articles

img

ஒரே வாரத்தில் ஐந்து நோபல்..!

ஒரே வாரத்தில் ஐந்து நோபல்..!

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளியல் ஆகிய ஆறு பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டிலும் இந்த அறிவிப்பு வெளிவந்துவிட்டது. அறிவிப்புகளைத் தொடர்ந்து பாராட்டுகளும் இருக்கும். சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. அமைதிக்கான பரிசைப் பெற்றுள்ள வெனிசுலா எதிர்க்கட்சித்தலைவர் மசாட்டோ, சொந்த நாட்டில் சீர்குலைவு வேலைகளைச் செய்பவர் என்பது அனைவரும் அறிந்தது. பாராட்டுக்குரிய அம்சமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இருந்துள்ளது. ஆறு பரிசுகளை இந்த ஆண்டில் 14 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாவர். மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளில் இவர்கள் பரிசுகளை வென்றிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அறிவிப்புகள் வர வர இந்நாள், முன்னாள் மாணவர்கள் பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு வாரத்தில் ஐந்து பரிசுகள் ஒரு பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்தது வரலாற்றில் முதன்முறையாகும். டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல்கலைக்கழங்களுக்கான நிதியை வெட்டிக் கொண்டிருக்கிறார். அரசு நிதியை வெட்டினால் ஆய்வுப்பணிகள் நின்றுவிடும் என்பதால், டிரம்ப்புக்குப் பெரும் எதிர்ப்பு இருந்தது. இந்த நோபல் பரிசுகள் அவருடைய தலையில் வைத்த குட்டு என்கிறார்கள்.