articles

img

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வெற்றிக் கட்டாயத்தில் திஸா நாயக்க! -எஸ்.இசட்.ஜெயசிங்

2024 செப்டம்பர் 21 இல், இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவ டைந்த நிலையில், நவம்பர் 14 ஆம் தேதி, 17 வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடை பெற இருக்கிறது.  இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த வருடம் ஆகஸ்ட் வரை உள்ளது. எனினும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி, அனுர குமார திஸாநாயக்க, பதவி ஏற்ற மறு தினமே ஜனாதிபதிக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட, இலங்கை மக்கள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.  மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்சியின்  தலைவரான அனுர குமார திஸாநாயக்க, தனது கட்சி யின் சோஷலிச கொள்கைகளை, செயல் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றிட, தங்களுக்கு நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தால் மட்டுமே முடியும் என்பதே இலங்கை நாடாளுமன்றம் முன்ன தாக கலைக்கப்பட்டதற்கான காரணம்.

இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய முறை

இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்த லானது, இந்திய தேர்தல் முறைகளில் இருந்து முற்றி லும் வேறுபட்ட, ஜனநாயக அம்சங்களையும், விகிதாச் சார முறைகளையும் கொண்டதாகும். விகிதாச்சார தேர்தல் முறையில், அனைத்து பிரிவினரும் பிரதி நிதித்துவம் பெறுவது சிறப்பான ஜனநாயக அம்சமாக பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த 2 சதவீதத்தினர் கூட தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தில் இந்தியா, இலங்கையின் விகிதாச் சார அரசியல் முறைமையை கற்றுக் கொள்ள வேண்டும். பல இன,  மத, மொழி சமூகங்கள் வாழும் இந்திய நாட்டிற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலம், தனி ஒரு கட்சியின் சர்வாதிகார போக்கு தடுக்கப்படும்.

தேர்தல் களத்தில்  அரசியல் கட்சிகள் 

ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் மற்றும் சுயேச்சை  குழுக்கள் என இரு பகுதியினராக போட்டி இடு கின்றனர். நடக்க இருக்கும் 225 இடங்களுக்கு  பெரிதும் சிறிதுமான அரசியல் கட்சிகள் சார்பில் 5464 வேட்பா ளர்களும், 282 சுயேச்சை குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்களும் என மொத்தம் 8821 பேர் போட்டி யிடுகின்றனர். இது இதுவரை இல்லாத அதிக எண்ணிக் கையாகும். வாக்களிக்கப் போகும் 1,71,40,354 வாக்கா ளர்களில் 50 சதவீதத்திற்கு மேல் பெண் வாக்காளர் கள் உள்ளனர். ஆனால் வேட்பாளர்களில் 5 சதவீதத்திற் கும் குறைவான பெண்களே போட்டி இடுகின்றனர் என்பது கவலை அளிக்கும் விடயமாகும். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கையை விட பல மடங்கு எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் இருப்பதையும் காண முடிகி றது. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பல மடங்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உதாரணமாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கொழும்பு தேர்தல் மாவட்டத்தில், 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்த எண்ணிக்கை கொண்ட மொனராகலை தேர்தல் மாவட் டத்தில், நான்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 135 பேர் போட்டியிடுகின்றனர்.   கட்சிகளைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளே நாடாளுமன்றத் தேர்தலிலும் முதன்மையான போட்டியாளர்களாக இருக்கின்றன. அனுர குமார திஸாநாயக்க தலை மையிலான தேசிய மக்கள் சக்தி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன முன்னணி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி ஆகிய நான்கு பிரதான அணிகள் களத்தில் உள்ள போதும், பலமான போட்டி யானது,  அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேம தாச - இருவர் இடையே மட்டுமே இருப்பதாக அரசி யல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்களைத் தவிர நூற்றுக்கணக்கான சிறிய கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன. இவற்றில் வடக்கில், தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், கிழக்கில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிடத் தக்கவையாகும். மற்ற இடதுசாரி கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

