அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி களில் அளித்திடும் உறுதிமொழிகளின் நிதித் தாக்கங்கள் குறித்தும், இத்தகைய உறுதிமொழிகளினால் மாநிலங்களின் நிதிநிலை மைக்கோ ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலைமைக் கோ ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் முழு விவ ரங்களுடன் தகவல்கள் அளித்திட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் விரும்புகிறது. இதற் காக, தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தங்கள் சிலவற்றையும் முன்மொழிந்திருக்கிறது. அவற்றின்படி இரு பாகங்கள் கொண்ட முன்மாதிரி வடி வங்கள் (proforma) ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் அளிக்கப்படுகின்றன. அவற்றில் அரசியல் கட்சிகள் தாங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகளும், அவற்றை நிறைவேற்றுவதால் ஏற்படும் நிதித் தாக்கங்கள் குறித்தும் நிரப்பித் தந்திட வேண்டும் என்கிறது.
அசாதாரண, விநோத முன்மொழிவு
இவ்வாறு தேர்தல் ஆணையம் ஓர் அசாதாரண மான மற்றும் விநோதமான முன்மொழிவினைச் செய்தி ருக்கிறது. “தேர்தல் ஆணையம் வாக்குறுதிகளின் இயல்புத்தன்மை குறித்து பற்றற்ற நிலையைக் கடைப் பிடித்திடும் அதே சமயத்தில், இவ்வாறு அளிக்கப் படும் வாக்குறுதிகளை அமல்படுத்துவதனால், உடன டியாகவும் மற்றும் நீண்டகால அடிப்படையிலும் ஏற்ப டும் நிதித் தாக்கங்கள் குறித்து ஓர் ஆரோக்கியமான விவாதம் மேற்கொள்வதற்கு இவை தேவைப்படுவதா கவும், இவை நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் களை நடத்துவதற்கு வசதி செய்து கொடுப்பதற்கு அவசியமாகும்,” என்றும் இதற்காக அது அளித்திருக் கும் காரணத்தில் கூறியிருக்கிறது. இத்தகைய விளக்கத்தையெல்லாம் ஏற்பதற் கில்லை. ஓர் அரசியல்கட்சி, அரசுப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்குவ தற்குத் தீர்மானிக்கிறது என்றால், அத்தகைய வாக்கு றுதியின் தகுதி குறித்து தீர்மானிக்க வேண்டியது தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் மக்களேயாகும். இதற்கு நிதிச் செலவினம் எவ்வளவு ஏற்படும் என்பது குறித்தும், இவ்வாறு சீருடைகள் அளிப்பதால் ஏற்படும் நிதிச் செலவினங்களை எப்படி ஈடுகட்டப் போகி றோம் என்பது குறித்தும் தேர்தலுக்குப்பின் அமைந்தி டும் அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு தேர்தல் ஆணையத் திற்கு என்ன வேலை? இதற்கான அதிகாரம் அதற்கு எங்கே இருக்கிறது?
ஆபத்தான எல்லை நோக்கிய நகர்வு
மேலும் தேர்தல் ஆணையம் அளித்துள்ள முன்மாதிரி படிவத்தின் இரண்டாவது பாகத்தில், சம் பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள்/ஒன்றிய அர சாங்கம், அவற்றினுடைய சமீபத்தில் பட்ஜெட் மதிப் பீடு/திருத்தப்பட்ட மதிப்பீடு அடிப்படையில் சில நிதித் தகவல்களை நிரப்பிட வேண்டும் என்று பணித்திருக்கி றது. அந்த படிவத்தின் வலது பக்கத்தில், அரசியல் கட்சி கள் கடைசி பட்ஜெட் மதிப்பீட்டிற்கும், அல்லது திருத்தப் பட்ட மதிப்பீட்டிற்கும் இடையேயான இடைவெளியை நிரப்பிட எப்படி நிதித் திரட்டப்போகிறீர்கள் என்று காட்ட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது. இத்தகைய வேலை கள் எல்லாம் அரசாங்கத்தின் பட்ஜெட்டுகளை உரு வாக்கும் அனுபவம் மிக்க நிதி வல்லுநர்கள் குழுவால் மட்டுமே செய்ய முடியும். மேலும், தேர்தல் ஆணையமானது, அரசியல் கட்சி கள் தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றுவதற்காக, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங் கள் அல்லது ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலைமை யின் உறுதிப்பாடு குறித்து மதிப்பீடு செய்யத் தன் விழை வினைத் தெரிவித்திருப்பது என்பது, அது மிகவும் ஆபத்தான எல்லையை நோக்கி நகர்ந்துகொண்டி ருக்கிறது என்பதாகும். இதன்மூலம் தேர்தல் ஆணைய மானது நவீன தாராளமயக் கொள்கைகள், நிதிநிலைத் தன்மைகள் தொடர்பாக அளித்திருக்கும் கொள்கை களை (fiscal conservatism and fiscal sustainability) ஏற்றுக்கொண்டிருப்பதுபோலவே தோன்றுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 3 விழுக் காடு அளவு நிதிப் பற்றாக்குறை எனும் வரம்பை (fiscal deficit limit) நிர்ணயித்திருக்கும் ‘நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை’ (‘Fiscal Responsibility and Budget Management Act’) எதிர்த்தே வந்திருக்கிறது. இப்போது தேர்தல் ஆணை யம், நிதி நிலைத்தன்மை தொடர்பாக ஒரு மத்தி யஸ்தராக செயல்பட முன்வந்திருக்கிறதா?
ஆச்சரியமும் அதிர்ச்சியும்
அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் அளித்திடும் நிதி சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளை வெளிப்படுத்திட வேண்டும் என்று கோரி, அதனை சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் அல்லது ஒன்றிய அரசாங்கத்தின் நிதி நிலைமையுடன் பொறுத்திப் பார்க்க விரும்பும் தேர்தல் ஆணையத்தின் தற்போ தைய நடவடிக்கை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அளிக் கிறது. ஏனெனில் இதே தேர்தல் ஆணையம்தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திட்ட உறுதிவாக்குமூலம் ஒன்றில், “தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ மக்களுக்கு “இலவசங்கள்” வழங்கு வது என்பது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு என்றும் அத்தகைய முடிவுகள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நிதிநிலைமைக்கு சாத்திய மானதா, இல்லையா என்றோ, அல்லது அது அம்மாநி லத்தின் பொருளாதார நலத்திற்குத் தீய விளைவுகளை ஏற்படுத்துமா இல்லையா என்றோ, அம்மாநிலத்தின் வாக்காளப் பெருமக்களால்தான் பரிசீலனைக்கு உட் படுத்தப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும்” கூறியிருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையம், “தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திடும் அரசியல் கட்சிகளின் கொள்கைகளையோ அல்லது முடிவுகளையோ தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது” என்றும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பித் திட்டத் தன்னுடைய உறுதிவாக்குமூலத்தில் குறிப் பிட்டிருக்கிறது. “சட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஷரத்துக்களுக்கு அப்பாற்பட்டு இது போன்று நடவடிக்கைகள் எடுத்தால் அது அதிகாரங் களை மீறும் செயலாக அமைந்திடும்,” என்றும் தேர்தல் ஆணையம் தன்னுடைய உறுதிவாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
பிரதமரின் பேச்சுதான் மனமாற்றத்தின் காரணியா?
