articles

img

உயர் கல்வியில் மால்களும் மசாலாக்களும் - பேரா.பொ.இராஜமாணிக்கம்

“ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்…ஏய  உணர்விக்கும் என்னம்மை…” கம்ப ரின் சரஸ்வதி அந்தாதி.. தினசரி நான் வேலை பார்த்த கல்லுரியின் நுழைவு வாயிலில் சரஸ்வதி சிலைக்குக் கீழ் எழுதப்பட்டு இருக்கும். இதை வாசிக்காமல் போக முடியாது.  இந்த ஆய கலைகள் 64ஐயும் உயர் கல்வியில் கற்பிக்க வேண்டுமென தேசிய கல்விக்கொள்கை -2020 பரிந்துரைக்கிறது. இதற்கு பண்டைய தட்ச ஷீலா, நாலந்தா பல்கலைக் கழகங்களை முன்னுதார ணமாக காட்டுகின்றனர். 64 கலைகளை அலசிப்பார்த் தால் அவை அனைத்தும் பெரும்பாலும் கைத் தொழில் நுட்பங்களாகவே உள்ளன. அம்பு தொடுத்தல், மற்போர் புரிதல் முதல் பூத்தொடுத்தல், குழந்தை வளர்ப்பு வரை என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவை களை உயர்கல்வி என்று ஏற்றுக் கொள்ள பலர் மறுக்கின்றனர். இதே பாணியில் தான் தேசிய கல்விக் கொள்கை 64 கலைகளைக் கற்பிக்கப் பரிந்து ரைக்கிறது.

தேசிய கல்விக்கொள்கை-2020-இன்படி  பயிற்று விக்கும் நிறுவனங்கள் (Teaching only), பயிற்று வித்தல் &ஆராய்ச்சி நிறுவனங்கள் (Less Teaching and Research), ஆராய்ச்சி நிறுவனங்கள் (Research only) என உயர்கல்வி நிறுவனங்கள் மூன்று வகைக ளாகப் பிரிக்கப்படுகின்றன. மேலும் மூன்று வகை நிறுவ னங்களும் பல்துறைப் படிப்பு வழங்குபவையாகவும் ஆராய்ச்சி செய்யக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக யுஜிசி வழிகாட்டும் நெறி முறைகளை வெளியிட்டுள்ளது. 

உயர்கல்வி மால்கள்…

மேற்சொன்ன வழிகாட்டுதல்களை அமல்படுத்த உயர் கல்வி நிறுவனங்கள் பல்துறை படிப்புகள் கொண்ட பல்துறை உயர்கல்வி நிறுவனங்களாக தங்களை தகுதி உயர்த்திக் கொள்ள வேண்டும்.

1.    கல்லூரியாக இருந்தால் உடனடியாக தன்னாட்சி நிறுவனங்களாக மாறவேண்டும்.  இனிமேல் கல்லூரி கள் பல்கலைக்கழகத்தில் இணைப்புக் கல்லூரி யாக இருக்காது. மேலும் இக்கல்லூரிகளே பட்டம்  வழங்கும் நிலைக்கான பல்கலைக்கழக அந்தஸ்து பெற வேண்டும்.  

2.    ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு துறைகள் கொண்டிருக்க வேண்டும். மொழி, இலக்கியம், இசை, தத்துவம், இந்தியவியல், நாட்டியம், கலை, கல்வியியல், கணிதம், புள்ளியியல், அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சமூகவியல், பொரு ளாதாரம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட துறைகள் உருவாக்க வேண்டும்.

3.    மேலும் கலை அறிவியல் படிப்பு மட்டும் கொண்ட கல்வி நிறுவனங்கள் தொழில் நுட்பப் படிப்புகள், மருத்துவம், கால்நடை, விவசாயம், சட்டம், ஆசிரியர் பயிற்சி ஆகிய படிப்புகளையும் துவங்கிக் கொள்ள லாம்.  

4.    தனித்தனிப் படிப்புகள் கொண்ட கல்லூரிகள் அனைத்தும் அருகில் உள்ள பிற கல்லூரிகளுடன் இணைந்து பல்துறை நிறுவனமாக மாறலாம். அதாவது ஒரு கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள ஃபேஷன் டெக்னாலஜி அல்லது ஃபுட் டெக்னாலஜி மட்டும் உள்ள கல்லூரியுடன் இணைந்து ஒரு தொகுப்பு பல்கலைக் கழகமாக (Cluster University) மாறலாம். கர்நாடகா மாநி லத்தில் நூற்றாண்டு பெருமை மிக்க மஹாராணி கலைக் கல்லூரி இதே போன்ற பிற இரண்டு கல்லூரி களுடன் இணைந்து மஹாராணி தொகுப்புப் பல்க லைக் கழகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கென இணையும் நிறுவனங்கள் தங்களுக்குள் பொது வான ஒரு ஒப்பந்தத்துடன் செயல்படலாம்.

5.    தற்போது செயல்பட்டு  வரும் அரசு கலை அறி வியல் பல்கலைக்கழகங்கள் பல்துறை பல்கலைக் கழகங்களாக மாற வேண்டுமென்றால் அருகில் உள்ள அரசு மருத்துவ, விவசாய, சட்ட, பொறியி யல் கல்லூரிகளை உறுப்புக் கல்லூரிகளாக இணைத்து பல்துறை பல்கலைக்கழகங்களாக மாற லாமாம். எடுத்துக்காட்டாக  மதுரை மெடிக்கல் காலேஜ், ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி, மதுரை சட்டக்கல்லூரி ஆகியன மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின்  இணைப்பு கல்லூரிகளாக மாறிவிடும். பட்டம் வழங்குவது மதுரை காமராசர் பல்கலைக்கழகமே.

