articles

img

பெண் கல்வி எனும் மகத்தான போராட்ட வரலாறு - எம்.ஜே.பிரபாகர்

பெண் கல்வி எனும் மகத்தான போராட்ட வரலாறு

ரமாதேவி ரத்தினசாமியின் “இந்தி யாவில் பெண் கல்வி கடந்து வந்த பாதை” நூல், மாட்டுத் தொழுவங்களிலும் காட்டு வேலைகளிலும் அடுக்களை புகைகளுக்குள்ளும் திணறிக் கிடந்த பெண்களை கல்வி என்னும் காற்றை சுவாசிக்க வைப்பதற்கான மகத்தான போராட்ட வரலாறு.  9 அத்தியாயங்களைக் கொண்ட இந்த  வரலாற்றுச் சிறப்புமிக்க நூல், ராஜாராம் மோகன் ராய் தொடங்கி சாவித்திரிபாய் பூலே, பாத்திமா ஷேக், பண்டித ரமாபாய்,  தந்தை பெரியார், சகோதரி சுபலட்சுமி,  அண்ணல் அம்பேத்கர் வரை பெண்  கல்விக்காக பாடுபட்ட அனைவரையும் பதிவு செய்துள்ளது. கல்லையும் முள்ளை யும் அகற்றி தடைகளை உடைத்து பெண் கல்விக்கான பாதை ஏற்படுத்திய நெடும் பயணத்தில் புறக்கணிக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பையும் முன்னிலைப்படுத்துகிறது.  இந்தியாவில் பெண்களுக்கான பள்ளிகளைத் தோற்றுவித்தவர்களின் வரலாறுகளும், தமிழ்நாட்டில் முதல் பெண்கள் பள்ளிகள் துவக்கப்பட்ட வரலாறும் விரிவாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. கிறிஸ்தவ மிஷனரிகள் தொடங்கிய பள்ளிகளில்தான் முதன்முதலில் பெண்கள் படிக்க அனு மதிக்கப்பட்டார்கள். சாவித்திரிபாய் பூலே யும் அவரது கணவர் ஜோதிராவ் பூலேயும் பூனாவில் பெண்களுக்கான முதல் இந்தியப் பள்ளியைத் தொடங்கியதும், மேரி கார்பெண்டர் ஆசியாவின் முதல் பெண்கள் கல்லூரியைத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கவை.  1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது கல்வியறிவு பெற்றிருந்த பெண்களின் சதவிகிதம் வெறும் 6 மட்டுமே. இந்த நிலையை மாற்றுவதில் அறிவொளி இயக்கம் ஆற்றிய பங்கு மகத்தானது. “வாருங்கள் வாருங்கள் பெண்களே வாருங்கள், படிப்பதற்கு வாருங்கள் பெருமை பெற வாருங்கள்” என்ற அழைப்பு வியக்கத்தக்க மாற்றங் களைக் கொண்டுவந்தது.  குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மஞ்சள் பையில் சட்டையைக் கொண்டுவந்து பேருந்து நிலையக் கழிவறையில் அணிந்துகொண்டு அறிவொளி மையங்களுக்குச் சென்ற வரலாறு மனதைத் தொடுகிறது. அவர்  களுக்காக பொரிகடலை, வெள்ளரிக்காய் போன்றவை வழங்க ப்பட்ட சேவை மனப்பான்மையும் பாராட்டத்தக்கது.  அறிவொளி இயக்கம் புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்கி, செயல்பாடுகள், விளையாட்டு, மகிழ்வு டன் கூடிய கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் வெற்றி யைத் தொடர்ந்து தொடர்கல்வி, வளர்கல்வி, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு போன்ற பல அரசுத் திட்டங்கள் உருவாயின.  “பெண்கள் அடைந்த முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன்” என்ற அம்பேத்கரின் கூற்றும், “நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்” என்ற பெரி யாரின் கருத்தும் இன்றும் பொருத்த மானவை.  பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழ கங்கள் வரை கொண்டு செல்ல வேண்டிய அவசியமான நூல் இது.  இந்தியாவில் பெண் கல்வி கடந்து வந்த பாதை  ஆசிரியர் :  ரமாதேவி ரத்தினசாமி  வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம், சென்னை-600083 விலை: ₹15 தொடர்பு: 7550098666