இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்க ளுக்கும் உயிர் வாழ / இயங்க/ செயல்பட/ இனப்பெருக்கம் செய்திட/ அன்றாட பணி களை செய்திட/ சக்திபெற உணவு அத்தியாவசியமான ஒன்று. உணவு இல்லையென்றால் அனைத்து உயிரி னங்களும் அழிந்துவிடும். மனிதனைத் தவிர்த்த அனைத்து உயிர்களும் தனது உணவை தானே தேடிக்கொள்கின்றன. “அப்படியே சாப்பிடுவேன்” எனத்தான் அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. தேனீக்கள் போன்ற சிலவற்றைத் தவிர, அவை அனைத்தும், கிடைக்கும் உணவை பக்குவப்படுத்தியோ மாற்றம் செய்தோ உண்ணுவ தில்லை. ஆனால், மனித இனம் ஒரு சமூகப்பிராணி என்ற அடிப்படையில் தனக்கான உணவுத் தேவைக்கு, தன் சமூகத்தை நம்பி இருக்கின்றது. ஒவ்வொரு மனித னும் ஏதோ ஒரு வகையில் தன் உணவிற்கு இதர மனிதர்க ளை/ உயிரினத்தை நம்பி செயல்பட வேண்டியுள்ளது. மனிதன் இயற்கையாகக் கிடைக்கும் உணவை மட்டும் உண்ணாமல் அதனை மாற்றி, பக்குவப் படுத்தி உருமாற்றம் / சுவை மாற்றம் செய்து தன் உணவை உண்ணுகின்றான். மனிதன் தன் ஆறா வது அறிவை உபயோகித்து செய்யும் செயல்களில் தன் வசதிக்காக செய்யப்படும் வேலைகளில், தன் தனிப் பட்ட லாபத்திற்காக பல்வேறு முறைகேடுகளிலும் ஈடு படுகின்றான். அப்படிப்பட்ட முறைகேடுகளைத் தடுத்து, தன் சக மனித இனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும், தன் இன நல னுக்காக மனிதன் ஏற்படுத்திக்கொண்ட அரசுகளின் கடமையுமாகும். அந்த வகையில் நம் இந்திய அரசும் தன் நாட்டு மக்கள் நல்ல, பாதுகாப்பான உணவை பெற வேண்டுமென்ற அடிப்படையில் பல்வேறு சட்ட திட்டங்களை, விதிகளை வகுத்து செயல்படுத்தி வருகின்றது.
உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணயச் சட்டம்
அந்தந்தப் பகுதியில்/நாட்டில் கிடைத்த உணவை மட்டும் பயன்படுத்தி வந்த மக்கள் அறிவியல் வளர்ச்சி யால்/போக்குவரத்து வசதிகளால் பல பகுதிகளிலி ருந்து / பல நாடுகளிலிருந்து கிடைக்கும் உணவை பயன் படுத்த ஆரம்பித்ததன் விளைவாய் தெரிந்தோ, தெரியா மலோ கேடு விளைவிக்கும் உணவை உண்டு, தன் நாட்டு மக்கள் கேடுகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில், அனைத்து நாடுகளுக்கும் பொது வான சட்டம் தேவைப்பட்டது. இந்தியாவில் அந்த தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் “உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2012”. இந்தியா முழுமைக்கும் 05.08.2011 முதல் மேற்படி சட்டம் எந்த மாநிலத்திற்கும் விதிவிலக்கின்றி அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டம் வருவதற்கு முன்னால் உணவு தொ டர்பாக “உணவு கலப்பட தடைச்சட்டம் 1954” உட்பட பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வந்தன. இதற்குமுன்னர் அமல்படுத்தப்பட்ட உணவு கலப்பட தடைச் சட்டம் உள்ளிட்டவை, குற்றம் கண்ட றிந்து தண்டனை வழங்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது அமல்படுத் தப்பட்டிருக்கும் உணவு பாதுகாப்பு சட்டம் குறைபாடு களை கண்டறிந்து தண்டனை வழங்குவதோடு மட்டு மல்லாமல், பாதுகாப்பான உணவு மக்களுக்கு கிடைப்பது தொடர்பான ஆலோசனைகளை / வழி முறைகளை உருவாக்கித் தருவதாகவும் உள்ளது.
உணவு விற்பனையாளர்கள் தரமான பாது காப்பான உணவை விற்பனை செய்திடவும், உபயோ கிப்பாளர்கள்/ நுகர்வோர் பாதுகாப்பான உணவை பெற்றிடவும், சந்தேகமிருப்பின் உணவு மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உரிய நிவாரணம் பெற்றிடவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள் ளது. உணவு விற்பனை நிலையங்களில் விற்கப்படும் உணவை வாங்கிச் சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், பாதிப்பிற்கு தக்கபடி இழப்பீடு பெறுகின்ற உரிமையை இச்சட்டம் வழங்கியுள்ளது. அந்த இழப் பீட்டை வழங்க வேண்டிய கடமையை அரசுக்கு பணித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம்
இந்தியா முழுமைக்கும் இச் சட்டத்தை அமல் படுத்த இந்திய தேர்தல் ஆணையம் போல தன்னாட்சி பெற்ற “உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணை யம்” ஏற்படுத்தப்பட்டு, அது உணவுத் தொழில் சார்ந் தோர், அறிவியலாளர்கள் மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழுவால் நடத் தப்பட்டு வருகின்றது. மாநில அளவில் இச் சட்டத்தை அமல்படுத்த மாநில ஆணையர், மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பல அலுவலர்கள் பணிசெய்து வருகின்ற னர். தமிழகத்தில் இச்சட்டத்தை அமல்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் “உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை” 05.08.2011-இல் புதிதாக ஏற்படுத்தப்பட்டு, அதில் உணவு பாதுகாப்பிற் கென பிரத்யேகமாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஒருவரை மாநில ஆணையராகக்கொண்டு இத்துறை செயல்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் வட்டாரம், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கான பகுதி யில் தயாரிக்கப்படும், விற்கப்படும் உணவு, அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் விற்கப்படுபவை மற்றும் இலவசமாக விநியோகிக் கப்படும் உணவு உள்ளிட்ட அனைத்தையும் கண்கா ணிக்க வேண்டிய பொறுப்பும், தேவையின்போது, உணவு மாதிரி எடுத்து அனுப்பி, அதில் தவறு நடந்தி ருக்கும் பட்சத்தில், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது மற்றும் உணவு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது போன்றவை இவர்கள் பணிகளாகும்.
