2007 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய வழக்குகளின் விசாரணை மற்றும் ஆவணங்களை காட்சிப் படுத்திட ஒரு அருங் காட்சியகத்தை உருவாக்கியது. செப் 28. அன்று முதன் முதலில் “Trial of Bhagat singh” என்ற பெயரில் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் விசாரணை வழக்கின் ஆவணங்க ளையும், குறிப்புகளையும் காட்சிப் படுத்தியது.
உந்து சக்தியாக இருந்த பகத்சிங்கின் எழுத்து
பகத்சிங் – ராஜகுரு – சுகதேவ் ஆகியோரின் 75 ஆம் ஆண்டு தியாகிகள் தினத்தன்று பாகிஸ் தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ராணா பகவான் தாஸ், பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் வழக்குகள் சம்மந்தமான 135 ஆவணங்களை லாகூரில் உள்ள பஞ்சாப் ஆவணக் காப்பகத்திலி ருந்ததை சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத் தார். அதன் பிறகே பகத்சிங்கின் அரிய எழுத்துகளும், சிறைக் குறிப்புகளும், கட்டுரைகளும், கடி தங்களும் வெளிச்சத்திற்கு வந்தன. அவ்வாறு கிடைத்த வழக்கு சான்றுப் பொருட்களும், ஆவணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதிலி ருந்தே பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் பிரிட்டிஷ் ஏகாதி பத்திய எதிர்ப்பும், வழக்குகளை அவர்கள் எதிர்கொண்ட விதங்க ளையும், ஒவ்வொருவரின் தனித் தன்மைகளையும் அறிய முடியும்.
சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்பின் அடை யாளமாகவே ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிவலியூஷனரி அசோ சியேஷன்’ அமைப்பு இருந்தது. அதன் முக்கிய பாத்திரமாக பகத் சிங்கின் எழுத்துகளும், போராட்ட மும், தொலைநோக்கு சிந்தனை யும் இருந்தது.
இருபெரும் வழக்குகள்...
பகத்சிங் மற்றும் அவரது தோ ழர்கள் இரு பெரும் வழக்குகளை எதிர்கொண்டனர். ஒன்று, தில்லி யில் உள்ள மத்திய சட்டசபையில், உயிர்களைக் கொல்லாத- வெடி குண்டு வீசிய வழக்கு. மற்றொன்று பிரிட்டிஷ் அதிகாரி சாண்டர்ஸ் கொலை தொடர்புடைய லாகூர் சதி வழக்கு. முன்னதில் பகத்சிங், பி.கே.தத் இருவருக்கும் ஜுன் 12, 1929 அன்று தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. பின்னர் இருவரும் லாகூர் சிறையில் அடைக்கப் பட்டனர். மற்றொரு வழக்கில் 28 பேர் குற்றம்சாட்டப்பட்டு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தாங்கள் வாழ்ந்த சொற்ப காலத்தில் சுதந்திர தாகமும், சிந்த னைத் தெளிவும், புரட்சிகர எண்ண மும் கொண்டிருந்த இளைஞர்க ளின் மரண தண்டனை உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கொண்டு வந்தது.
“உள்ளார்ந்த புரட்சியாளர்”
பகத்சிங், பி.கே.தத் இருவரும் மத்திய சட்டசபையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட வழக்கின் ஆயுள் தண்டனையை எதிர்த்து லாகூர், பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தனர். அதனை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம் பகத்சிங்கை ஒரு “உள் ளார்ந்த புரட்சியாளர்” என்று குறிப்பிட்டு, மேல்முறையீட்டு மனு வையும் தள்ளுபடி செய்தது.
சிறையில் 112 நாள் உண்ணாவிரதம்
பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராக பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் பல அதிர்வலைகளை நீதிமன்றத்திலும், சிறையிலும், ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களின் செயல்பாடுகள் எப் போதும் விவாதிக்கப்படக் கூடிய ஒன்றாகவே இருந்து வந்தது. சிறைக்குள் அரசியல் கைதிக ளுக்கு வழங்க வேண்டிய பிரேத்தி யேகமான உரிமைக்காக போராடி னர்.
