articles

img

ஆர்எஸ்எஸ் மதவெறி அரசியலும் உடந்தையான பேஸ்புக்கும்! - ஜி.வீரமணி

 “முகநூல் சமூக ஊடகம் தனது லாபத்துக்காக வெறுப்பு/வன்முறை/பயம் தோற்றுவிக்கும் இந்துத்துவா அரசியலை ஆதரித்து வந்துள்ளது என்பது மிக தெளிவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. மனிதத்தன்மைக்கு விரோதமான முற்றிலும் பொய்கள் நிரம்பிய பதிவுகள் சுற்றுக்கு விடப்பட்டன. இதனை தடுக்காததன் மூலம் மோடி அரசும் இதற்கு உடந்தை!

சில ஆண்டுகளாகவே ஃபேஸ்புக் செயலி பயனா ளர்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்று  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனா ளர்களின் தகவல்களை திருடியது அம்பலமானது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் தகவல்களை வழங்கியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிந்துதான் தகவல்களை திருடப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடை பெற்றுள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்பு அர சியல் குறித்த பதிவுகளை தடுப்பதற்கு ஃபேஸ்புக் நிர்வா கம் எதுவும் செய்யவில்லை எனவும் நியாயம், நீதியை விட இலாபமே முக்கியம் என முகநூல் நிர்வாகம் செயல்பட்டது எனவும் அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி அமெரிக்க செனட் சபை குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார். 

குற்றஞ்சாட்ட என்ன காரணம் - நடந்தது என்ன ?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் செயலிகள் குழந்தைகளை பாதிக்கிறது. பிரிவினை யை உண்டாக்குகிறது மற்றும் ஜனநாயகத்தை பல வீனப்படுத்துகிறது என ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணி யாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினரிடம் கூறியுள்ளார். 37 வயதான பிரான்சிஸ் ஹவ்கென் முன்பு பேஸ்புக் நிறுவனத்தில் ப்ராடக்ட் மேனேஜராக பணியாற்றியவர். அமெரிக்கா வின் கேபிடல் கில் கட்டடத்தில் நாடாளுமன்ற குழு விசாரணைக்கு ஆஜரான அவர், பேஸ்புக்கை மிக கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், சமீபத்தில் வெளியான செய்திகள் அனைத்துமே பேஸ்புக் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளன என எதிர் வினையாற்றிருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்.  இந்தச் சூழலில் மார்க் சக்கர்பெர்க் தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், பிரான்சஸ்  கூறும் பல விசயங்கள் அர்த்தமற்றதாக உள்ளன என கூறியுள்ளார்.

மேலும் பேஸ்புக் தளத்தில் மற்றவர்களை பாதிக்கும் பதிவுகளை எதிர்கொள்ள என்ன மாதிரி யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என வெளிப்படைத் தன்மையை நிறுவுவதற்கும் இது போன்ற முக்கிய பிரச்சனைகளை புரிந்து கொள்வ தற்கும் அந்தத் துறையிலேயே முன் மாதிரியான ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக வும் மார்க் சக்கர்பெர்க் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் பாதுகாப்பு நலன் மற்றும் மனநலன் போன்ற விசயங்களை குறித்து அதிகம் அக்கறை கொள்கி றோம் என குறிப்பிட்டுள்ள மார்க், அந்த கடிதத்தை தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், எங்களது பணிகள் மற்றும் எண்ணத்தை தவறா கப் பிரதிபலிக்கும் விசயங்கள், ஊடகங்களில் செய்தியா வதை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.   சுமார் 220 கோடி  மாதாந்திர ஆக்டிவ் பயனர்களு டன் உலகின் மிக பிரபலமான சமூக வலைத்தளமாக உள்ளது பேஸ்புக். ஆனால் பேஸ்புக் பயனர்களின் தனியுரிமைகளை பாதுகாப்பது தொடங்கி, போ லிச்செய்திகள் பரவுவது தடுக்க போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பது வரை பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பிரான்சிஸ் ஹாகின் தான் பல பேஸ்புக் தொடர்பான உள்நிறுவன ஆவணங்களை வால்ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு கடந்த சில வாரங்களில் பகிர்ந்ததாக சி.பி.எஸ் தொலைக்காட்சியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று  கூறினார். அந்த ஆவணங்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் நடத்திய ஆய்வில், அந்த செயலியால் பெண்களின் மனநலம் பாதிக்கப்படும் என்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக வால் ஸ்டீரிட் ஜர்னல் செய்தி வெளியிட்டது.  பேஸ்புக் நிறுவன தலைமைக்கு  பேஸ்புக், இன்ஸ்டா கிராம் போன்ற தளங்களை எப்படி பாதுகாப்பான தாக்க முடியும் என அறிந்திருந்தும் அதைச் செய்ய வில்லை. காரணம் அந்த நிறுவனம் மக்களை விட தனது பிரம்மாண்ட லாபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது என தனது சாட்சியத்தில் கூறினார் பிரான்சஸ் ஹாகின்.

