articles

img

“சமத்துவத்திற்கான அரசியலில் பெண்கள் அணிவகுக்க வேண்டும் ”

“சமத்துவத்திற்கான அரசியலில் பெண்கள் அணிவகுக்க வேண்டும் ”

குழித்துறை, செப். 26 - குழித்துறையில் நடைபெற்ற அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள், பெண்கள் சமத்துவ கொள்கையின் பின்னால் அணிவகுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.  அகில இந்திய தலைவர் பி.கே.ஸ்ரீமதி பேசுகையில், மணிப்பூர், ஜம்மு -காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநி லங்களில் மாதர் சங்கம் வீறுகொண்டு எழுந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.  வன்முறைகளால் சீரழிக்கப்பட்ட மணிப்பூரில் 120 பெண் பிரதிநிதிகளும், ஜம்மு - காஷ்மீரில் 80 பிரதிநிதிகளும், ராஜஸ்தான் பிக்கானிரில் 150 பெண் களும் மாநில மாநாடுகளில் பங்கேற்ற தாக தெரிவித்தார்.  ஜி-20 நாடுகளில் பெண்களுக்கு எதி ரான தாக்குதலில் இந்தியா மிக மோச மான நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசமைப்புச் சாசனம் நடை முறைக்கு வந்து 76 ஆண்டுகள் கழிந்தும் பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வில்லை என்றார். 1981 முதல் சமவாய்ப்புக்காக போராடி வரும் அமைப்பின் நம்பிக்கை யை பேரணியில் அணிவகுத்த சகோ தரிகள் ஏற்படுத்தியிருப்பதாக பாராட்டி னார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பேசுகையில், முற்போக்கு அர சியலையும் உழைப்பாளி மகளிருக்கான அரசியலையும் உயர்த்திப்பிடிக்கும் கேரள முதல்வரை மாநாட்டுக்கு அழைத்ததாக தெரிவித்தார். தமிழக மும் கேரளமும் சமூக சீர்திருத்தத்தை கடைப்பிடிப்பதாகவும், இடதுசாரி அரசியலின் பகுதியாக சமத்துவ கொள்கை உள்ளதாகவும் கூறினார்.  அரசியல் கட்சித் தலைமைகள் தங்கள் உறுப்பினர்களுக்கு வரதட்ச ணை வாங்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும்; இதன் மூலம் குடும்ப வன் முறையைத் தடுக்க முடியும் என்றார். போதைப்பழக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை களுக்குக் காரணமாக உள்ளதாகவும், அரசியல் கட்சிகள் இதற்கு எதிராக நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.  சகோதரி ரிதன்யா மரணம் குறித்து விமர்சகர்களுக்கு பதிலளித்த அவர், மாதர் சங்கம் ரிதன்யாவின் வீட்டிலேயே நின்று வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக குறிப்பிட்டார்.  மோடி-அமித் ஷா அரசாங்கம் பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற் கூடமாக செயல்படுவதாக விமர்சித்த அவர், அவர்கள் பின்பற்றும் இந்துத்து வாவில் மதவெறி, ஆணாதிக்கம், சாதிய பாகுபாடு ஆகிய மூன்று கூறுகள் பெண்களுக்கும் உழைப்பாளி மக்களுக்கும் எதிரானது என்றார்.