ஆனால் இவ்வாறெல்லாம் கூறியிருந்த தேர்தல் ஆணையம் ஏன் ஒருசில மாதங்களிலேயே மனம் மாறி இருக்கிறது? பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசாங் கங்களின் “இலவசங்கள்” அளிக்கும் கலாச்சாரம் குறித்து ஜூலை மாதம் விமர்சனம் செய்து, எதிர்க் கட்சியினரைக் குறை கூறியதுதான் தேர்தல் ஆணை யத்தின் மனமாற்றத்திற்கான காரணியா? “உணவு, உரம், மின்சாரம் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்டு வரும் மானியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், நவீன தாராளமயக் கொள்கைகளைத் தூக்கிப்பிடிப் போர் அளித்திடும் விமர்சனங்களேயாகும். இவர்களு டைய பார்வையில் இவ்வாறு “இலவசங்கள்” அளிப்பது அரசு வளங்களை வீணடிக்கும் வேலைகளாம். நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கு பவர்களின் கூற்றுப்படி, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்திட வேண்டுமானால், உழைக்கும் மக்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் பெரும் முத லாளிகள் அமர்த்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
நிலுவையில் இருக்கும் இலவசம் குறித்த வழக்கு
அதனால்தான் தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் “இலவசங்கள்” தொடர்பாக வாக்குறுதிகள் அளிப்பதற்கு எதிராக, பாஜக தலைவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்து, அது விசாரணைக்கு வந்த சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசியல் கட்சிகள் அளித்திடும் தேர்தல் வாக்குறுதிகள் “இலவ சங்களா” இல்லையா என்று வாதிடுவதோ அதனைத் தொடர்ந்து அதன்மீது முடிவு எடுப்பதோ உச்சநீதிமன்றத் தின் வேலை கிடையாது என்று கூறியிருந்தது. கட்சி நிலைப்பாட்டின் சாராம்சம்: இந்தப் பிரச்சனை முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். ஒரு ஜன நாயகத்தில், அரசியல் கட்சிகள் தங்கள் மேடைகளை அமைத்துக்கொள்வதிலும், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை முன்மொழிவதற்கும் சுதந்திரம் உண்டு. அவற்றை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராக ரிப்பதா என்று தீர்மானிப்பது மக்கள்தான். மக்கள் நலத் திட்டங்கள் சம்பந்தமாக மக்களுக்கு அளித்த வாக்குறு திகளை அமல்படுத்திட தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சியின் முன்னுரிமை களாகும். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா இருந்தபோது அவரது தலைமையிலான அமர்வாயம், இது தொடர்பான மனுவின் மீது விசாரணை மேற்கொண்டிருந்தது. அந்த மனுவில் 2013இல் சுப்பிரமணியம் பாலாஜி வழக்கின் மீது இரு நபர் அமர்வாயம், இது தொடர்பாக அளித்திட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தது. நீதியரசர் ரமணா ஓய்வுபெற்ற ஆகஸ்ட் 26 அன்று இந்த வழக்கானது அடுத்து தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நீதியரசரின் தலைமை யில் அமையும் மூவர் அடங்கிய அமர்வாயம் இதன் மீது விசாரணை மேற்கொண்டு தீர்மானித்திடும் என்று கட்டளை பிறப்பித்திருந்தார். எனவே, “இலவசங்கள்” தொடர்பாக அரசியல் கட்சிகள் அளித்திடும் வாக் குறுதிகள் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனை இப்போதும் உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருந்துகொண்டிருக்கிறது.
பிரதமருக்கு வக்காலத்தும் அத்துமீறலும்
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதியில் புதிய வழிகாட்டுதல்களை இணைத்திட அவசரப்படுவது மிகவும் புதிரான ஒன்றாக இருக்கிறது. அது, பல்வேறு மாநில அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நேரடி ரொக்கப் பரிமாற்று முதலானவற்றின் மீது குறி வைத்திருக்கி றதா? பிரதமர், ஒன்றிய அரசின் திட்டங்கள் மட்டுமே உண்மையான நலத் திட்டங்கள் என்றும் அதே சமயத்தில் எதிர்க்கட்சிகளின் தலைமையில் இயங்கும் மாநில அரசாங்கங்கள் மேற்கொள்ளும் நலத் திட்டங்கள் அனைத்தும் “இலவசங்கள்” என முத்திரை குத்தப்பட வேண்டும் என்றும் கருதுகிறார். இப்போது தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை என்பது இவ்வாறு பிரதமர் கூறியிருப்பதற்கு வக் காலத்து வாங்குவது போன்றே தோன்றுகிறது. அரசியல் கட்சிகளால் அளிக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள நிதி சம்பந்தப்பட்ட நிலைமை கள் மீது தேர்தல் ஆணையத்தின் தலையீடு, மக்க ளின் கேந்திரமான பிரச்சனைகள் மீது அக்கறை செலுத்தி, ஜனநாயகரீதியாக நடவடிக்கைகள் மேற் கொள்ள விரும்பும் அரசியல் கட்சிகளின் உரிமைகள் மீது ஓர் ஆழமான அத்துமீறல் நடவடிக்கையாகவே அமைந்திடும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்திட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.
அக்டோபர் 5, 2022,
தமிழில்: ச.வீரமணி