மேலும் மார்க் சக்கர்பெர்க் பல விசயங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவரை விமர்சித்தார் பிரான்சிஸ். மேலும் இப்போதைக்கு மார்க் சர்க்கர்பெர்க்கை கூப்பிட்டு கேள்வி கேட்கும் அளவிற்கு அந்த நிறுவனத்தில் யாரும் இல்லை என  கூறியுள்ளார். உலகெங்கிலும் உள்ள பயனர்களை பாதித்த பேஸ்புக் சேவை தடையை பிரான்சிஸ் பாராட்டினார். பேஸ்புக் ஏன் தடைப்பட்டது என எனக்கு தெரியவில்லை; ஆனால், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பேஸ்புக் பிளவுபடுத்தலை ஆழப்படுத்தவும் ஜனநாயகத்தை சீர்குலைக்கவும் இளம்பெண்கள் மற்றும் பெண்கள் தங்களது உடலை பற்றி மோசமான தாக உணரவும் பயன்படுத்தவில்லை என்பது எனக்கு தெரியும் என்றார். அப்போது அமெரிக்க காங்கிரஸ் மேற்பார்வையில் ஜெனட்டர்களுக்கு அவர் அளித்த பதிலில், “நாம் இப்போது செயல்பட வேண்டும்” என கூறினார்.

மார்க்  சக்கர் பெர்க்  கடிதம்!

சக்கர்பெர்க் தனது கடிதத்தில், இன்ஸ்டாகிராம் ஆராய்ச்சி தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல இளைஞர்கள் அந்த தளத்தை பயன்படுத்துவ தில் நேர்மறையான அனுபவங்களை கொண்டிருந்த தாகவும் கூறினார். மேலும், நாங்கள் கட்டமைக்கும் அனைத்தும் பாதுகாப்பானது மற்றும் குழந்தைகளுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்பதே எனக்கு மிகவும் முக்கியம் என கூறினார் மார்க் சக்கர்பெர்க். திங்கட்கிழமையன்று பேஸ்புக் நிறுவனத்தின் சேவை செயலிழந்த போது எத்தனை பேர் போட்டி சேவைக்கு மாறினார்கள் அல்லது எவ்வளவு பணத்தை இழந்தோம் என்பது முக்கியமல்ல. எங்களது சேவையை நம்பியிருக்கும் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், தங்களது வணிகங்களை நடத்துவதற்கும் அல்லது தங்களது சமூகத்திற்கு ஆதரவு அளிப்போருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பது தான் முக்கியம் என கூறினார். 

செவ்வாயன்று குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஜெனட்டர் இருவரும் இந்த நிறுவனத்தில் மாற்றம் தேவை என்கிற விவகாரத்தில் ஒன்றுபட்டனர். இன்று பேஸ்புக்கால் ஏற்படுத்தப்பட்ட சுயநலன் மற்றும் சுயமதிப்புக்கான சேதம் ஒரு தலைமுறையையே பாதிக்கும் என ஜனநாயக கட்சியின் ஜெனட்டர் ரிச்சர்ட் புளுமென்டல் கூறினார். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது பெரிய உண்மையை எதிர்கொள்கிறது என்று அவர் கூறினார்.  குடியரசு கட்சியை சார்ந்த டான்ஸ் அலிபன், குழந்தைகள் மீது பேஸ்புக்கின்  தாக்கம் பற்றிய வெளிப்பாடு, வெளிச்சத்தில் நாம் என்ன நினைத்து கொண்டிருந்தோம் என்பதை உலகம் திரும்பிப் பார்த்துக் கேட்கும் என கூறியுள்ளார்.

உண்மையை  ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்!

இந்த விசாரணைக்கு பிறகு பேஸ்புக் தளத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பிரான்சிஸ் ஹவ்கென் சாட்சியம் அளித்த பல பிரச்ச னைகளின் குணாதிசயத்துடன் உடன்படவில்லை என பேஸ்புக் கூறியது. ஆனால் இணையத்திற்கான நிலை யான  விதிகளை உருவாக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது என்பதை அது ஒப்புக்கொண்டது. இணையத்திற்கான விதிகள் புதுப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சட்டமன்ற உறுப்பினர் கள் எடுக்க வேண்டிய சமூக முடிவுகளை தொழிற் துறையிடம் எதிர்பார்ப்பதற்குப் பதிலாக காங்கிரஸ் செயல்பட வேண்டிய நேரம் இது என அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

மோடி அரசும் உடந்தை!

இந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் தான். இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்பு அரசியல் குறித்த பதிவுகளை தடுப்பதற்கு முகநூல் நிர்வாகம் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முகநூல் சமூக ஊடகம் தனது லாபத்துக்காக வெறுப்பு/வன்முறை/பயம் தோற்றுவிக்கும் இந்துத்துவா அரசியலை ஆதரித்து வந்துள்ளது என்பது மிக தெளி வாக நிலைநாட்டப்பட்டுள்ளது. மனிதத்தன்மைக்கு விரோதமான முற்றிலும் பொய்கள் நிரம்பிய பதிவுகள் சுற்றுக்கு விடப்பட்டன. இதனை தடுக்காததன் மூலம் மோடி அரசும் இதற்கு உடந்தை! 

கட்டுரையாளர்: சிபிஎம் டிஜிட்டல் கிளை உறுப்பினர்
 

;