லாகூர் சதிவழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நடுவர் ராய் சாஹிப் கிஷன் சந்த், பகத்சிங், சிவ வர்மா, பி.கே.தத், பிஜய்குமார் சின்ஹா, அஜய்கோஷ், பிரேம் தத் ஆகியோருக்கு கைவிலங்கு பூட்ட உத்தரவிட்டபோது, அதை எதிர்த்து கேட்ட அனைவரும் அங்கேயே பிரிட்டிஷ் காவலர்க ளால் கடுமையாக தாக்கப்பட்ட னர். அதில் அஜய்கோஷும், சிவ வர்மாவும் மயக்கமடைந்தனர். சிறையில் இருந்த காலங்களில் 112 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டவர் பகத்சிங். ஐரோப்பிய சிறைகளில் அரசியல் கைதிகளுக்கு வழங்கப் படும் உரிமைகளைப் போல, தாங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த லாகூர் சிறையிலும் வழங்க வேண்டும் என்றும்; அதில் அரசி யல் கைதிகளுக்கு நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்க கொடுப்ப தற்கும்; தரமான உணவு, உடை, சிறப்பு வார்டு மற்றும் தனியான கழிவறை கேட்டும்; கடினமான, மதிப்புக்குறைவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என்பதற்காகவும் இந்த போராட்டம் நடத்தினார். பின்னர் பகத்சிங்கின் தந்தை மற்றும் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டதின் பேரிலும், பிரிட்டிஷ் அரசு கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றியதாலும் உண்ணாவிரதத்தை கைவிட்டார் பகத்சிங். அரசியல் உரிமைக்கா கவும், மனித உரிமைக்காகவும் அனைத்து முனைகளிலும் போராடிக்கொண்டிருந்தார்.
இர்வின் பிரபுவின் அவசரச் சட்டம்
1930 மே 1 அன்று வைஸ்ராய் இர்வின், லாகூர் சதி வழக்கு சம் மந்தமாக ஒரு அவசரச் சட்டத்தை கொண்டுவந்தார். இதற்கு மத்திய சட்டசபையிலோ அல்லது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலோ எவ்வித ஒப்புதலும் பெறவில்லை. அனைத்து சட்டப்பூர்வ உரிமை களும் மறுக்கப்பட்டு, பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதி களை கொண்டு ஒரு விசாரணை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்த அவசரச் சட்டத்தின் உள்ள டக்கம் மிகவும் கொடுமை வாய்ந்தது. குற்றம்சாட்டப்பட்ட வர்கள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகாமலேயே விசாரணை மேற்கொள்ளலாம், மேல்முறை யீடு என்பது வேறொரு உயர்ந்த நீதிமன்றத்திற்கு கிடையாது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசார ணையே இல்லாமல் 180 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்கக் கூடிய, ஜாமீன் பெற வாய்ப்பில்லாத தற்போ தைய மோடி அரசின் உபா சட்டத்தை போன்றே மேற்படி தீர்ப்பாய அவசரச் சட்டமும், அதன் விசாரணையும் கொடு மையானது. 457 சாட்சிகளில் 5 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க பகத்சிங் மற்றும் அவரது தோழர்க ளின் வழக்கறிஞர் அமலோக் ராம் கபூருக்கு தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. விசாரணை முடிந்து இறுதியில் பகத்சிங்-ராஜகுரு-சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 1931 மார்ச் 23 அன்று நிறைவேற்றப் பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்ட போது, பகத்சிங், சுகதேவ்க்கு வயது 23, ராஜகுருவுக்கு வயது 22.
இந்தியாவின் பூரண சுதந்தி ரத்திற்காக போராடிய, நாட்டு மக்கள் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று விரும்பிய இந்தப் புரட்சிகர இளைஞர் கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டனர். ஆனால் அவர்க ளின் லட்சியமும், சிந்தனையும் லட்சக்கணக்கான இளைஞர்க ளின் மனங்களில் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது.
பகத்சிங் துவங்கி ஜுலியஸ் பூசிக் என பலரும் தங்களது சிறை வாழ்க்கையில் அர்த்தமுள்ள பணிகளை விட்டுச் சென்றுள்ள னர். சிறையில் இருக்கும் சம யத்தில் பகத்சிங் விக்டர் ஹியுகோ, டால்ஸ்டாய், தஸ்தாவேஸ்கி- ஆகிய மாபெரும் ஆளுமைகளின் இலக்கியங்களையும்; காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் நூல்களையும் கற்றுக்கொண்டிருந்தார். கடிதம், சிறைகுறிப்புகள், நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற சிறு பிரசுரம், இளம் அரசியல் தொண் டர்களுக்கு என்ற தலைப்பிலான கட்டுரைகளின் வாயிலாக சுதந்திரத்தின் விழுமியங்களை இந்திய இளைஞர்களுக்கு விட்டுச் சென்றுள்ளார் மாவீரன் பகத்சிங்.
-சே.அறிவழகன்
சிபிஐ(எம்) விழுப்புரம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்