அமல்படுத்த தேவையான குறைந்தபட்ச ஏற்பாடுகள்
இச்சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள இவர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டிய குறைந்தபட்ச வசதிகளையாவது ஏற்படுத்தித் தர வேண்டுமென இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக கோருகின்றனர். அந்த கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து, அதை அரசும் ஏற்றுக்கொண்ட போதிலும், இன்னும் அவை செயல்படுத்தப்படவில்லை. உணவு விற்பனையாளர் கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகும் விதத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் அமைந்திட வேண்டும். உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு உதவியாளர் பணியிடம்கூட இல்லை. இதனால் சட்டப்பூர்வமான பணியை மேற்கொள்ளும் பொழுது தடைசெய்யப்பட்ட / காலாவதியான பொருட் களை கைப்பற்றிடும் போது, அதிலும் வாகன வசதி ஏதுமின்றி அவற்றை அலுவலகங்களுக்கு கொண்டு சேர்க்க இவர்கள் படும்பாடு சொல்ல இயலாதது. அதிலும் ஏதாவது ஆபத்து வரும்போது, உரிய இடத்தில் தகவல் சொல்லக்கூட ஆட்கள் இருக்காது. இணையத்தில் அவ்வப்போது ஒரே நாளில் பல முறை கேட்கப்படும் விபரங்களை உரிய அலுவலருக்கு கொண்டு சேர்க்க / புகார்கள் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க இணையதள வசதி, அதற்கான குறைந்தபட்சம் செல்லிடப்பேசி வசதி உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இல்லாமலேயே சொந்த பணத்தை செல வழித்து அரசுப் பணிகளை செய்து வருகின்றனர்.
பணி விதியில் பாதுகாப்பு...
அனைத்திற்கும் மேலாக, சுகாதார ஆய்வாளர்க ளாக / துப்புரவு ஆய்வாளர்களாக பணி செய்தவர்கள், உணவு ஆய்வாளர்களாக பணி செய்து, இப்புதிய சட்டத்தின்படி மட்டுமே கடந்த 05.08.2011-ல் உணவு பாதுகாப்பு அலுவலர்களாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு, சட்ட விதிகள்படி நியமனம் செய்யப் பட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இவர்கள், அதற்குரிய பணிகளை சட்டச் சிக்கல்கள் இல்லாமல் பணியாற்ற, உணவு பாதுகாப்பு அலுவலர்க ளுக்கான அரசுப் பணிவிதி உருவாக்கப்பட்டபோது, ஏற்கனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியை பத்தாண்டுகளுக்கு மேலாக செய்துவரும் இவர்க ளுக்கு, அன்றைய அரசின் ஏதோவொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால், பணி விதியில் பாதுகாப்பு ( SAVING CLAUSE ) வழங்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணி யன் கொரோனா தடுப்புப் பணிகளில் தொடர்ந்து இரவு பகல் பாராமல் உழைத்து வருவதால், அவரின் நேரடி கவனத்திற்கு இந்த பணி பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து கொண்டுசெல்லப்படவில்லை.
ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, அமைச்சரை சந்தித்து, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி விதியில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நேரில் சந்தித்து மனுவளித்து பேசினார். அமைச்சரும் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படும் பொது சுகாதாரத் துறையில் மருத்துவ மனைப் பணியாளராக சேரும் ஒருவர், சுகாதார ஆய்வா ளர் பயிற்சி பெற்று, சுகாதார ஆய்வாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பதவி உயர்வுகளை பெற்றிட வாய்ப்பு உள்ளது. அதே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உணவுப் பாது காப்புத் துறையில், தற்போது உணவுப் பாதுகாப்பு அலு வலர்களாக செயல்பட்டு வருபவர்களுக்கு மட்டும் எந்தவொரு பதவி உயர்வு வாய்ப்பும் இல்லை என்பது வேதனையானது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், துறையின் உயர் அலுவலர்களும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பிரச்சனைகளை கருணை யுடன் அணுகி அவர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்பும் குறைந்த பட்சம் தற்காலிக அடிப்படையிலா வது ஒரு உதவியாளர் மற்றும் குறைந்தபட்ச கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தி இவர்கள் பணியில் உள்ள நிச்சயமற்ற நிலைமையை போக்குவார்கள் என எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆட்சியில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்க ளுக்கு இழைக்கப்பட்ட பல அநீதிகளை களைந்து நடவடிக்கை எடுத்து வரும், தமிழ்நாடு முதலமைச்சர் வழியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து உணவுப் பாது காப்பு அலுவலர்கள் பணிப் பாதுகாப்பு அச்சத்தை போக்கி விடியல் தருவார் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கட்டுரையாளர் : மாநில பொதுச்செயலாளர்,
தமிழ் மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம்