ஜூலை 26 அன்று மூத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் காசாவில் நிலவும் கொடுமையான நிலை குறித்து விளக்கி னார்கள். “காசாவில் இருபது லட்சம் பேருக்கும் மேல் திடுக்கிடும் அளவில் எல்லையற்ற பேரழிவிலும், மர ணத்திலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணப் பணி கள் முகமையின் துணை கமிஷனர் ஜெனரல் டி மியோ தெரிவித்தார். காசாவுக்குள், 6,25,000 குழந்தைகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களது எதிர்காலம் ஆபத்தில் உள்ளது; அங்கு ஹெபடைடிஸ் ஏ மற்றும் பல எண்ணற்ற தவிர்க்கக் கூடிய நோய்கள் பரவியி ருப்பதாகவும், குழந்தைகள் மத்தியில் போலியோ வெடித்துப் பரவுவதற்கு சில காலமே பிடிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
1.86 லட்சம் மரணங்கள்
ஜூலை முதல் வாரத்தில் மூன்று விஞ்ஞானிகள் விடுத்துள்ள ஒரு மருத்துவ அறிக்கையில், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 37,396 நேரடி மரணங்களுக்கு ஈடாக ஒன்றுக்கு நான்கு மறைமுக மரணங்கள் என்று கணக்கிட்டால், தற்போதைய காசா மோதலில் சுமார் 1,86,000 பேர் மறைமுகமாக மரணமடைந்திருக்கக் கூடுமென்று தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜூலை 24 அன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், போர்க்குற்றம் செய்ததிலும், மனித இனத்துக்கு எதிராகக் குற்றங்கள் இழைத்த திலும் ‘நேதன்யாகுவுக்கு பொறுப்பு உள்ளது’ என்று கூறியிருந்தது.
நேதன்யாகுவின் வெறி
இந்தத் தீர்ப்பு அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதி களால் முற்றாகப் புறந்தள்ளப்பட்டு நேதன்யாகு, ஒரு வெற்றி நாயகனைப் போல் வரவேற்கப்பட்டார். நேதன்யாகுவின் மொழி ரத்தத்தை உறையச் செய்வ தாக இருந்தது: “எங்களுக்கு ஆயுதங்களை விரைவா கக் கொடுங்கள், நாங்கள் பணியை விரைவாக முடிப்போம்”. இஸ்ரேல் இராணுவம் முடிக்க வேண்டு மென நேதன்யாகு விரும்பிய அந்தப் ‘பணி’ என்ன? ஜனவரியில், இஸ்ரேல் இராணுவம் ‘இன அழிப்பைச் செய்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம்’ இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் கூறியது. எனவே, ‘பணி’ என்பது பாலஸ்தீன மக்களை முற்றாக இன அழிப்புச் செய்வதுதான். அமெரிக்காவின் அதிக மான ஆயுத, நிதி விநியோகத்தின் மூலம் அதை வேகப்படுத்த விரும்புகிறது என்பதுதான்.
ஆயுதம் குவிக்கும் அமெரிக்கா
அமெரிக்கா போதுமான ஆயுதங்களை அனுப்ப வில்லை என்ற நேதன்யாகுவின் குற்றச்சாட்டுக்கு மாறாக, ஏப்ரலில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு 18 மில்லி யன் டாலர் பெறுமானமுள்ள எஃப்-15 ரக குண்டு வீச்சு விமானங்களையும், காசாவில் குண்டு வீச 500 பவுண்டு எடை கொண்ட சுமார் இரண்டாயிரம் குண்டு களை அனுப்புவதாகவும் கூறியிருந்தது. ஆனால் அப்போதும் நேதன்யாகுவுக்கு அதிகமாக வேண்டி யிருந்தது, இப்போதும் வேண்டியுள்ளது. அவர் ‘பணி யை முடிக்க’ விரும்புகிறார். இந்த ‘இனஅழிப்பு’ வெறிப் பேச்சை அமெரிக்க நிர்வாகம் புனிதப்படுத்து கிறது. அதன் பிரதிநிதிகள் எழுந்து நின்று பாலஸ்தீன மக்கள் படுகொலைக்குக் கைதட்டுகின்றனர்.
அமெ.மக்களின் எதிர்ப்பு
ஆனால், அரசின் அரங்குகளுக்கு வெளியே, பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்கள், நாடாளு மன்றத்துக்கு நேதன்யாகு வந்ததை எதிர்த்துக் கண்டனம் முழங்கினர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனஅழிப்புக்கும், வன்முறைக்கு முழு ஆதரவளிக்கும் அமெரிக்க அரசுக்கும் எதிரான தொடர்ச்சியான கண்டன இயக்கங்களில் பங்கேற்கும் அமெரிக்க இளைஞர் சேனையின் ஒரு பகுதி அவர்கள். தன்னை எதிர்ப்பவர்களை ‘ஈரானின் பயனுள்ள முட்டாள்கள்’ என்று நேதன்யாகு அழைத்தார். தமது சொந்த நாட்டின் ஜனநாயக உரிமையைப் பயன் படுத்திய குடிமக்களின் வெளிநாட்டு விருந்தினர் விடுத்த வினோதமான அறிக்கை அது. அமைதியா கவும், நியாயமாகவும் நடந்த அந்தக் கண்டன எதிர்ப்பைக் கட்டுக்குள் கொண்டு வர மிளகு ஸ்பிரே வையும், அனைத்து வகையான வன்முறைகளையும் ஏவியது அமெரிக்க போலீஸ்.
அமெரிக்காவும் சீனாவும்
போர்க்குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டவரை அமெரிக்க அரசு நிர்வாகம் வரவேற்றபோது; தமது வேறுபாடுகளையும், இஸ்ரேலின் இனஅழிப்பு, காலனி யாதிக்கத்துக்கு எதிராக அரசியல் ஒற்றுமையைக் கட்டுவதை விவாதிப்பதற்காக வந்த பதினான்கு பாலஸ்தீனக் குழுக்களின் பிரதிநிதிகளின் கூட்டத்து க்கு சீனா ஏற்பாடு செய்தது. நேதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு சற்று முன்பு பதினான்கு பாலஸ்தீன அமைப்புகளின் பிரதிநிதிக ளும் பெய்ஜிங்கில் உள்ள அரசு விருந்தினர் இல்லத் தின் முன் ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டி ருந்தனர். அவர்களது ஒப்பந்தமான பெய்ஜிங் பிரகட னம் இனஅழிப்புக்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிராக அவர் களது உறுதிப்பாட்டை முன்னால் கொண்டு சென்றது டன், அவர்களது ஒற்றுமையின்மை இஸ்ரேலுக்கு உதவ மட்டுமே செய்தது என்பதையும் ஒப்புக் கொள்ளச் செய்தது.
ஆஸ்லோ ஒப்பந்தம்
1991இல் சோவியத் யூனியன் வீழ்ந்ததும், தென்னாப் பிரிக்கா, பாலஸ்தீனம் போன்ற பல தேசிய விடுதலை இயக்கங்கள் தமது காலனியாதிக்க ஆட்சியாளர்களுட னான முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர குறிப்பிடத்தக்க பின்வாங்கல்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அப்படித்தான், 1993இலும், 1995இலும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (பிஎல்ஓ) ஆஸ்லோ ஒப்பந்தங்க ளை ஏற்றது. அதில், பாலஸ்தீன விடுதலை இயக்கம், இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்து, கிழக்கு ஜெருச லேம், காசா, மேற்குக் கரையில் பாலஸ்தீனத்தைக் கட்டமைக்கவும் ஒப்புதல் அளித்தது. மார்க்சிய அறிஞர் எட்வர்ட் செய்த், இந்த ஆஸ்லோ ஒப்பந்தங்களை ‘பாலஸ்தீன வெர்சைல்ஸ்’ என்று அழைத்தார்.
அதாவது, 1919இல் முதலாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சைல்ஸ் உடன் படிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் போர் வெடித்தது. அதுபோல, இது ஒரு ‘பாலஸ்தீன வெர்சைல்ஸ்’ என்றார். இந்த மதிப்பீடு அந்த சம யத்தில் மிகவும் கடுமையாகத் தோன்றினாலும், பின்னால் பார்க்கும் போது மிகவும் துல்லியமாக உள்ளது.
ஆஸ்லோ ஒப்பந்தங்களை இஸ்ரேல் தனது முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொண்டு, குறிப் பாக பாலஸ்தீன நிலத்தில் சட்டவிரோதக் குடியிருப்பு களை அமைக்கவும், மூன்று அடுத்தடுத்த நிலப்பகுதி களில் பாலஸ்தீனர்கள் சுதந்திரமாகச் செல்லும் உரி மையை மறுக்கவும் அராஜகமாகப் பயன்படுத்திக் கொண்டது. 1994இல் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தின் (பி.எல்.ஓ.) முன்னணி அமைப்புகள் புதிய அரசுத் திட்டத்தில் பல்வேறு குழுக்களை ஒருங்கிணைக்க பாலஸ்தீன தேசிய அதிகார சபையை உருவாக்கின. ஆனால் ஆஸ்லோ ஒப்பந்தங்களை நிராகரித்த குழுக்கள், இஸ்ரேலின் சார்பிலான ஆக்கிரமிப்பு பகுதிகளை நிர்வகிக்க விரும்பவில்லை.