ஒதுங்கிக் கொண்ட  ராஜபக்சே குடும்பம்

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 145  இடங்களில் வெற்றி பெற்ற ராஜபக்சேவின் கூட்டணி ஆட்சியிலும், அதன் பின்னரான ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் மிகப்பெரிய ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் தலைவிரித்தாடியது. பொருளாதார நெருக்கடியையும் அதிக அளவில் மக்கள் சந்தித்த னர். இவ்வாறு மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்க ளில் பெரும்பாலானோர் தோல்வி பயத்தில் போட்டி யிட முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமா கும். அதிலும் குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தில் ராஜபக்சே உட்பட அவர் குடும்பத்தைச் சார்ந்த முக்கிய மானவர்கள் தோற்பது உறுதி என்பதை உணர்ந்து போட்டியிட முன்வரவில்லை. இதேபோன்று ஜனாதி பதி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த தோழர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் வட  இலங்கை முதல்வர் விக்னேஸ்வரன் போன்ற வர்களும் போட்டி இடவில்லை என்பது கவனிக்கத் தக்க அம்சமாகும். ராஜபக்சே தலைமையிலான பொது ஜன முன்னணி அனைத்து தேர்தல் மாவட்டங்களி லும் போட்டியிடுகிறது. எனினும் மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதால் இக்கூட்டணி மிகப் பெரும் தோல்வியை சந்திக்கும் என நம்பப்படுகிறது. எனவேதான் ராஜபக்சே குடும்பத்தில் இருந்து அவரது மகன் நாமல் ராஜபக்சே, நேரடிப் போட்டியை தவிர்த்து, தேசியப் பட்டியலில் முதல் வேட்பாளராக தனது பெயரை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சஜித் பிரேமதாசவின் நிலை

முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப் படும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 23.90 சத வீத வாக்குகளைப் பெற்று எதிர்க் கட்சியாக உருவெ டுத்தது. அத் தேர்தலில் மலையகத்தில் இருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் உட்பட, வடகிழக்கு தமிழ் மக்களின் சில அமைப்புகள் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை ஆதரித்தன. அண்மை யில் ஜனாதிபதி தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணித் தலைவர், அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றதன் பின்னர், சஜித் பிரேமதாசவை, இத்தேர்தலிலும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்பது சந்தேகம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில், 7 தேர்தல் மாவட்டங்களில் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றிருந்தது என்பதைப் பார்க்கும் போது, சஜித் பிரேமதாச கூட்டணி நாடாளு மன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்படு கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தலில் தான் போட்டியிடவில்லை என கூறிய போதும்  அவரது புதிய ஜனநாயக முன்னணி அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட முன்வந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் நடை பெற்ற பல்வேறு அரசியல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் பரப்புரைகளில் ஆதா ரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. எனவே ரணில் தலைமையிலான கூட்டணி மக்கள் மத்தியில் அதிக அளவில் ஆதரவு பெறப் போவதில்லை என்று  தெரிய வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் இவரது ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இடங்களிலும் தோற்று, தேசிய அளவில் 2.15 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றி ருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில்  தேசிய மக்கள் சக்தி 

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலை மையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி, மிகப்  பெரும் நம்பிக்கையுடன் வடக்கு, கிழக்கு, மலைய கம் உட்பட 22 தேர்தல் மாவட்டங்களிலும் வேட்பாளர்க ளை நிறுத்தி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஜேவிபியும் அதன் கூட்டணியும் தள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு என அதிக அதிகாரம் இருந்த போதும், நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையும், இணக்கமான அமைச்சரவையும் இருந்தால் மட்டுமே ஜனாதிபதி யால் நாட்டின் நிர்வாகத்தை சுமூகமாக நடத்திச் செல்ல முடியும். எனவே அனுர குமார திஸாநாயக்க அவர்கள் நாடெங்கும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 3.84 சதவீத வாக்குகளுடன் 3 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தமை கவனத்தில் கொள்ள வேண்டும். 225 உறுப்பினர்கள் உள்ள அவையில், இம்முறை அவர்கள் ஆட்சி அமைக்க சாதாரண பெரும்பான்மையான 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 2/3 பெரும்பான்மை பெற வேண்டுமாயின் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அரசியல் அமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரம் குறைத்தல் உட்பட சில மாற்றங்களை அரசியல் சட்டத்தில் செய்ய  வேண்டி இருப்பதாக அனுர குமார திஸாநாயக்க கூறி  வருவதால், மிகப் பெரும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.  இலங்கை மிகச் சிறந்த விகிதாச்சார தேர்தல் முறையை கொண்டிருந்த போதும் கட்சித் தாவல்  தடைச் சட்டம் இல்லாமை பெரும் குறைபாடாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றுக் கட்சி உறுப்பினர்கள், அரசியல் ஆதாயம் கருதி ஆளும் கட்சியை ஆதரிக்கும் போக்கு இலங்கை யில் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்த லில் வெற்றி பெறும் சிறு கட்சிகள், சுயேச்சை உறுப்பி னர்கள், அனுர குமார திஸாநாயக்க அவர்களை ஆத ரிக்கும் மன நிலைக்கு தற்போதே வந்து விட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . இதனை சில அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருவதை யும் காண முடிகிறது. இவ்வாறு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சியை சிறு கட்சிகள் ஆதரிக்கும் போக்கு இலங்கை அரசியலில் இருப்பதால், தேசிய மக்கள் சக்தி உறுதியாக ஆட்சி அமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

தொடரும்