அமெரிக்காவில் பல மாநிலங்களில் அதிகாரிகளுக்கு கோடீஸ்வரர் தொழி லதிபர் கௌதம் அத்வானியும் அவரது கூட்டாளிகளும் லஞ்சம் கொடுத்தனர் என்ற அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியாவில் ஏஜென்சிகளால் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை என்பது இந்தியா விற்கு என்றென்றும் தலைக்குனிவை ஏற்படுத்தும் மிகவும் வெட்கக்கேடான விஷயம். வெளிநாட்டு நிறுவனங்களுட னான ஊழல் பரிவர்த்தனைகளை தடை செய்யும் அமெரிக்க சட்டங்களை இவ ரும் இவருடைய கூட்டாளிகளும் மீறினர் என்று அமெரிக்க அரசின் வழக்கறி ஞர்கள் தங்கள் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். உள்நாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா தனது சொந்த விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும்.
இடித்த புளி போல மோடி அரசு
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இயங்கி வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஏற்கனவே இவர்கள் குறித்து குற்றச்சாட்டுகளை வெளியிட்ட நிலையில் அதானி குடும்பத்தின் முறை கேடுகள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதில் மோடி அரசிற்கு உள்ள தயக்கம் வெளியானது.
அதானி நலனேபாஜக நலன்!
தன்னுடைய அரசியல் நலனை திரு அதானியின் பெரு நிறுவன நலன்களில் இருந்து பிரிக்க முடியாதது போன்ற ஒரு பாதுகாப்பை பாஜக அதற்கு அளித்த வருகிறது. அதானி நிறுவனங்கள் பங்கு விலை நிர்ணயிப்பதில் முறைகேடு, பரி வர்த்தனைகளை மூடிமறைத்தது, முத லீடுகளை திரும்பப் பெறுவது மற்றும், ஆணையத்தின் ஒழுங்குமுறை விதி களை மீறியது ஆகியவை குறித்து விசார ணை நடத்த நாடாளுமன்ற கூட்டு விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவிமடுக்கவில்லை. ஒரு சில அமைப்புகளால் அரைகுறை மனதோடு ஆங்காங்கே நடத்தப்பட்ட விசாரணைகள் எவ்வித பலனையும் தரவில்லை.
துணை போன செபி; கண்டுகொள்ளாத உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றமும் சந்தை கட்டுப் பாட்டாளரான செபியும் அதானி விசார ணையை ஒரு சுயாதீனமான நிறுவனத்தி டம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கும் அளவிற்கு அது தொடர்பான குற்றச்சாட்டுகளில் நம்பகத் தன்மை இல்லை என்று கூறி நிரா கரித்தன.
புயலைக் கிளப்பிய குற்றச்சாட்டு
குற்றம் சாட்டப்பட்ட அதானி கிரீன் மற்றும் அசூர் பவர் குளோபல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சூரிய சக்தியை பெற்றது தொடர்பான வெளிநாட்டு குற்றப் பத்திரிக்கையில் பல மாநில அரசுகள் குறிப்பாக ஆந்திர பிரதேசமும் தற்போது பெயரிடப்பட்டுள்ளன. இது ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளது. லஞ்சமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் தொகை 2029 கோடி ரூபாய்.(265 மில்லியன் டாலர்) இதில் 1750 கோடி ரூபாய் ஆந்திர பிரதேசத்தில் உள்ள “வெளிநாட்டு அதிகாரிக்கு” வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆந்திராவில் ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தமிழக அரசும் அதானி குடும்பத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என மறுத்துள்ளன. (SECI Solar Energy Corporation of India)யுடன் மட்டுமே தங்களுக்கு ஒப்பந்தங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளன. ஆனா லும் விநியோக நிறுவனங்கள் எப்படி ‘உந்துதலை’ பெற்றன என்பது பற்றி பிரதிவாதிகள் மத்தியில் ஓடிய உள்ளார்ந்த செய்திகளை குற்றப்பத்தி ரிக்கை விவரிக்கிறது.
அதானி முக்கியமல்ல!
அது குறிப்பிடும் நேரத்தில் மாநில அர சுகளை நடத்தி வந்த பாஜக அல்லாத கட்சிகளை சாடுவதை நிறுத்திவிட்டு அதானி குடும்பத்தின் மீது விசாரணை நடத்துவதில் உள்ள தயக்கத்தை மோடி அரசு விட்டொழிக்க வேண்டும்.
உலகின் மிகப்பெரும் பணக்காரர் களில் ஒருவராக கருதப்படும் அதானியின் அதிர்ஷ்டம் ஒரு செங்குத் தான வீழ்ச்சியை காணலாம். ஏனெனில் அவருடைய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது மட்டுமல்ல அவரது குழுமத்தில் முதலீடு செய்த நாடுகளும் பின் வாங்கலாம். அவருக்கு எதிராக திரும்பலாம். ஒரு தொழிலதிபர் தனது அரசியல் ஆதரவாளர்களால் பாதுகாக்கப் படுகிறார் என்பதையும் மீறி பின்ன டைவை சந்திக்கிறார். இது முக்கிய மல்ல. ஒரு தனிநபரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு தூரம் செல்லும் என்பதுதான் இதில் பளிச்சென்று வெளியாகும் வெட்கக்கேடான அம்சம்.
இந்து தலையங்கம் 23-11-24
தமிழாக்கம்: கடலூர் சுகுமாரன்