articles

மக்களை பாதிக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!

அரசாணை எண்.115

தமிழக அரசு, அரசுத்துறைகளில் கிளாஸ் சி மற்றும் டி பிரிவு பணிகளை  முழுமையாக அவுட்சோர்சிங் விடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அரசுத்துறையில் பணியாற்ற வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக் கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு கானல் நீராக  மாறுகிறது. சாதாரண, நடுத்தர  குடும்பத்தில் வளரும் குழந்தை கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தாலே அரசுத்துறையில் இளநிலை உதவியா ளர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறது. இடஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் கேள்விக்குறியாக  மாறுகிறது. 

அரசாணை எண்.139

கிராமப்புற பஞ்சாயத்துகளில் பணி யாற்றும் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் பணிகளை கணக்கில் கொண்டு அவர்களை நிரந்த ரப்படுத்துவதற்கு பதிலாக தனியார் ஒப்பந் ததாரர்களுக்கு தூய்மைப் பணியை ஒப்பந்த முறையில் விடுவதற்கு இந்த அரசாணை வழிவகுக்கிறது. கிராமப்புறத் தில் வேறு எந்தப் பணியும் கிடைக்காத காரணத்தால் தூய்மைப் பணி மூலம் அரசு வேலையில் இணையலாம் என்று காத்தி ருந்த ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு  நிறைவேறாமல் போகிறது.

அரசாணை எண்.152

தமிழகத்தின் மாநகராட்சியிலும், பேரூராட்சியிலும் தூய்மைப் பணி களை தனியார் பெருமுதலாளியிடம் ஒப்ப டைப்பதற்கான  அரசாணை இது.  இதுவும் ஆயிரக்கணக்கான உழைப்பாளி மக்க ளின் உரிமைகளை  பறிக்கின்ற நடவடிக்கை. இந்த பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்நிலை கேள்விக் குறியாக மாறுகிறது.  எனவே தமிழக அரசு,  தமிழக மக்களை பாதிக்கும்  இந்த அர சாணைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென சமூக  பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் சிறப்பு மாநாடு கேட்டுக்கொள்கிறது.