6.    இதனடிப்படையில் பொறியியல், தொழில்நுட்பம், நிர்வாகவியல் மட்டுமே துறைகளாகக் கொண்ட தனியார் சுயநிதி தன்னாட்சிக் கல்லுரிகள்/ பல் கலைக் கழகங்கள் தற்போது கலை அறிவியல், விவசாயம், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சிக் கல்வி என பல்துறைப் படிப்புகளை துவக்கி விட்டன என்பது எல்லோரும் குறிப்பிடத்தக்கதாகும்.

7.    ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் சுமார் 5000 மாணவர்களைக் கொண்டிருக்கும் பெரு நிறுவனங்களாக இயங்க வேண்டும். எவ்வாறு சிறு சிறு வியாபார நிறுவனங்களை விழுங்கி பெரிய பெரிய மால்கள் உருவானது போல் வலிமையான  உயர்கல்வி நிறுவனங்கள் ஆங்காங்கே சுயமாக இயங்கி வந்த சிறு சிறு கல்வி நிறுவனங்களை விழுங்கி உயர்கல்வி மால்களாக மாற உள்ளன.

மசாலாப் படிப்புகள்…

1. பி ஏ, பிஎஸ்ஸி, பி ஈ, எம் பி பி எஸ் என்ற பெயர் கொண்ட ஒவ்வொரு பட்டப்படிப்பும் இனி பி எல் ஏ-பேச்சலர் ஆஃப் லிபெரல் ஆர்ட்ஸ் ( BLA-Bachelor of Liberal Arts) என்ற பொதுப் பெயரும் அடைப்புகளில் படிப்பின் பெயர் கொடுக்கப்பட்டி ருக்கும்.  துவக்க காலத்தில் நான்கு வருட ஹானர்ஸ் படிப்பு இப்படித் தான் இருந்தது.

2. இன்று வரை இருக்கும் மூன்று வருடப்பட்டப்படிப்பு, நான்கு வருட பட்டப் படிப்புகளாக மாற்றப் பட உள்ளன. மேலும் எந்த வருடத்திலும் விலகிக் கொள்ளலாம்; முதல் வருடத்தில் விலகினால் சான்றிதழும் இரண்டாம் வருடத்தில் விலகினால் டிப்ளமோவும், மூன்றாம் வருடத்தில் சாதாப் பட்டமும், நான்காம் வருடத்தில் ஹானர்ஸ் பட்ட மும் பெறுவார்கள் என்கிறது.

3. மேலும் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப் படிப்பு கள் பயிலலாம் என்றும் இரண்டையும் முழு நேரப் படிப்புகளாகப் படிக்கும் வகையில் கல்வி நிறுவனங் கள் ஏற்பாடு கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது வரலாறு படிக்கும் மாணவன் வேறு துறைப் படிப்புப் படிக்கலாம்.  

4. மேலும் ஆன் லைன் மூலமும் கல்வி பெற்று பல மதிப்பெண் புள்ளிகளுடனும்  நிபுணத்துவத்துடன் வெளி வரலாமாம். மொத்தத்தில்  ஒரு உயர்கல்விப் படிப்பை முழுமை யாகப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் இனி பல வகைப்  படிப்புகளைப் படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு மசாலாப் படிப்புகளால் உருப்படியான திறன் பெறாமல் வெளிவரப் போகிறார்கள். 

எதிர்வரும் பிரச்சனைகள்

1. 2035க்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தன்னாட்சி பெற்ற பட்டம் வழங்கும் கல்வி நிறுவ னங்களாக மாற வேண்டும் என பணித்துள்ளது. இந் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 3000 மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது.

2. இதனால் அருகருகே இருந்த சிறு சிறு கல்லூரி கள் எல்லாம் மூடப்பட்டு பெரும் கல்வி நிறுவனங்க ளில் ஐக்கியமாகும் அபாயம் உள்ளது. சிறிய கல்லூரிகளின் துறைகள்  பெரும் நிறுவனங்களுக்கு கை மாற்றப்படும். இதனால் கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.

 3. ஒரு கல்வி நிறுவனம் புதிய துறைகளைக் கொண்டு வரும் போது அது சுய நிதித் துறைகளாக மட்டுமே இருக்க முடியும். அப்போது மாணவர்கள் கட்டணம் கட்டாமல் புதிய படிப்புகளைப் படிக்க முடியாது.

4. பல படிப்புகள் ஒரு மாணவன் படிக்கலாம் என்றா லும் ஒவ்வொரு படிப்புப் படிப்பதற்கும் கல்வித் தகுதி வேறுபடும். கலைப் படிப்புப் படிக்கும் மாண வன் நிச்சயமாக தொழில்நுட்பப் படிப்புகள் படிக்க முடியாது. டிப்ளமோ படிப்புக் கூடப் படிக்க முடியாது.  

5. 21ஆம் நூற்றாண்டு என்பது நிபுணத்துவம்மிக்க செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற நவீனப் படிப்புகள் அடிப்படையில் முன்னேறிக் கொண்டிருக்கும் போது சுமார் 2000 வருடத்திற்கு  முந்தைய தட்சசீலா, நாளந்தா போன்ற பல் கலைக்கழகங்களை முன்னுதாரணம் காட்டி   பல் துறைப் படிப்புகளை திணிப்பதினால் எந்தப் படிப்பிலும் முழுத் திறன் பெறாமல் அறைகுறைத் திறனுடன் மாணவர்கள் வெளியேறும் வாய்ப்புள் ளது. Jack of all trades but Master of none  என்ற பழமொழி தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும்! கட்டுரையாளர் :

மேனாள் பொதுச் செயலாளர்,  அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு. 

;