மிக உயரமான ஊசியிலை மரம் திபெத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 335 அடி உயரமும் 9.2 அடி சுற்றளவும் கொண்ட இது உலகின் இரண் டாவது உயரமானதும் ஆசியாவின் மிக உயர்ந்த மரமுமாகும். நிங்க்ச்சி எனும் இந்த இடத்தில் இதுபோல் பல உயரமான பெரும் மரங்கள் காணப்படுகின்றன. இவைகளுக்கு சரியான மண்ணும் கால நிலையும் தேவைப்படுவதுடன் காற்று,நெருப்பு,மின்னல் மற்றும் மனித குறுக்கீடுகள் இல்லாத பாதுகாப்பான சூழல் தேவைப்படும். ஆகவே புவியில் இது போன்ற இடங்கள் அரிதாக உள்ளனவாம். அமெரிக்காவில் காணப்படும் ஒருவகை ஊசியிலை மரங்கள் மெதுவாக வளர்ந்து 600 ஆண்டுகள் வரை வாழுமாம். இந்த வகை முதிர்ச்சியடைந்த மரங்களின் உள்பகுதி மக்காத தன்மையாதலால் வேலிகள், கதவுகள், தரை, பெட்டகங்கள், அலமாரிகள், படகுகள் மற்றும் பலவகைகளை செய்வதற்கு பயன்படுகின்றன.