2006 ஜனவரியில் ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தல்களில் கணிசமான பகுதியை வென்றது. 132 இடங்களில் 74 ஐ வென்ற ஹமாஸ், 2007 ஜூனில் யாசர் அராபத்தின் ஃபதா இயக்கத்துடன் உறவுகளை முறித்துக் கொண்டு ஒரு புதிய, ஆஸ்லோ வுக்குப் பிந்தைய பாலஸ்தீன தேசியத் திட்டத்தை அமைக் கும் முயற்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
2006இல் உருவான ஆவணம்
2006 மே முதல், இஸ்ரேலின் கடுமையான சிறைக ளுக்குள்ளிருந்து ஐந்து முக்கியக் குழுக்களைப் பிரதி நிதித்துவப்படுத்திய ஐந்து பாலஸ்தீன சிறைவாசி கள் ஒரு அறிக்கையை வரைந்தனர்: அப்தல் காலெக் அல் நட்ஷ்(ஹமாஸ்), அப்தல் ரகீம் மலு (பாப்புலர் ஃப்ரண்ட் ஃபார் லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீன்), பாசம் அல் சாதி (இஸ்லாமிக் ஜிகாத்), மார்வான் பர்கௌதி (ஃபதா), முஸ்தபா (டெமாக்ரடிக் ஃப்ரண்ட் ஆஃப் லிபரே ஷன் ஆஃப் பாலஸ்தீன்) ஆகியோர் தான் அவர்கள்.
இந்த ஐந்து குழுக்களும் இரண்டு இடதுசாரி அமைப்புகள், இரண்டு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஒரு பிரதான தேசிய விடுதலை அமைப்பை உள்ளடக்கியிருந்தன. பதினெட்டு அம்சங்கள் கொண்ட இந்த ஆவணம் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை ஒன்றிணைத்து பாலஸ் தீன விடுதலை இயக்கத்தை மேடையாகக் கொண்டு, எதிர்கால அரசின் மையக்கருவாக பாலஸ்தீன அதிகா ரத்தை ஏற்றுக் கொண்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் உரிமையை தக்க வைக்குமாறு கோரியது.
ஜூனில் அனைத்துக் கட்சிகளும் இந்த ஆவ ணத்தின் இரண்டாம் வரைவில் கையெழுத்திட்டன. ஆபரேஷன் சம்மர் ரெயின்ஸ் (2006 ஜூன் முதல் நவம்பர் வரை) என்று அழைக்கப்பட்ட காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போதும், ஒற்று மையை உருவாக்கும் முயற்சிகள் நடந்தாலும், அப்ப டிப்பட்ட ஒற்றுமை சாத்தியப்படவில்லை. பாலஸ்தீ னக் குழுக்களுக்கிடையேயான முரண்பாடுகள் அப்படியே இருந்தன.
இந்த ஒற்றுமையின்மையானது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மேலும் வலுவடையப் போதுமான வாய்ப்பைக் கொடுத்ததுடன், ஒரு மையமான அரசியல் திட்டமில்லாமல் பாலஸ்தீனர்கள் திணறுவதற்கும் வழி வகுத்தது. பாலஸ்தீன அரசியல் குழுக்களை ஒரு தீவிரமான பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வர 2011 மே மற்றும் 2017 அக்டோபரில் கெய்ரோவிலும், 2022 அக்டோபரில் அல்ஜியர்சிலும் செய்யப்பட்ட முயற்சிகள் உட்படப் பல முயற்சிகள் எந்த முன் னேற்றத்தையும் அளிக்கத் தவறின.
