில் இந்தியா...
இந்தியா ஒன்றுக்கொன்று பிணைந்த இருவகை அசமத்துவங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அசமத்துவம் பரவலாகவும் ஆழமாகவும் உள்ளது என்பது மட்டுமல்ல; அசமத்துவத்தை அகற்றுவதற்கான ஈடுபாட்டுடன் கூடிய நடவடிக்கை குறியீடு பட்டியலில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள 164 நாடுகளில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ்/ பூட்டான்/ நேபாளம்/ இந்தோனேஷியா/ சிங்கப்பூர்/ கம்போடியா/ தாய்லாந்து போன்ற பல ஆசிய தேசங்கள் அசமத்துவத்தை அகற்ற இந்தியாவைவிட கூடுதலான நடவடிக்கைகளும் ஈடுபாடும் வெளிப்படுத்துகின்றன என இந்த அறிக்கை முன்வைக்கிறது. கார்ப்பரேட்- இந்துத்துவா அரசாங்கத்தின் பல பொருளாதார நடவடிக்கைகள் அசமத்துவத்தை மேலும் தீவிரமாக்கும் பணியையே செய்து கொண்டுள்ளன. பாஜக அரசுக்கு நெருக்கமான அம்பானி, அதானி குழுமங்கள் மட்டுமல்லாது இன்னும் பல கார்ப்பரேட்டு களும் பகற் கொள்ளை அடிக்க உகந்த சூழலை மோடி அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இதற்கு பிரதிபலனாக கார்ப்பரேட்டுகள் இந்துத்துவாவை கேள்வி கேட்பது இல்லை. இந்த பரஸ்பர நன்மைகள் அடித்தளமாக இருக்கும்வரை இந்திய சமூகத்தில் பொருளாதார அசமத்துவமும் சமூக சமத்துவமும் குறையும் வாய்ப்பு அறவே இல்லை. எனினும் இந்திய மக்கள் மேலும் மேலும் இந்த அசமத்துவம் குறித்து அதிருப்தி கொண்டு வருகின்றனர். ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் சமத்துவம் குறித்து என்னதான் பொய்ப் பிம்பங்களை உரு வாக்க முனைந்தாலும் மக்கள் தமது சொந்த அனுப வத்திலிருந்தே இந்த பொய்களை நிராகரித்துவிடுவர். ஆதாரம்: சிபிஐ(எம்) இணையத்தில் சவேரா கட்டுரை.