சீனாவின் புதிய முயற்சி
இத்தகைய நீண்ட அரசியல் பின்னணியில் தான், கடந்த ஆண்டு முதல் சீன அரசு பல்வேறு பிரதேச அரசுகளுடன் சேர்ந்து பதினான்கு பாலஸ்தீனக் குழுக் களை பெய்ஜிங்குக்கு சமரசப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்க முயன்றது. அந்தக் குழுக்கள்:
1.அராபிய விடுதலை இயக்கம்; 2.அஸ் – சைகா; 3.பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி; 4.ஃபதா; 5.ஹமாஸ்; 6.இஸ்லாமிய ஜிகாத் இயக்கம்; 7.பாலஸ்தீன அராபிய முன்னணி; 8.பாலஸ்தீன ஜனநாயக யூனியன்; 9.பாலஸ்தீன விடுதலை முன்னணி; 10.பாலஸ்தீன தேசிய முன்முயற்சி; 11.பாலஸ்தீன மக்கள் கட்சி; 12.பாலஸ்தீன மக்கள் போராட்ட முன்னணி; 13.பாலஸ்தீன விடுதலைக் கான மக்கள் முன்னணி; 14. பாலஸ்தீன விடு தலைக்கான மக்கள் முன்னணி (பொது கமாண்ட்)
பெய்ஜிங் பிரகடனம், முன்பு உருவான சிறைவாசி கள் ஆவணத்தில் கூறப்பட்ட அம்சங்களை மீண்டும் கூறி, பாலஸ்தீன அரசு உருவாக்கத்துக்கும், ஆக்கிர மிப்புக்கு எதிரான பாலஸ்தீனர்களின் எதிர்ப்புக்கு மரியாதை கொடுக்கவும், இஸ்ரேலுக்கு எதிரான போ ராட்டத்தில் தமது பங்கை அதிகரிக்க பி.எல்.ஓவையும் அதன் நிறுவனங்களையும் வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்தது. உடனடியான போர் நிறுத்தத்துக் கும், கிழக்கு ஜெருசலேமிலும், மேற்குக் கரையிலும் குடியிருப்புகள் கட்டுவதை உடனடியாக நிறுத்தவும் பெய்ஜிங் பிரகடனம் அறைகூவல் விடுத்தாலும், அதன் முக்கியமான கவனம் அரசியல் ஒற்றுமை என்பதாகவே இருந்தது.
சீனா மத்தியஸ்தராக இருந்து மேற்கொண்ட நடவடிக்கை தக்க விளைவுகளை உண்டாக்குமா என்பதையும், இஸ்ரேல் - பாலஸ்தீன பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் அந்தத் திசையில் இது ஒரு முன்னேற்றத்தின் அறிகுறியே ஆகும்.
1995 ஆஸ்லோ ஒப்பந்தத்தின்படி தொடங்கிய ஒன்றுபட்ட பாலஸ்தீனத் திட்டம் வீழ்ச்சியடைந்த நிலை யில், இது ஒரு வாய்ப்புள்ள திருப்புமுனையும் ஆகும். பெய்ஜிங் பிரகடனம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேதன்யாகு ஆற்றிய கொடூரமான உரைக்கு நேரெதி ரானதும் ஆகும்: பின்னது இனஅழிப்பு, ஆபத்தா னது. முந்தையது ஒரு சிக்கலான உலகில் அமை தியைக் கோருவது.
பறவைகள் திரும்பும்
பாலஸ்தீனத்தின் மிக அற்புதமான கவிஞர்களில் ஒருவரான ஃபட்வா டுகன் (1917-2003) ‘பிரளயமும் மரமும்’ என்ற கவிதையை எழுதினார். ஒரு பிரள யத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு மரத்தின் முடிவு அதுவல்ல, அது ஒரு புதிய தொடக்கம்.
பாலஸ்தீன மக்களை இனப் படுகொலை செய்து வரும் யூத இனவெறி பிடித்த
இஸ்ரேலிய அரசை கண்டித்தும்; ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தவும், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும்; இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும்; அணு ஆயுதங்களையும், பேரழிவு ஆயுதங்களையும் பூவுலகில் இருந்து முழுமையாக ஒழித்திட வலியுறுத்தியும் ஹிரோசிமா தினமான ஆகஸ்ட் 6 (இன்று) மாலை சென்னையில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம், சிஐடியு, ஏஐடியுசி மற்றும் வெகுமக்கள் அமைப்புகள் நடத்துகிற - இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிற மாபெரும் ஆர்ப்பாட்டத்தையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. மரம் உயர்ந்தெழும்போது, அதன் கிளைகள்
சூரிய வெளிச்சத்தில்
பச்சையாகவும், புதிதாகவும் செழிக்கும்.
சூரியனின் கீழ்
மரத்தின் சிரிப்பு மொட்டவிழும்
பறவைகள் திரும்பும்.
சந்தேகமின்றி, பறவைகள் திரும்பும்.
பறவைகள் திரும்பும்.
தமிழில் : கி.ரமேஷ்